From ramaninaidu@... Thu Dec 20 09:24:57 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 17:24:55 -0000
Received: (qmail 41702 invoked from network); 20 Dec 2001 17:24:54 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 17:24:54 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 17:24:57 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.137) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 20 Dec 2001 17:24:54 -0000
Message-ID: <005701c1897b$bd40ae40$89eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani"
Subject: THIRUVEMPAVAI 6 TAMIL
Date: Thu, 20 Dec 2001 22:34:02 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14131

திருவெம்பாவை நாள் ஆறு பாடல் ஆறு


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடு ஏலோர் எம்பாவாய்.

தோழமையின் நெருக்கம் அதிகம்தான். தம்பிரான் தோழர் சுந்தர மூர்த்திகள். அவருடைய தேவாரப்
பாடல்களில் உள்ள நெருக்கம் பிறர் பாடல்களில் இல்லை என்று சொல்லலாம்தான்.


பிறர் இம்மெனும் முன் உர்ரென்பாரும் நண்பர்கள் ஏடகப் பேச்சைப் பொறுமையாகக் கேட்டு இருப்பதில்லையா?
திருவெம்பாவையின் ஆறாவது பாடல் தோழியரின் எள்ளலைக் கூறி கேட்டுக் கொண்டிருக்கும் தோழி
பொறுமையாக இருப்பதை உணர்த்துகிறது.

நேற்று என்ன சொன்னாய்? நீயே வந்து எம்மை எழுப்புகிறேன் என்றாய். சொன்ன வார்த்தை எந்தத் திசையில்
போய் மறைந்தது என்று கேட்கிறார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லையே என்ற வெட்கம்
உனக்கு இல்லையோ? அல்லது உனக்கு மட்டும் இன்னமும் பொழுது விடியவில்லையோ என்னவோ? என்று
கேட்கிறார்கள்.

சரிதான். மான் போன்றவளே. பொழுது விடிந்துதான் விட்டது. இப்போதாவது எழுந்து வா. யாரும் அறிதற்கு
அரிய பிரானின் திருவடிப் புகழை நாம் பாடி வந்திருக்கிறோம். வந்து விட்டோமே நாங்கள்
என்பதற்காகவாவது கதவைத் திறந்து வெளியே வா. உனக்கும் உன்னைத் தேடி வந்த எமக்கும்
தலைவனாகிய இறைவன் புகழைப் பாடலாம் வா. என்று அழைக்கிறார்கள்.

வானே நிலனே பிறவே அறிவரியான் என்ற தொடர் கடவுளின் கிட்டரிய பெருமையைப் புலப்படுத்துகிறது.
அளக்கலாகாப் பெருந்திறல் உடையவன் இறைவன். எட்டாப் பரம் பொருள். சிந்தையும் மொழியும் செல்லா
நிலையினை உடையவன்.

உயிர்களோ எனில் சில வாழ்நாளும் சிற்றறிவும் உடையவர். இந்த உயிர்கள் அப்பொருள் பற்றி அவாவுவது
வீணல்லவா? அவன் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பினன். நீர் உறு
தீயானவன். நினைவதேல் அரிய நின்மலன் உள்ளவன்.

அப்படிப்பட்டவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன். அவனுடைய அருள்வெள்ளச் சீருறு சிந்தையில்
தேனாய் எழுந்து தித்திக்கும் எளிமை உடையவன்.

இத்தகைய இறைஇயல்பைத்தான் மணிவாசகர் வானே நிலவே பிறவே அறிவரியான் என்றும் தானே வந்து எம்மைத்
தலையளித்து ஆட்கொண்டருளும் கழல் என்றும் குறிக்கிறார்.

திருவுந்தியாரில் ஒரு செய்தி.

அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.

திருவெம்பாவையின் ஆறாம் பாடலில் இப்படியாக இரண்டு கூறுகளை அமைத்துப் போகிறார் மணிவாசகர்.
நட்புரிமை எப்படி உலகியலில் வெளிப்படுகிறது என்பது ஒன்று. அருமைக்கு அருமையாக உள்ள பரம்பொருள்
அடியவர்க்கு எளிமைப் பாங்குடையதாய் ஆட்கொள்ளும் தத்துவம் இன்னொன்று.

சொக்கேசன் வந்திக்குக் கூலியாளாக வரவில்லையா? வந்ததுதான் வந்தார், வந்து பிரம்படியும் பட்டுக்
கொண்டாரே! பத்தி வலையில் பட்ட எளிமையே காரணமாக பிரம்படி பட்டார்.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com