From cbose@... Sat Dec 15 09:42:01 2001
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 17:42:01 -0000
Received: (qmail 41170 invoked from network); 15 Dec 2001 17:42:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 17:42:01 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 17:42:00 -0000
Received: from vsnl (unknown [203.199.238.250]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 38B29E775 for ; Sat, 15 Dec 2001 23:15:42 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011215151740.007b88b0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 15 Dec 2001 15:17:40 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] maNakka maNakka
In-Reply-To: <003701c184ba$b3c80c20$a1bd1b42@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13992
திருப்பரங்குன்றம் மல்லிகைப் பூவா? அப்படியா எழுதி இருந்தார். அங்கெல்லாம் மழை நீர் தேங்கிய
குளத்தில் உள்ள குவளை மலர்கள் தாம். ரோசாவும் மல்லிகையும் திருமங்கலத்தில் தான் பயிரிடப்படுகின்றன.
காலையில் எழுந்து நடந்தால் அந்த மணக்கும் வயல்களூடே நடப்பதே நன்றாக இருக்கும். திரும்ப வரும்போது
நான்கணா (1971ல்)விற்கு கை நிறைய பூக்கள் தருவார்கள். வகுப்புத் தோழிகளுக்குத் தர தினந்தோறும்
கொண்டு வருவேன். சில நாட்களில் இலவசமாகவே கிடைப்பதும் உண்டு. அப்போதெல்லாம் அதிகாலை மதுரைக்கு
வரும் ஹிந்து விமானத்தில் ஏற்றப்பட்டு அன்று மாலையே சிங்கப்பூர் தெருக்களில்விற்கப்படும் என்று சொல்வார்கள்.
இப்போது ஹிந்து விமானமும் வருவதில்லை. பூக்கள் சிங்கை செல்கின்றனவா என்றும் தெரியவில்லை. பூக்கள்
பயிரிட்ட இடங்களும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எனக்குக் கூட ஒரு வீடும் இடமும் அங்குதான் உள்ளது.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.
. திருமங்கலம்
>ரோஜாப்பூவும் திருப்பரங்குன்றம் மல்லிகைப்பூவும் மணம் வீசி வண்டி முழுவதும்
>பரிமளம் நிரம்பியிருந்தது. நல்ல பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து
>அரைத்துப் பன்னீர் விட்டுப் பிசைந்த கையரவைச் சந்தனம் ஒரு இலையில்