From harikris@... Wed Dec 19 11:12:51 2001
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 19 Dec 2001 19:12:48 -0000
Received: (qmail 65054 invoked from network); 19 Dec 2001 19:12:48 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 19 Dec 2001 19:12:48 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Dec 2001 19:12:49 -0000
Received: from harikris ([203.199.240.110]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GOLUP803.T0B for ; Thu, 20 Dec 2001 00:42:44 +0530
Message-ID: <009f01c188ef$4342d820$6ef0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" References: <1.5.4.16.20011219123016.3db77f1c@...>
Subject: Re: [agathiyar] clarification
Date: Thu, 20 Dec 2001 00:30:43 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14110
அன்புள்ள திரு,
உண்மை. காலக் குறிப்புகளைக் கணக்கெடுத்தால் அந்த வயது வரும். ராமாயணத்தில்பார்த்தால் ராமனுக்குப் பட்டாபிஷேகம்நடந்த போது சுமார் 40 வயது இருந்திருக்க வேண்டும்.
அப்படியானால் வீட்டுமரின் வயதுஇ, சகுனியின் வயது, திருதிராட்டிரனின் வயது, விதுரர், துரோணர், கிருபர் போன்றோரின் வயது என்னவாக இருந்திருக்கும்? குறிப்புகள் கிடைக்கவில்லை - அதாவது எனக்கு. யயாதியில் ஆரம்பித்து சந்தனு வரை 16 தலைமுறைகளைக் கணக்கெடுத்தேன்.வீட்டுமரின் சகோதரர்கள் சித்ராங்கதன் மற்றும் விசித்திர வீரியன். (வீட்டுமர் வியாசருக்கே மூத்தவர்.) அதற்கடுத்த தலைமுறை திருதிராட்டிரன், பாண்டு மற்றும் விதுரன். அதற்கடுத்த தலைமுறை கெளரவர்களும் பாண்டவர்களும்.
மஹாபாரதம் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் வரை போகிறது. அபிமன்யு-->பரீட்சித்து-->ஜெனமேஜெயர் வரை. ஜெனமேஜெயர் காலத்தில்தான் ஸத்ரயாகம் நடக்கிறது. அங்கேதான் மஹாபாரதத்தின் flash-back ஆரம்பிக்கிறது. கதையைச் சொல்ல ஆரம்பிப்பவர் ரோமஹர்ஷணர் என்ற சூதரின் மகனான உக்கிரசிரவஸ். பிறகு வைசம்பாயனர் தொடர்கிறார். iலியட் போன்ற காவியங்களில் வரும் in medias res என்ற உத்தி மஹாபாரதத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. (இதற்கு மேலே புத்தகத்தைப் பார்க்க வேண்டும். நள்ளிரவாகிவிட்டது. காலையில் சொல்கிறேன் - தேவைப்படுமானால். கிருஷ்ணனுக்கும் குந்திக்கும் என்ன உறவு, எப்படி போன்ற செய்திகளும், ஒவ்வொரு கிளையும் எங்கே பிரிகிறது போன்ற குறிப்புகளும் தொகுத்து வைத்திருந்தேன். தேட வேண்டும்.)
சூதர் என்பதன் சரியான பொருள் என்ன? வாழ்த்துப் பாடிகளா? தேரோட்டியா? மற்ற ஏதேனும் குலமா? அங்கே எனக்குக் குழப்பம்இருக்கிறது. அரங்கம் அறிஞர்கள்பால் செல்கிறது. (பாரதி சொல்லும் 'சூதர் மனைகளிலே' சூதர் வேறு. இது எனக்காகவும் என் போன்றோருக்காகவும் சொல்லப்படுகிறது. அறிஞர்கள் பொறுத்தருள்க.)
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: Selliah Thiru
To: agathiyar@yahoogroups.com
Sent: Wednesday, December 19, 2001 5:51 PM
Subject: [agathiyar] clarification
வணக்கம்
மகா பாரத யுத்தம் நடக்கும்பொழுது
தர்மனின் வயது 72
பீமனின் வயது 71
அர்ச்சுனனின் வயது 70
துரியோதனின் வயது 71
என்று எழுதியுள்ளார்களே
உண்மையாகவா??/
ஆச்சரியத்துடன்
திரு
[Non-text portions of this message have been removed]