From naga ganesan@... Thu Dec 20 15:35:31 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 23:35:31 -0000
Received: (qmail 78868 invoked from network); 20 Dec 2001 23:35:30 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 23:35:30 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 23:35:30 -0000
Received: from [216.115.96.116] by n5.groups.yahoo.com with NNFMP; 20 Dec 2001 23:35:30 -0000
Date: Thu, 20 Dec 2001 23:35:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: On VaLLalaar
Message-ID: <9vtsju+dul3@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2307
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.205
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14143


--- In tamil-ulagam@y..., "perichandra" wrote:
> எனவே வள்ளலாரின் கும்மியில் பயிலும் கொங்கைகுறிப்பு ஏதோ காமாளக் (erotic)
>குறிப்பு என்று எண்ண முகாந்தரமில்லை.
>
> பாரதி நாட்டு விடுதலைப் பொருண்மையைச் சுமந்த பாடல்களைப் பாடிப் புரட்சி
> செய்தவன் என்பதில் ஐயமில்லை.
>

வள்ளலார் பலபுரட்சிகளைச் செய்தவர். அவர் சாகாமல் இருக்க
வழிகண்டுபிடித்தார் என்று செத்த பிணங்களை எடுத்துக் கொண்டு
அவரிருக்கும் இடத்தை நச்சினோர் பலர். தொந்தரவு
பொறுக்க முடியாமல் வாழிடங்களை மாற்றவேண்டியதாயிற்று.
அவர் முதலில் செய்தவற்றையெல்லாம் தவத்திரு ஊரன் அடிகள்
பட்டியல் இட்டிருக்கிறார். அதை ஒருநாள் தருகிறேனே>

ஆயினும்,
சித்தர் இலக்கியங்கள் "பெருவழி" ஆகாமல் "சிறுவழி" (little
traditiஒn) ஆக விளங்கின. ரசவாதம், சிறுநீர் குடித்தல், ...
பெண்ணையிறக்கிப் பேசுதல் சித்தரிலக்கிய முத்திரைகளில்
ஒன்று. கற்பு என்றால் வள்ளுவனுக்குப் பின் ஆண், பெண்ணுக்குப்
பொதுவில் வைப்போம் என்றவர் பாரதியே.

திருவருட்பா திருவமுதத் திரட்டு (வெளியீடு:
அருட்செல்வர் நா. மகாலிங்கம், இராமலிங்கர் பணிமன்றம்,
சென்னை) புரட்டினேன். நான்காம் திருமுறைப் பாடல் ஒன்று:

புண்ணைக் கட்டிகொண் டேஅதன் மேலொரு
புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வாரிவர் கொள்ளிவாய்ப்
பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றவிம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம் கிழக்
கழுதை வாழ்வில் கடையெனல் ஆகுமே.

சந்நியாசிகளுக்கு இப்பாடல் பொருந்தும். மற்றையோருக்கு?
இவைபோல் பல உள. ஆனால், பொதுவாக,
வள்ளலார் செய்தது பெரும்பணி. தமிழை, சாதிக் கட்டுக்
கோப்பை மிகத் இளக்கினார்.

பாரதியார் ஹிந்துத்துவவாதி என்று இப்போது சில
திராவிடக் கட்சியாளர்கள் (வாலாஜா வலவன், ...)
எழுதுகிறார்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்
அவ்வளவு எதிர்த்தவர் யார்?

வள்ளலாரின் காமாந்தரப் பாடல்களுக்குப் பொதுவாக
இங்கிதமாலையைச் சொல்லுவார்கள். மட்டமாக எழுதியிருக்கிறார்
என்பர் பழம்புலவர்.

மேலும் என் எண்ணங்கள்:
http://groups.yahoo.com/group/agathiyar/message/13903
http://groups.yahoo.com/group/agathiyar/message/13904

அன்புடன்,
நா. கணேசன்

பி. கு.: காமவழிபாடு பற்றி நாளை. தமிழ் இலக்கியத்தில்
ஆண்டாளுக்கு முன்னரும் உண்டு.