From ramaninaidu@... Sat Dec 15 11:10:42 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 19:10:42 -0000
Received: (qmail 30038 invoked from network); 15 Dec 2001 19:10:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 19:10:42 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 19:10:42 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.245) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 15 Dec 2001 19:10:37 -0000
Message-ID: <00f801c18538$3a909060$f5eac7cb@ramani>
To: , , ,
Subject: margazhi 1
Date: Sat, 15 Dec 2001 11:04:15 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 13993



இன்று 16.12.2001 மார்கழி முதல் நாள். சென்ற இரண்டு ஆண்டுகளாக திருப்பாவை மற்றும் திருவெம்பாவை
பாடல்களும் பாடல்களுக்கான விளக்கத்தையும் இணையத்துக்காகப் படைக்க இறைவன் திருவுள்ளம்
வைத்திருந்தான். இந்த ஆண்டு நாச்சியார் திருமொழி பாடல்களையும் விளக்கத்தையும் படைக்க இறைவன்
திருவுள்ளம் வைத்திருக்கிறான். சென்ற ஆண்டுகளைப் போலவே இணையத்து அன்பர்கள் இந்த ஆண்டும் நாச்சியார்
பக்தி உள்ளத்தை அனுபவித்து ஆனந்திக்க ரமணி வரவேற்கிறான்.

சென்ற ஆண்டு அனுப்பிய திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும் விளக்கமும் இந்த ஆண்டும் அனுப்ப வேண்டுமா
என்பது தெரியவில்லை. எதற்கும் முதல் நாளைத் தவறவிடக் கூடாது என்பதற்காக முன்பு எழுதிய முன்னுரையும் முதற்
பாடலுக்கான விளக்கத்தையும் அனுப்புகிறேன். திரும்ப அனுப்ப வேண்டியதில்லை என்று கருதினால் நண்பர்கள்
தெரியப்படுத்தவும்.

நாச்சியார் திருமொழி பற்றிய கட்டுரைகள் மூன்று பகுதிகளாக வரவிருக்கின்றன. முதல் பகுதியில்
தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்கில் ஆண்டாள் இலக்கியத்தின் தோற்றமும் இயல்பும் பற்றிய குறிப்புகள்
தந்துள்ளேன். இரண்டாவது பகுதியில் ஆண்டாள் இலக்கியத்தில் நாச்சியார் திருமொழியின் இயல்பும் போக்கும்
பற்றிய ஒரு முன்னுரை தரவுள்ளேன். மூன்றாவது பகுதியில் இருபத்தெட்டு நாட்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து
பாடல்களாக 143 பாடல்களையும் விளக்கத்தையும் தரவுள்ளேன். சென்ற ஆண்டைப் போலவே இந்தக் கட்டுரைகள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவுள்ளன.

கட்டுரை ஒன்று

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆண்டாள் இலக்கியத்தின் தோற்றமும் இயல்பும்

தமிழ் இலக்கிய வரலாறு சங்க இலக்கியங்களோடு தொடங்குகிறது. சங்க இலக்கியங்கள் அகம் புறம்
என இருபாற்பட்டு விளங்குகின்றன. புறப்பாடல்கள் பண்டைத் தமிழர் வாழ்வியல் காட்சிகளை எதார்த்தமாகவும்
மிகைப்படுத்தியும் தரும் நாடகக் காட்சிகளாக விரிகின்றன. அக இலக்கியம் காதலைப் பற்றிப் பேசுகிறது
என்றாலும் உணர்வின் கூறுகளை விலாவாரியாகக் கூறுவதை விட உணர்வின் வழிப்பட்ட செயல்களைப் பற்றி
அதிகம் பேசுகின்றன.

வரைவு கடாதல் பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன் திரும்பி வரும் வழியில் தேர் மணி
ஓசையில் அலமந்து பறந்த வண்டினத்தைக் கண்டு பரிவு கொண்டு அந்த மணிகளின் நாக்குகளை நீக்கிவிடச்
சொன்னதை விவரிக்கும் பாடலை நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்களேன். காதலின் நளினத்தையும்
ஏக்கத்தையும் வைராக்கியத்தையும் கொண்டாடும் பாடல்கள் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் உணர்வுக்
குவியல்களைப் பற்றி அதிகம் பேசும் அகப்பாடல்கள் உணர்வுக் கூறுகளைப் பற்றி அதே அளவுக்குப் பேசுகின்றன
என்று கூற முடியாதுதான்.

ஆங்கில இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கோலரிட்ஜ்தான் முதன் முதலாக உளவியல் கூறுகளை இலக்கியத்
திறனாய்வில் அங்கம் பெறச் செய்ததாகக் கூறுவார்கள். இவரோடு புனை இலக்கியக் காலத்திய எழுத்தாளர்களான
வேர்ட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி ஆகியோர் ஆங்கிலக் கவிதையில் முதல் முதலாக தனி மனிதர்
உணர்வுகள், ஆசைகள், எழுச்சிகள், விரக்தி, கையறு நிலை ஆகியவற்றை உளவியல் பாற்பட்டு விளக்கம் தரக்
கூடிய வகையில் தம் எழுத்தில் கொண்டு வந்தனர் என்பர்.

அப்படி ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக புனை இலக்கியக் காலம் அமைந்த வகையில்
ஆழ்வார்களின் இலக்கியம் உணர்வுக் கூறுகளைத் தம்மகத்தே கொண்டிருந்த முதல் தமிழ் இலக்கிய வகை
சார்ந்தவையாக அமைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. எனில் சங்க காலத்துக்குப் பின் காப்பிய
காலமும் அதற்குப் பின் நீதி நூல்கள் காலமும் அதற்குப் பின் அல்லது அதனோடு அல்லது அதற்குச் சற்று முன்
களப்பிரர் காலமும் இருந்திருக்க அடுத்து வந்த பக்தி இலக்கியக் காலத்தில் குறிப்பாக வைணவ இலக்கியம்
தோன்றி வளர்ந்த காலத்தில் தமிழ் இலக்கியம் இந்த வகையில் ஒரு புதுப்பாதை கண்டதற்கான காரண
காரியங்களை ஆராய்வதை விடுத்து அந்தப் பாதையில் கம்பீர நடை பயின்றதைக் கருத்தில் கொண்டு பொதுவாக
ஆழ்வார் இலக்கியத்தின் இயல்பையும் குறிப்பாக ஆண்டாள் இலக்கியத்தின் இயல்பையும் குறித்து இக்கட்டுரையில்
காணலாம்.

ஆழ்வார்கள் பன்னிருவர். முதல் மூவராகிய பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரின்
பாடல்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தின் விளைவாகப் பிறந்தவை என்பர்.
அவர்களுக்கு மானுட மூலம் கற்பிக்கப்படுவதில்லை. இயல்பான மானுட வாழ்வோ உணர்வுகளோ கூடக்
கற்பிக்கப்படவில்லை.

அவர்களுக்கு அடுத்து வந்த ஆழ்வார்கள் தொடங்கி அனைவருக்கும் மானுட மூலம் கற்பிக்கவில்லை என்றாலும்
மானுட இயல்பு வாழ்வு கற்பிக்கப்பட்டுள்ளது. திருப்பாணாழ்வார், ஆண்டாள் ஆகியோருக்கு மானுட மூலம் இல்லை.
ஆயின் மானுட இயல்பு வாழ்வு இருந்துள்ளது. நம்மாழ்வாருக்கு மானுட மூலம் இருந்தது. ஆனால் மானுட இயல்பு
வாழ்வு இருக்கவில்லை. இதில் ஆண்டாளும் நம்மாழ்வாரும் எதிரிடை இணைமை கொண்டவர் ஆகின்றனர்.
பிறர் இன்ன குடிப் பிறந்து இப்படியான வாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் குருபரம்பரைப் பிரபாவம் சொல்லிப்
போகிறது.

எனவே முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களைக் கழித்துவிட்டுப் பார்க்கும் போது உணர்ந்த உணர்வுகளின் சொல்
வடிவங்களாகப் பிற ஆழ்வார்களின் பாடல்களைப் பார்ப்பது தகும். அதிலும் நம்மாழ்வாரைத் தவிர்த்து
விடலாம் - குரு பரம்பரைப் பிரபாவத்தை அப்படியே ஏற்றுக் கொண்டால். "செத்ததன் வயிற்றில் சிறியது
பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற மதுரகவியாரின் கேள்விக்குப் பதிலாக "அத்தைத் தின்று
அங்கே கிடக்கும்." என்று சொல்லிப் பின் "உயர்வற உயர்நலம் உடையவன்" என்று தொடங்கித்
திருவாய்மொழியை நம்மாழ்வார் அங்கு அப்போதே அருளிச் செய்ததாகக் குரு பரம்பரைப் பிரபாவம் சொல்லிப்
போகிறது. என்னதான் உணர்வுக் கூறுகள் நம்மாழ்வாரின் பாடல்களில் இருந்தாலும் அவை வாழ்ந்து உணர்ந்தவை என்று
சொல்வதை விட வாழ்வோர் வழக்கமாக உணர்வதை ஸ்படிகப்படுத்திக் கூறிய வகையில் அமைந்துள்ளன என்று கூறுதல்
பாரம்பரிய வரலாற்றுக்கு ஏற்புடையதாக அமைகிறது என்று சொல்லலாம். இலக்கியத்
திறனாய்வாளர்கள் இக்கூற்றை ஒப்புக் கொள்வது இல்லை என்பது வேறு விடயம்.

ஆண்டாளின் பாடல்களோ இதற்கு நேர் எதிரிடையானவை. அந்தப் பாடல்களில் வெளிப்படும் ஒவ்வொரு உணர்வும்
அணுஅணுவாக உணர்ந்து பின் கூறப்பட்டவை. இதிலும் இலக்கியத் திறனாய்வாளர்கள் வயதுக்கு மீறிய உணர்வுகள்
என்று குற்றம் காண்பார்கள். சிறுமியாக இருந்து பெரியவளின் காதல் திறனை ஆண்டாள் பேசிப்
போகிறாளா இல்லையா என்ற சிக்கலான கேள்விகளைக் கல்வி கேள்விகளில் சிறந்த இலக்கியத்
திறனாய்வாளர்களுக்கு விட்டு விடுவோம். அப்பாடல்களை மட்டும் அவற்றுக்கான உள்ளடக்கத்துக்காகப் படித்து
அனுபவிக்கும் போது அங்கே துள்ளி விளையாடும் உணர்வுகளைக் காணும் எவரும் ஆண்டாள் இலக்கியத்தின் உளவியல்
பாங்கையும் பெண்மையின் பூரிப்பையும் காணாமல் போக முடிவதில்லை. எனவே ஆண்டாள் இலக்கியத்தில்
சொல்லிப் போயிருக்கும் உணர்வுப் பாங்குகளை வாழ்ந்து உணர்ந்தவற்றின் விளக்கமாகக் கொண்டு பார்த்தல் தகும்
என்று கொள்வோம்.

திருப்பாவையின் முப்பது பாடல்களும் நாச்சியார் திருமொழியின் நூற்று நாற்பத்து மூன்று பாடல்களும்
ஆண்டாள் இலக்கியமாகின்றன. இவருக்கு முன்னரும் பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் பாற்பட்ட பாடல்கள்
பாடப்பட்டுள்ளன என்றாலும் இவருடைய பாடல்களுக்கும் பிற அகப்பொருள் பாற்பட்ட பக்தி இலக்கியப்
பாடல்களுக்கும் அடிப்படை வேறுபாடுகள் பல உண்டு. அவற்றின் விவரங்களை பின்னர் காண்போம். இப்போது
சொல்லத் தகுந்தது கீழ்க்காணும் இவ்வளவே.

திருப்பாவையின் முப்பது பாடல்களும் ஒரு குறிப்பிட்ட நோன்புக்கென எழுதப்பட்டவை. குழுவினராக பக்தி
செலுத்தும் பாங்கும் அப்போது எழும் உணர்வுத் தாக்கங்களும் செய்து கொள்ளும் சங்கல்பங்களும் செய்த
பிரார்த்தனைகளுமாகத் திருப்பாவை விரிகிறது. நாச்சியார் திருமொழியோ திருப்பாவைப்
பாடல்களில் இருந்து வேறுபடுகிறது. குறிப்பிட்ட நோன்புக்கென எழுதப்பட்டவை அல்ல. குழுவினராகப் பக்தி
செலுத்தும் பாங்கு அதில் இல்லை. இன்னது வேண்டும் இன்னது விலக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட பிரார்த்தனைகள்
அங்கே இல்லை. வேண்டும் என்று கேட்பதெல்லாம் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே.
நாச்சியார் திருமொழியில் தனிப்பட்ட வைராக்கியம் பேசப்படுகிறது. தனிப்பட்ட ஏக்கங்கள்
பேசப்படுகின்றன. தனிப்பட்ட கனவுகளின் வண்ண ஓவியங்கள் வரையப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இட்டுக்
கட்டியோ கேள்வி ஞானத்தின் அடிப்பிறந்தோ அமையாமல் உணர்ந்து, ஏங்கி, மகிழ்ந்து, கொண்டாடி, கூடி,
மயங்கி, முயங்கி வெளிப்படுத்தியவையாக அமைகின்றன என்ற வகையில் உணர்விலக்கியத்தின் உச்சமாக
அமைகின்றன என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். இந்த வகையில் ஆண்டாள் தமிழ் இலக்கிய உலகத்தில்
உணர்விலக்கியத்தின் ஊற்றுக் கண் என்பதைக் கூறிப் பிறவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com