From ramaninaidu@... Thu Dec 20 09:24:18 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 17:24:20 -0000
Received: (qmail 82490 invoked from network); 20 Dec 2001 17:24:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 17:24:19 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 17:24:18 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.137) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 20 Dec 2001 17:24:14 -0000
Message-ID: <004e01c1897b$a516c480$89eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani"
Subject: NACCIYAR THIRUMOLI 6 TAMIL
Date: Thu, 20 Dec 2001 22:30:10 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14128

மார்கழி நாள் ஆறு - நாச்சியார் திருமொழி தொடர்ச்சி

21.12.2001

நாச்சியார் திருமொழி

இரண்டாம் திருமொழி

பாடல் ஒன்று

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனே நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமம் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல்.

பாடல் இரண்டு

இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இச்சிற்றிலை
நன்றும் உன் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆவிலை மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே.

பாடல் மூன்று

குண்டு நீர் உறை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.

பாடல் நான்கு

பெய்யும் மாமுகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேல்.

பாடல் ஐந்து

வெள்ளை நுண்மணர் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே.

பாடல் ஆறு

முற்றிலாத பிள்ளைகளோம் முலை போந்திலோமை நாள்தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் கலங்களை முற்றவும்
செற்று இலுங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்.

பாடல் ஏழு

பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஓதமாகடல் வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழுறும்
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

பாடல் எட்டு
வட்டவாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையோடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என்பயன்
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே.

பாடல் ஒன்பது

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்.

பாடல் பத்து

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர்சிறுமியர் மழலைச் சொல்லை
வேதவாய்த் தொழில் வல்லார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்தன்
கோதை வாய்த்த தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com