From aysh@... Sat Dec 15 09:14:09 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 17:14:09 -0000
Received: (qmail 5213 invoked from network); 15 Dec 2001 17:14:09 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 17:14:09 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 17:14:06 -0000
Received: (qmail 4042 invoked from network); 15 Dec 2001 22:34:09 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.116) by 202.144.76.19 with SMTP; 15 Dec 2001 22:34:09 +0530
To:
Subject: A gentleman named 'Sujatha'
Date: Sat, 15 Dec 2001 22:45:31 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-reply-to:
Importance: Normal
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13990

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத வந்து, அறுபது கடந்தும் இளமை குதித்துப் பொங்கி
உற்சாகமாகக் கரை புரண்டோட எழுதும் திறமை படைத்தவர் 'சுஜாதா' என்ற, 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' என்ற
ரங்கராஜன். சக படைப்பாளிகளின் படைப்புக்களை - அவர்கள் புதிதாக எழுத வந்திருந்தாலும் சரி -
ரசித்துப் பாராட்டி வெளிச்சம் போட்டுக் காட்டும் நயத்தக்க நாகரிகம் இவருக்கே உரியது. சுஜாதாவின்
கட்டுரைகள் அவர் கதைகளை விட சுவாரசியமானவை. எளிய சொற்களில் அநாயாசமாக ஆழ்ந்த சிந்தனைகளை
விசிறிப் போகும் சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' (1980) கட்டுரைத் தொகுப்பிலிருந்து
:

-------------------------------------

தமிழ்த் தாத்தாவின் சிலையை நீக்கிஅங்கு நின்று கொள்ளும் உத்தேசம் எனக்கு இல்லை. ஆராய்ச்சி
செய்யவோ, பி.எச்.டி வாங்கவோ முயற்சி செய்யும் திராணி எனக்கு இல்லை. புறநானூற்றைப் பற்றி நான்
சொன்ன விஷயங்கள் யாவும் என் சொந்த அபிப்பிராயங்களும் சந்தேகங்களுமே. பண்டிதத்தனத்துக்கு
அப்பாற்பட்டு இம்மாதிரி சில கேள்விகள் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத இந்த நிலை கூடத் தமிழின்
தலைவிதிகளில் ஒன்று.

---------------------------------------

அயனஸ்கோவின் ரைனோசரஸ் என்ற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு
பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று
புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள்எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் அபத்தம் அவர்களைப்
பாதிப்பதில்லை. ஓடிய மிருகம் ஆசிய வகையா ஆப்பிரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கி
விடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!

---------------------------------------------

புதுக் கவிதை பற்றிச் சற்றுப் பேசலாம். புதுக் கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம்
பரவி இருக்கிறது. "அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில்குரங்கைச் சின்னமாய்க்
கொடுத்தால் என்ன" என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்துக் கவிதையாகப்பதிப்பித்திருந்தார்கள்.
என்னய்யா விளையாடுகிறீர்களா?

--------------------------------------------

சமீபத்தில் கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு குறுநாவலில் சரளமான பிராந்தியத் தமிழ் உபயோகப் படுத்தப்
பட்டிருந்ததை ரசித்தேன். "தாயோளி" என்கிற வார்த்தை இந்த உண்மையான டயலக்டின் பின்னணியில் அதன்
விபரீத அர்த்தத்தை இழந்து ஒரு சாதாரண அளபெடையாக மாறுகிறது. தத்தம் பிராந்தியத் தமிழை
உன்னிப்பாகக் கேட்டுச் சிறப்பாகக் கையாளக் கூடிய இளைஞர்கள் தற்போது அதிகமாகி இருக்கிறார்கள்.

----------------------------------------------

லா.ச.ராவின் "பாற்கடல்" என்ற கதையைப் படித்துப் பாருங்கள். அதற்கு ஈடான கதைஇதுவரை எழுதப்
படவில்லை.

------------------------------------------------

இந்தத் தடவை கவிஞர்களின் முன்னிரையிலிருந்து தப்பித்து விட்ட முன்றாவது சிறுகதைத் தொகுதியில்
('காலமும் 5 குழந்தைகளும்') இருக்கும் வழி, கடன், புலிக் கலைஞன் போன்ற அற்புதங்களை அசோகமித்திரன்
ஒரே வருஷத்தில் எழுதி இருக்கிறார். பிரமிக்கிறேன்.

------------------------------------------------

மாதர் காதல் மேன்மையானது. இதில் உரிமை, வழிபாடு, பிரிவு, கொடுமை, இன்பம், வியப்பு, கனவு,
மயக்கம், உவப்பு எல்லாம் உண்டு.

இந்த இரண்டு வரிகளை நான் தான் எழுதி இருக்கிறேன். ஆனால் வரிகளில் உபயோகிக்கப் பட்டிருக்கும்
வார்த்தைகள் அத்தனையும் தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப் பட்டவை. வியப்பும் உவப்பும் கலந்த
சமாச்சாரம் இது. தொல்காப்பியம் ஒரு அபாரமான நூல்.

---------------------------------------

வையாபுரிப் பிள்ளையின் சில புத்தகங்களை விரும்பிப் படித்தேன். பிள்ளையவர்கள் நம் பழைய தமிழ் நூல்கள்
காலத்தில் சற்று பிற்பட்டவை என்று சொல்லித் திட்டு வாங்கிக் கொண்டது பிரசித்தம். அப்படி அவர்
சொன்னதற்கு ஆதாரங்களைத் தேடினேன். சிலப்பதிகாரம் சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூல் என்று சொல்வதற்கு
அவர் சொல்லும் காரணங்களில் ஒன்று அவர் தம் விஞ்ஞான முறை அணுகலைக் காட்டுகிறது.

------------------------------------

காரந்தின் "சோமன துடி" என்ற கன்னடப் படம். காரந்த் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பெரும்பாலும்
மௌனங்களாலேயே இந்தச் சிக்கலான கதையைச் சொல்கிறார். வசனங்கள் சிக்கனமாக இருக்கின்றன. -
"கிறிஸ்துவனானால் உனக்கு நிலம் கிடைக்கும். செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போவாய்". படப்பிடிப்பு
தேவைக்கு உட்பட்டு இருக்கிறது. இசை மிக மெலிதாக இருக்கிறது. பிரதேச மொழிகளில் ஒன்றான
கன்னடத்தில் இம்மாதிரியான படம் எடுக்கப்பட்டு அது கமர்ஷியலாகக் கூடச் சுமாராக ஓடி இருக்கிறது. எனக்குத்
துக்கப் பெருமூச்சு வருகிறது.

-----------------------------------------------------




anbudan,
EraMurukan




[Non-text portions of this message have been removed]