From aysh@... Sat Dec 15 07:41:42 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 15:41:42 -0000
Received: (qmail 42309 invoked from network); 15 Dec 2001 15:41:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 15:41:42 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 15:41:37 -0000
Received: (qmail 28989 invoked from network); 15 Dec 2001 21:00:53 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.56) by 202.144.76.19 with SMTP; 15 Dec 2001 21:00:53 +0530
To:
Subject: jayakAnthan enRoru mAnudan
Date: Sat, 15 Dec 2001 21:12:15 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-reply-to: <3.0.3.32.20011215173708.0078cd90@...>
Importance: Normal
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13989

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர் ஜெயகாந்தன்.
தமக்குள் கொடுத்தும் பெற்றும் செழுமையடைந்த இந்திய மொழிகளின் குடும்பத்தில், இவர்

எழுத்துக்களுக்குச் சிந்தனையாளர்கள் உயர்வான இடத்தையே அளித்திருக்கிறார்கள்.

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" நாவலுக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து :



வாழ்க்கையின் முழு அர்த்தத்தோடு வாழ்கிற யாரும் 'எனக்கு இதுதான் லட்சியம்;

இது ஒன்றுதான் லட்சியம்' என்று பிரகடனப் படுத்திக் கொள்ள முடியாது.

அவரவர்க்கும் சில கொள்கைகள், சில விருப்பு வெறுப்புக்கள், சில 'கூடும்-கூடாது'கள் என்று

இருக்கின்றன. அதற்கு ஒப்ப வாழ முயல்வதே அவரவர் வாழ்க்கையாய் இருக்கிறது. அதனால் இந்த

வாழ்க்கைகளை லட்சியமற்ற வாழ்க்கை என்று சொல்ல முடியாது.



இன்ன லட்சியத்துக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று எழுதி நெற்றியில் ஒட்டிக்

கொண்டவர்களைத் தவிர எஞ்சிய மக்களெல்லாம் இந்த விதமாய்த்தான் வாழ்கிறார்கள்.

ஆனால் இவர்கள் எல்லாருமே - இன்ன லட்சியத்துக்காக நான் வாழ்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட

லட்சியத்துக்குத் தாலி கட்டிக் கொண்டவர்களும் - அதற்கு மாறான லட்சியத்தில் தங்களைப்

பிணித்துக் கொண்டவர்களை எதிர்ப்பதையும் அழிப்பதையும் ஆக்கிரமிப்பதையும் தங்களுடைய

நடைமுறையாகக் கொண்டிருக்கிறார்கள். அதேமாதிரியாக - சமுதாய, அரசியல்,மத நம்பிக்கை

போன்ற லட்சியங்கள் ஏதுமில்லாத மற்றமக்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தங்கள் வாழ்க்கைத்

துணைகளிடமும் குழந்தைகளிடமும் தங்களுக்கு அடக்கமானவர்களிடமும் அவர்களது சொந்த விருப்பு

வெறுப்புக்களையும் கொள்கைகளையும் 'கூடும் கூடாது'களையும் ஏன், சாதாரண ரசனைகளையும் கூட

அழித்து ஒழிக்கிற ஆக்ரமிப்பாளர்களாக இருப்பதை வாழ்க்கை நெடுகிலும் எல்லாரிடமும் நாம்

காணலாம்.



கடைசியில், லட்சியவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களும் சரி, சாதாரண

மனிதர்களும் சரி, இந்தப் பிறர் விஷயத்தில் தலையிடுவதையே தங்களது நடைமுறை வாழ்க்கையாகக்

கொண்டிருப்பதன் மூலம் தங்களது லட்சியமே இதுதான் என்றாகி விட்டதை உணராதவர்களாகி

விடுகிறார்கள்.



ஆக்ரமிப்பு என்பதும், பலாத்காரம் என்பதும், தலையீடு என்பதும் ஸ்தூலமாக நிகழ்வது மட்டுமல்ல.

ஒருவன் வீட்டில் அத்துமீறிப் புகுவதும், ஒருவன் உடலைத் துன்புறுத்துவதும் மட்டும்தான்ஆக்ரமிப்பு,

பலாத்காரம் என்று புரிந்து கொள்ளுவது மிகவும் ஆரம்ப அறிவே (Elementary Knowledge) ஆகும்.

இந்த அறிவுக்குப் புறம்பான அந்தச் செயல்கள், அதாவது ஒருவனின் வீட்டில் அல்லது நாட்டில்

பிரவேசிக்கிற துராக்கிரகம் அல்லது ஒரு மனிதனை, ஒரு கும்பலை, ஓர் இனத்தைத் தாக்கி அழிக்கிற,

அடக்குகிற, அடிமை கொள்கிற காரியங்கள் மிகவும் கொடூரமானவை, அநாகரிகமானவை என்று

அறிந்திருக்கிறவர்களூம் - (மனுஷ சரித்திரத்தில் இதை அறிந்து கொள்வதற்கேஎவ்வளவோ

காலமாயிற்று - அதற்கு முன்னால் இதுவே ஒரு பெருமையாக இருந்த காலமும் உண்டு) இதனைக்

கொடுமை, பாபம் என்று உபதேசிக்கிறவர்களும் கூட, கருத்து ரீதியாகவும் எண்ணங்களை அழிக்கிற

காரியத்திலும் மிகவும் மூர்த்தண்யமாக ஈடுபடுவதில்தான் அக-வாழ்வின் பிரச்னைகள் எழுகின்றன.




வாழ்க்கை என்பது பெரும்பாலும், ஏன் முழுக்க முழுக்க இந்தக் கொடுமைதான். இந்தக் கொடுமையை

அகற்ற முயலுவதை விட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதுதான் விவேகம். இந்தக்

கொடுமைகளை எதிர்த்து அன்பு மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதோ, இதனை மறுத்து தீவிரமாக

எதிர்த்து நிற்பதோ வாழ்க்கையைத் துறந்து எங்காவது ஏகாந்தம் நாடி ஓடுவதோ நம்முடைய நியாய

உணர்வைக் காட்டுமே தவிர, அவை இந்த நிலைமைக்குத் தீர்வாகா. நம் ஒவ்வொருவரையும்

பொறுத்த தனிவாழ்க்கை எனும் சிறுவட்டத்தில் கூட இவை தீர்வாக மாட்டா.



[Non-text portions of this message have been removed]