From ramaninaidu@... Wed Dec 19 10:55:06 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 19 Dec 2001 18:55:06 -0000
Received: (qmail 52864 invoked from network); 19 Dec 2001 18:55:06 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 19 Dec 2001 18:55:06 -0000
Received: from unknown (HELO smtp014.mail.yahoo.com) (216.136.173.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Dec 2001 18:55:06 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.172) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 19 Dec 2001 18:55:00 -0000
Message-ID: <002c01c188bf$2cdb86c0$aceac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani"
Subject: nacciyar thirumoli 5 tamil
Date: Thu, 20 Dec 2001 00:06:45 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14105

மார்கழி நாள் ஐந்து - நாச்சியார் திருமொழி தொடர்ச்சி
20.12.2001

சென்ற மடலில் மேற்கோளிட்ட முதல் திருமொழியின் விரிவை இந்த மடலில் காண்போம்.

"தையொரு திங்களும்" என்று தொடங்கும் இத்திருமொழியை ஐந்து சிறப்புகள் பாற்பட்டு அலசலாம்.

முதலாவதாகத் தைந்நீராடல் வழியில் இப்பாடல்கள் அமைந்திருப்பதைக் காண்போம்.

தொழுதேன், நோற்கின்றேன், வணங்குகின்றேன் என்ற வார்த்தைகள் தைந்நீராடல் ண்டாள் காலத்தில் காமன்
தொடர்புடன் காமன் நோன்பாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காட்டுகின்றன. தைந்நீராடலோடும் நற்கணவனுக்காக
நோற்றலோடும் காமனைத் தொழுதல் என்ற புதுத்தொடர்பும் உள்ளது. எனினும் ஸ்ரீவைஷ்ணவப் பாரம்பரியத்தில்
திருமாலை அல்லாது வேறு தெய்வத்தை வணங்கும் பாங்கு இல்லை. வேறு எந்த ழ்வார் இலக்கியத்திலும் திருமாலை
அல்லால் வேறொரு தெய்வத்தை எந்தவொரு பயனும் வேண்டித் தொழுவதாகப் பாடல்கள் அமையவில்லை, அதனால்தான
முதல் திருமொழியின் முதல் பாடலுக்கு விளக்கம் எழுதிய பிரதிவாதம் பயங்கரம்
அண்ணங்கராச்சாரியார் இப்படிச் சொல்வார்.
"உய்யவுமாங்கொலோ என்று ஐயப்படுவதற்குக் காரணம் யாதெனில் ஸ்வரூப நாசத்தை விளைவிக்க வல்ல
தேவதையைப் பற்றினமையால் இப்பற்று உஜ்ஜீவிந ஹேதுவாமோ அன்றி கீழ் விழுகைக்கு ஹேதுவாமோ என்று
நெஞ்சு தளும்புகிறபடி..."

மேலும் இப்பாடலில் காமனோடு காமன் தம்பியையும் தொழுதேன் என்கிறார் ண்டாள். காமன் தம்பி சாமன்.
கண்ணனுக்கு ருக்மிணியிடத்தில் மன்மதாம்சமாக ப்ரத்யும்னன் பிறந்தான் என்றும் ஜாம்பவி
தேவியிடத்தில் ஸாம்பன் அல்லது சாமன் பிறந்தான் என்றும் ஸ்ரீபாகவதத்தில் குறிப்புகள் உண்டு.

அடுத்து இந்தப் பத்துப் பாடல்களிலும் முதலிரண்டு அடிகளில் காமன் நோன்பின் விவரங்கள் எதுவும் விட்டுவிடாமல்
சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.
தைமாதம் முழுக்க காமன் எழுந்தருளம் சிறந்த இடம் தேர்வு
மாசிமாதம் புலர்காலைப் பொழுதில் திருவீதி அலங்காரம்
கிழக்கு வெளுக்கு முன் படித்துறையாட்டு
காமனுக்கு குதிகளைச் சுள்ளி நெருப்பிடல்
மலர்க்கணை தொடுத்தல்
ஊமத்த மலர்களையும் முருக்க மலர்களையும் கொண்டு அர்ச்சித்தல்
சுவரில் காமன் பெயர் எழுதல்
கொடி,குதிரை, சேடிப் பெண்கள், கரும்பு வில்லைக் காமனுக்குப் படையலாக்குதல்
அழகியர், இளையவர், காமதந்திர வாழ்வியலில் வல்லவர், காமசாத்திரம் கற்று ஓதுகிறவர் கியோரை
முன்னிறுத்தி நோன்பு நோற்றல்
காய்நெல், கரும்பு, வெல்லம், அவல் கியன படைத்து காம சாத்திரத்தில் வல்லவர் வகுத்த மந்திரம் சொல்லல்
குளியலில் அலங்காரத்தில் தோற்றத்தில் அக்கறையின்றி நோன்பிருத்தல்
என்று இவ்வாறு காமன் நோன்பின்போது செய்யத் தக்கனவும் செய்தனவும், செய்யத் தகாததும் செய்யாது விடுத்ததும்
பெரியதொரு பட்டியலாகவே முதல் திருமொழியில் பரவி நிற்பதைக் காண்கிறோம்.

இவற்றுள் சில பற்றிய சில குறிப்புகள் காணலாம்.

1. முள்ளுமில்லாச் சுள்ளியெரி மடுத்து என்றவிடத்து குதிகளைத் தீயிட வளர்த்த தீ இளவிறகுத் தீ என்று
தெரியப்படுத்துவது காணற்பாலது. (1)
2. மன்மதன் அம்பில் வைக்கும் மலர்கள் அரவிந்தம், அசோகம், மா, நவமல்லிகை, கருநெய்தல் கிய
ஐந்துமாம். (2)
3. ஊமத்தையும் முருக்க மலரும் மதகரமான மலர்கள். அவற்றின் மணம் ஒருவித மன உடல் மயக்கம் தருவது. எனவே
அவை காமனுக்க உகந்த மலர்களாகின்றன. (3)
4. கண்ணனைக் கண்டபின் காமனை மறந்து விடலாகும் என்பதால் மறக்காமல் இருக்கக் காமனின் பெயரைச் சுவரில்
எழுதுவதாக விளக்கம் தருவர் சம்பிரதாய உரையாசிரியர்கள் (4). அதைவிடவும் சுவரெங்கும் காமன்
பெயரையும் வடிவையும் குறிகளையும் வரைந்து கொண்டாடுவதாகக் கொள்வது சிறப்பெனத் தெரிகிறது.
5. காமனின் கொடி மீன் கொடி (4)
6. நோன்பினை வழி நடத்தி முன்னிலை வகிப்பவராக காம சாத்திரத்தில் வல்லவர்களைச் சொல்லிப்
போயிருப்பது ஒரு சிறப்பு மட்டுமல்ல. ஒரு புரட்சியும் கூடத்தான். சூத்திரத்தைச் சாத்திரமாக்கிய புரட்சிக்
கவி ண்டாள். (6,7)
7. காதலில் தன் நிலையழிதல் பற்றிச் சொல்வது சங்கப் பாடல்கள். தேமலும் கைவளை கழன்று போதலும்
தொடங்கிக் காதற் சுரத்தில் தன் நிலை அழிந்த சங்கப் பாடல்களின் நாயகியின் இடத்தில் காமவசப்பட்ட
மனம் காமத்துக்கேதுவான உடலையும் அலட்சியப்படுத்தும் முரண்தொடை பேசுவது எட்டாம் பாடலின் சிறப்பு.
8. தன் காமத்துடிப்பின் பாவத்துக்குக் காமனைப் பொறுப்பாக்குவது ஒன்பதாம் பாடலின் சிறப்பு.


இப்பத்துப் பாடல்களின் இரண்டாவது சிறப்பு காமசுரப்பட்ட நாயகியின் உடல் தீண்டல் உணர்வு நோக்கினைப்
புலப்படுத்தும சில குறிப்புகள்.
அவரப் பிராயம் தொடங்கி என்றும் தரித்தெழுந்த என் தட முலைகள் (4)
சிறுவயது தொடங்கிப் பூரித்து எழுந்த தன் மார்பகங்கள் அவன் ஸ்பரிசத்துக்கெனவே பருத்து நிற்கின்றன
என்கிறார்.
ஒல்லை விதிக்கிற்றியே - சீக்கிரமாகவே அவனோடு சேர்த்து வை - எனும் போது பருத்த தனங்கள் வயதால்
சுருங்கித் தளர்ந்து போகுமுன் அவன் ஸ்பரிசம் படக் காத்திருத்தலை நிறைவு செய் என்று வேண்டுவதாகக்
கொள்ளலாமோ?

ஐந்தாம் பாடலும் ஒன்பதாம் பாடலும் தனித்தன்மை வாய்ந்தவையாக அமைந்துள்ளன. இரண்டிலும் உவமைகள் ட்சி
செய்கின்றன. ஒன்பதாம் பாடலில் எருதிடத்து வேலை வாங்கியபின் வயிற்றுக்குத் தீனியிடாமல் உலக்கையால்
அடித்து விரட்டுவதைப் போல என் காதல் நிறைவேறுமுன் என்னைக் கைவிடும் பாவம் உனக்கு ஏற்படலாகாது என்ற
காமனிடம் சொல்கிறாள் தலைவி.
ஐந்தாம் பாடலிலோ என் தடமுலைகள் புருஷோத்தமனுக்கே என்றிருக்கவும் மானுடர் எவருக்கும் உரியதாகும் என்ற
பேச்சே தன்னைக் கொன்றுவிடும் என்று சொல்ல வரும்போது வேள்வியின் குதிகளை நரி முகர்ந்தும் நக்கியும்
பார்ப்பதாகிப் போகும் எனும்போது தன் காமத்தை ண்டாள் புனிதப்படுத்துகிறார்.

ஏழாம் பாடல் இப்பத்துப் பாடல்களில் மிக மென்மையானது. உணர்வு பூர்வமானது. ஒளி பொருந்திக் கீழ்
நோக்கிச் சரியும் தன் வயிற்றையும் அதற்கு மேல் மெல்லிய பருத்த தனங்களையும் திரிவிக்கிரமன் தீண்ட
வேண்டும் என்கிறாள். ஸ்பரிச சுகம் அனுபவித்த எந்த ஓர் ணும் பெண்ணும்
தேசமூன்றளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் மென்தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
என்ற வரிகளைச் சுவைத்து அனுபவிக்காமல் இருக்க முடியாது.

எட்டாம் பாடல் முன் கூறியபடியே ஒரு முரண்தொடை அழகோடு விளங்குகிறது. காமத்துக்கு ஏதுவான உடல்
நலனையே அலட்சியம் செய்யும் காமம்!

எட்டாம் பாடலுக்கு வேறு ஓரு சிறப்பும் உண்டு. திருப்பாவையில் தன் மார்பின் மீது அழுந்தக்
கிடக்கும் இறைவனை நப்பின்னை எத்தனை போதும் துயிலெழ விடமாட்டாள் என்ற ண்டாள் இப்பாடலில் கேசவ
நம்பிக்குக் கால் பிடித்துவிடும் பாக்கியத்தை இறைஞ்சுகிறார். இதற்கு விளக்கம் எழுதிய
அண்ணங்காராச்சாரியார், "அவனை முலையால் அணைக்க வேண்டுகின்றவள் கால் பிடிக்கப் பெற வேண்டுவாள் என்
எனில் காலைப் பிடித்துக் கொண்டால் காத காரியம் ஒன்றுமில்லையே என்று நினைவு போலும். அநதிக்ரஹணீயம்
ஹி சரணக்ரஹணம்." என்பார்.

இப்பத்துப் பாடல்களின் மூன்றாவது சிறப்பாக அமைவது ழ்வார் இலக்கியத்துக்கே பொதுவான சிறப்பு. இறைவனைப்
பற்றிப் பேசும போது ழ்வார் இலக்கியம் அவனது அவதாரச்செயற் சிறப்புகளைப்
பேசுகின்றன. இத்திருவாய்மொழியிலும் புள்ளின் வாய் பிளந்தான், தேசமூன்றளந்தவன், மருப்பொசித்தவன்
என்பன பயின்று வரக் காண்கிறோம்.

இப்பாடல்களின் நான்காவது சிறப்பாக எடுத்துக் கொள்ளத் தக்கது ழ்வார் இலக்கியத்தில் மற்றுமொரு பொதுச்
சிறப்பாக வழங்கும் இறைவன் தோற்றப் பொலிவின் வர்ணனையாகும்.
தழல் உமிழ் சக்கரக் கையன் (1), வித்தகன் வேங்கட வாணன் (3), ஊனிடை ழீ சங்கு உத்தமன் (5),
கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமலவண்ணத் திருவுடை முகத்தன் (6),
பாற்கடல் வண்ணன்(9) என்ற குறிப்புகள் காணத்தக்கன.

இப்பாடல்களின் ஐந்தாவது சிறப்பு தான் அவனுக்கே னவள் என்ற சர்வ நிச்சயம்தான். பார்க்கப்
போனால் இத்திருவாய் மொழியில் அடிக்கோடிட்ட செய்தியே அதுதான்.
மாலுக்கே என்ற தானாகாமல் போய்விட்டால் உய்தல் இல்லை (1)
மாலே தன் இலக்கு (2)
மாலே தன் விளக்கு (3)
மாலுக்கே என்று சங்கல்பித்து விட்டவள் இவள் (4)
மானுடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழத் தரியாள் (5)
மாலின் கால் பிடித்து விடலே இவள் பெண்மையைத் தலையுடையதாக்கும் (8)
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்குப் பணி செய்யாவிடில் அழுது அழுது அலமந்து ற்ற நேரிடும் (9)
என்ற இக்குறிப்புகள் நோக்கத் தக்கவை.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com