From jaybee@... Wed Dec 19 21:03:33 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 05:03:33 -0000
Received: (qmail 69619 invoked from network); 20 Dec 2001 05:03:33 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 05:03:33 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 05:03:32 -0000
Received: from user (sp-103-168.tm.net.my [210.186.103.168]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOM0087VM1OMK@...> for agathiyar@yahoogroups.com; Thu, 20 Dec 2001 13:03:26 +0800 (SGT)
Date: Thu, 20 Dec 2001 13:05:56 +0800
Subject: Re: [agathiyar] 60 years ago.....A True story#4
In-reply-to: <3.0.3.32.20011214174559.0071bdf0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011220130556.01d8e538@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011208230118.01d73b54@...> <3.0.3.32.20011207215057.0070fd70@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14119
At 11:01 PM 12/8/01 +0800, JayBee wrote:
>>
>>அன்பர்களே,
>>
>> இது ஒரு உண்மைக் கதை. என் வாழ்க்கையுடன் நெருக்கமாகச்
>>சம்பந்தப்பட்டது. வாழ்க்கையின் திசையை மாற்றிவிட்டது.
>> இன்று டிசம்பர் 7-ஆம் தேதி.
>> சரியாக அறுபதாண்டுகளுக்கு முன்னர் 7-12-1941-இல்
>>ஜப்பானியப் பேரரசு, மலாயாத் தீபகற்பத்தின்மீது படையெடுத்தது.
>
ஜப்பானியர் மலாயாவிலிருந்து பிரிட்டிஷாரை விரட்டியபின்னர்
சில நாட்கள் மலாயாவின் பல நகரங்களில் anarchy அராஜகம் நிலவியது.
தடியெடுத்தவன் தண்டல்காரன்.
நகர மக்களில் பலர் அப்படி அப்படியே போட்டது போட்ட படி
ஊர்களை விட்டு வெளியேறி ஆங்காங்கு இருந்த கம்பங்களில்(kampong -
small village) தஞ்சமடைந்தனர்.
தெருக்கள் எல்லாமே வெறிச்சோடிவிட்டிருந்தன. போலீஸ் துறை
செயல்படவில்லை.
ஆகவே லூட்டியடித்தல் looting ஏராளமாக தங்குதடையின்றி
நடைபெற்றது.
யுத்தம், தென்கிழக்காசியாவில் பலரை ஏழைகளாக்கியது. பலர்
சொத்துக்களை இழந்தனர்.
ஆனால் இந்த இடர்பாடுகளிலும் வேறு பலர் செல்வந்தர்களாக ஆகினர்.
அதற்குப் பல முறைகள் இருந்தன.
கள்ள மார்க்கெட் வியாபாரம் ஒன்று.
ஜப்பானியருக்கு வேண்டிய பொருள்கள் சப்ளை செய்வதற்கான காண்ட்ரேக்ட்.
சரக்குக் கடத்தல்.
ஜப்பானியருக்கு உளவு சொல்லுதல்.
லூட்டி அடித்தல்.
மலாயாவில் லூட்டியடித்தல் இருமுறை நடைபெற்றது. பிரிட்டிஷ்
வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஒருமுறை.ஆனால் அது இரண்டு மூன்று
நாட்களே நடைபெற்றது.
ஜப்பானியர் வந்து ஆங்காங்கு தங்களை நிலப்படுத்திக்கொண்டதுமே,
லூட்டி அடித்தவர்களில் அகப்பட்டவர்களையெல்லாம் பிடித்தார்கள். நான்கு
சந்திகளில் மக்களைத் திரட்டி, லூட்டியர்களைக் குனியவைத்து 'சக்'கென்று
தலையை வெட்டினர். வெட்டிய தலைகளை மூங்கில் சிலும்புகளில் செருகி
சந்திகளில் வைத்துவிட்டனர்.
ஜப்பானியப் போர்வீரர்கள் கத்திகளும் வைத்திருப்பார்கள். எல்லாரிடமும்
பெரிய துப்பாக்கி, பாயோனெட், பிச்சுவாக்கத்தி, நீளக்கத்தி முதலியவை இருந்தன.
சாமுராய்கள் அல்லாதாரிடம் கத்தானா(katana) என்னும் வகைக் கத்தியில்
சாதாரணக் கத்தியும், சாமுராய் பரம்பரையினரிடம் சாமுராய்க் கத்திகளும் இருந்தன.
நன்றாகத் தீட்டி வைத்திருப்பார்கள். அவர்களிடையே போட்டிகளும் உண்டு.
ஆட்களை ஒருவருடன் ஒருவர் நெருக்கமாகக் கட்டிவைத்துக்கொண்டு,
ஒரே வீச்சில் தலைகளை வெட்டுவார்கள். அப்படி எத்தனை தலைகளை
ஒரே சீவில் வெட்டித்தள்ளமுடிகிறது என்பதில்தான் அந்தப் போட்டியே.
வெட்டும்போது ஜப்பானியர் ஒரு விதமான கூச்சலையிடுவார்களாம்.
அடிவயிற்றிலிருந்து அந்த ஊளை/கூச்சல் வருமாம். ஒரு வித அமானுஷ்ய
பயங்கரத்தைக் கொண்ட கூச்சலாம் அது. அந்தக் கூச்சலையும் கேட்டு
அந்தமாதிரியான காட்சிகளையும் கண்டவர்கள் யுத்தம் முடிந்தபின்னர் பல
ஆண்டுகள் கழித்தும் தூக்கம் கெட்டிருக்கின்றனர்.
தலை வெட்டுவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம். கைதிகளின்
தலையை வெட்டுவதற்கென்றே சில பிரத்தியேக இடங்களை வைத்திருந்தனர்.
பினாங்கில் அப்படிப்பட்டதோர் இடம் இருந்தது. தற்சமயம் அதனை
'தலைவெட்டியான் கோயில்' என்று அழைக்கிறார்கள்.
சுங்கைப் பட்டாணியிலும் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் 'ஆயிரம் தலை வாங்கிஅபூர்வ சிந்தாமணியர்'களாக
இருந்ததால் லூட்டியை வெகு விரைவில் நிறுத்தமுடிந்தது. அதன்பின்னர் ஏதாவது
கடை கிடை அகஸ்மாத்தாகத் திறந்திருந்தால்கூட, யாரும் அந்தப் பக்கம்கூட
போவதில்லை.
அவ்வளவு பயம்!
அன்புடன்
ஜெயபாரதி
> இப்படியாக 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கப்பூரையும்
>கைப்பற்றிக்கொண்டனர்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>===========================