From naga ganesan@... Thu Dec 20 14:47:57 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 22:47:58 -0000
Received: (qmail 97617 invoked from network); 20 Dec 2001 22:47:58 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 22:47:58 -0000
Received: from unknown (HELO n6.groups.yahoo.com) (216.115.96.56) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 22:47:56 -0000
Received: from [216.115.96.91] by n6.groups.yahoo.com with NNFMP; 20 Dec 2001 22:47:56 -0000
Date: Thu, 20 Dec 2001 22:47:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Pooraniyin kavidhai
Message-ID: <9vtpqn+4o8q@eGroups.com>
In-Reply-To: <20011220182348.5825.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3110
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.30
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14142
19-ஆம் நூற்றாண்டில் ஆவுடை அம்மாள் என்ற விதவை
இருந்திருக்கிறாள். வாசித்தறியாத அவள் பாடல்கள்
வேதாந்தமாக உள்ளன. அச்சாகியிருக்கிறது.
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Ganapathi S" wrote:
>
> கீழ்க்கண்ட வரிகளைமட்டும் யாரிடமாவது கொடுங்கள்:
>
> அறியாச் சிறுவர்களின் ஆசைப்பெருங் கூத்து
> காகிதத்தில் கப்பல்விடல் கரம்கீற்றின் கால்நொண்டி
> பாண்டி விளையாடல் பம்பரத்தைச் சுற்றவிடல்
> மண்குவித்து, மலைசமைத்து மலைமீது சாமிவைத்து
>
> சின்னப் படிகள்பல செங்குத்தாய் அங்கமைத்து
> பசும்புல் தழைசொருகிப பக்கத்தில் நந்தவனம்
> iசைவாய் திருக்குளமும் ஈரமண்ணால் தானமைத்து
> உச்சியிலே சாமிக்கு ஊதலிலே நாதசுரம்.
> உற்சாக பாலகரின் உற்சவங்கள் ஊர்வலங்கள்.
>
> யார் எழுதியது என்று கேளுங்கள். கண்ணதாசன் என்று தயங்காமல் சொல்வார்கள்.
>
> ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் சு.சமுத்திரம் சொன்னார்: ஒரே அடியில் பதினாறு
பேரை வீழ்த்தும் ரஜினிகாந்துகள் எழுத்துலகத்திலும் iருக்கிறார்கள்.
>
> அதாவது வாசகர்களும் பத்திரிக்கைகளும் ஜெயகாந்தன் போன்ற ஒருசிலரையே
தலைமேல் வைத்துக்கூத்தாடி மற்ற எழுத்தாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதில்லை
என்ற கருத்தில் சொல்லப்பட்டது iது.
>
> ஹரியும், கிருஷாங்கிணியும் பூரணியம்மாளை (iத்தனை வயதுக்குப்பிறகாவது)
உலகுக்குத் தெரியப்படுவதும் மகிழ்ச்சிக்குரியதே.
>
> அன்புடன்
>
> மதுரபாரதி
>
> பி.கு:
>
> முப்பதாண்டுகள் இiருக்கும். கே.வி.ராமசாமி தந்து கி.ரா.வின் 'கோபல்ல கிராமம்'
படித்தோம் நானும் ஹரியும். நினைவிருக்கிறதா, ஹரி?
>
>
> On Wed, 19 Dec 2001 Hari Krishnan wrote :
> > நண்பர்களே,
> >
> > நவீன எழுத்தாளர் கிருஷாங்கிணியின் மகள் நீரஜா நாகராஜன் 23
> > திசம்பரன்று பெண்களால் படைக்கப் பட்ட புதுக்கவிதைகளை எடுத்துக் கொண்டு
> > சென்னை தி. நகரில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். நீரஜா
> > சிங்கப்பூரில் நிருத்யாலயா ஏஸ்தடிக்ஸ் சொசைட்டியில் விரிவுரையாளராக
> > இருக்கிறார். பல பெண்களால் படைக்கப்பட்ட புதுக்கவிதைகள் 'அவ்வைக்குப்
> > பின்னும் ஆங்காங்கே' என்ற தலைப்பில் எழுத்தாளர் கிருஷாங்கிணியால்
> > தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட இருக்கின்றன. அந்தப்
> > புத்தகத்திலிருந்து நடனத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் கவிதைகளை
> > எனக்குக் கிருஷாங்கிணி அனுப்பியிருக்கிறார். அவற்றில் பூரணியின்
> > கவிதையை இங்கே அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
> >
> > பூரணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். என் அன்புக்குரிய மாமி.
> > 88 வயதாகிறது. சென்னையில் பரீக்ஷா என்ற பெயரில் ஒரு பரிசோதனை
> > நாடகக் குழு இருந்தது. அதன் இதயமாக இருந்தவர் கவிஞர் (அமரர்) கே. வி.
> > ராமசாமி. சென்னையில் புதுக்கவிதையின் ஆரம்பக் குரல்களில் ஒருவர்.
> > அவருடைய மகள் அர்ச்சனா இளவயது அவ்வையாக நடித்த திரைப்படம் ஒன்று
> > அண்மையில் வெளிவந்தது. பூரணி, கவிஞர் கே. வி. ராமசாமிக்கும்,
> > எழுத்தாளர் கிருஷாங்கிணிக்கும் (ப்ருந்தா) வெளியே பெயரே தெரியாமல்
> > இருக்கும் கவிஞர் கே. வி. ரமணனுக்கும் தாயார். பூரணியும்தான் பெயரே
> > தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். 'எனக்கு இலக்கணமெல்லாம்
> > தெரியாதுடா. ஏதோ நான் எழுதறதுதான் கவிதைஇ' என்று சிரிப்பார்.