யார் எழுதியது என்று கேளுங்கள். கண்ணதாசன் என்று தயங்காமல் சொல்வார்கள்.
ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் சு.சமுத்திரம் சொன்னார்: ஒரே அடியில் பதினாறு பேரை வீழ்த்தும் ரஜினிகாந்துகள் எழுத்துலகத்திலும் iருக்கிறார்கள்.
அதாவது வாசகர்களும் பத்திரிக்கைகளும் ஜெயகாந்தன் போன்ற ஒருசிலரையே தலைமேல் வைத்துக்கூத்தாடி மற்ற எழுத்தாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதில்லை என்ற கருத்தில் சொல்லப்பட்டது iது.
On Wed, 19 Dec 2001 Hari Krishnan wrote :
> நண்பர்களே,
>
> நவீன எழுத்தாளர் கிருஷாங்கிணியின் மகள் நீரஜா நாகராஜன் 23
> திசம்பரன்று பெண்களால் படைக்கப் பட்ட புதுக்கவிதைகளை எடுத்துக் கொண்டு
> சென்னை தி. நகரில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். நீரஜா
> சிங்கப்பூரில் நிருத்யாலயா ஏஸ்தடிக்ஸ் சொசைட்டியில் விரிவுரையாளராக
> இருக்கிறார். பல பெண்களால் படைக்கப்பட்ட புதுக்கவிதைகள் 'அவ்வைக்குப்
> பின்னும் ஆங்காங்கே' என்ற தலைப்பில் எழுத்தாளர் கிருஷாங்கிணியால்
> தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட இருக்கின்றன. அந்தப்
> புத்தகத்திலிருந்து நடனத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் கவிதைகளை
> எனக்குக் கிருஷாங்கிணி அனுப்பியிருக்கிறார். அவற்றில் பூரணியின்
> கவிதையை இங்கே அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
>
> பூரணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். என் அன்புக்குரிய மாமி.
> 88 வயதாகிறது. சென்னையில் பரீக்ஷா என்ற பெயரில் ஒரு பரிசோதனை
> நாடகக் குழு இருந்தது. அதன் இதயமாக இருந்தவர் கவிஞர் (அமரர்) கே. வி.
> ராமசாமி. சென்னையில் புதுக்கவிதையின் ஆரம்பக் குரல்களில் ஒருவர்.
> அவருடைய மகள் அர்ச்சனா இளவயது அவ்வையாக நடித்த திரைப்படம் ஒன்று
> அண்மையில் வெளிவந்தது. பூரணி, கவிஞர் கே. வி. ராமசாமிக்கும்,
> எழுத்தாளர் கிருஷாங்கிணிக்கும் (ப்ருந்தா) வெளியே பெயரே தெரியாமல்
> இருக்கும் கவிஞர் கே. வி. ரமணனுக்கும் தாயார். பூரணியும்தான் பெயரே
> தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். 'எனக்கு இலக்கணமெல்லாம்
> தெரியாதுடா. ஏதோ நான் எழுதறதுதான் கவிதைஇ' என்று சிரிப்பார்.