From ramaninaidu@... Fri Dec 21 09:04:53 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 21 Dec 2001 17:04:53 -0000
Received: (qmail 16841 invoked from network); 21 Dec 2001 17:04:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 21 Dec 2001 17:04:52 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 21 Dec 2001 17:04:52 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.95) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 21 Dec 2001 17:04:50 -0000
Message-ID: <004d01c18a42$155d5f80$5feac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" Subject: NACCIYAR THIRUMOLI 7 TAMIL
Date: Fri, 21 Dec 2001 21:50:40 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14152
மார்கழி நாள் ஏழு 22.12.2001
நாச்சியார் திருமொழி
இரண்டாம் திருமொழி
திருப்பாவை மற்றும் திருவெம்பாவை இலக்கியங்களின் சிறப்புக் கூறுகளில் ஒன்றாக அமைவது நாடகப் பாங்கு.
திருப்பாவையில் று முதல் பதினான்கு வரையிலான பாடல்களில் நாடக உரையாடல்கள் வழியே தோழியர்
ஒருவரை ஒருவர் எழுப்பும் விதம் விவரிக்கப்படுகிறது. இதில் இரண்டு விதமான பாடல்களைக் காண்கிறோம்.
கூற்றும் எதிர்க் கூற்றுமாக அமைந்த பாடல்கள் ஒரு வகை. ஒரு பக்கக் கூற்றை மட்டுமே உள்ளடக்கி இரு
கூற்றுகளுக்கு இடையே அமைந்த மறு கூற்றுகளை ஊகித்துணர வைக்குமாறு அமைவது இன்னொரு வகை. இரண்டிலும்
தெளிவாகப் புலப்படுவது சுவாரசியமான நாடகப்பாங்காகும்.
நாச்சியார் திருமொழியிலும் இவ்வகை நாடகப் பாங்கைக் காண்கிறோம். இரண்டாம் திருமொழியிலும்
மூன்றாம் திருமொழியிலும் இந்நாடகப் பாங்கு தெளிவுறத் தெரிகிறது. இரண்டாம் திருமொழியில் காமன்
நோன்பின் ஓர் அங்கமாகத் தாம் செய்து வைத்த மணல் வீடுகளை அழிக்க வேண்டாம் என்று ய்க்குலத்துப் பெண்டிர்
வேண்டிக் கொள்ள அதற்கு மறுமொழிகள் கூறிக் கொண்டே மேலும் மேலும் சிற்றில்களைச் சிதைக்கும் கண்ணனைக்
காண்கிறோம். மூன்றாம் திருமொழியில் கண்ணன் கவர்ந்த தம் டைகளைத் தருமாறு கேட்கும் போது நிகழ்ந்த
நாடகக் காட்சிகளை ண்டாள் அமைத்திருக்கிறார்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. முதல் திருமொழியில் காமனை முன்னிட்டு இறைவனோடு
தன்னைச் சேர்த்து வை என்று பாடும் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்தவை அல்ல. அப்படியே பறவைகளையும்
மேகங்களையும் பூக்களையும் நோக்கிப் பேசுமாறு அமைந்த பாடல்களிலும் நாடகப்
பாங்கு இல்லை. இனியும் இறைவனிடம் இருந்து பிரிந்து இருக்க முடியாது. தன்னை அவனிடம் கொண்டு சேருங்கள்
என்று பாடும் பாடல்களிலும் நாடகப் பாங்கு இல்லை. அவை தனிக் கூற்றுக்களாக, பிரார்த்தனைகளாக,
வேண்டுகோள்களாக அமைந்தவை. னால் இரண்டு மற்றும் மூன்றாம் திருமொழிகளில் இந்த நாடகப் பாங்கு
தெற்றெனத் தெரிகிறது.
தம் மயக்கத்தை மறைக்க முயங்கி முரண்பட்டுப் பேசும் ய்ச்சியர் கூற்றுக்களாக இரண்டாம் திருமொழி அமைகிறது.
முதல் பாடலில் நீ எம் அத்தை மகனாகப் பிறந்தால் உன்னை மணந்து கொள்ளும் சாத்தியம் பலிதமாகி எமது
வேதனை தீருமே என்று சொல்லும் ய்ச்சியர் உன்னைக் கணவனாக நோற்க அன்றோ சிற்றில் அமைக்கிறோம்!
அழித்துவிடாதே! என்ற கூறுவதாக நேரிடையாகப் பொருள் கொள்ளலாம்தான். என்றாலும் தீமை செய்யும்
சிரீதரா என்ற அழைப்பைச் சரியாகப் பொருத்திப் பார்க்கும் போது உன்னைக் கணவனாகப் பெற்றால் நாங்கள்
மேலும் நலிவு அடைவதே அன்றிச் சுகித்திருப்பது சாத்தியமோ என்று கேட்பதாகக் கொள்வர் உரையாசிரியர்.
அதற்கு பதிலாகக் கண்ணன், சரிதான். உங்களை நினைக்காத என்னை நினைத்துச் சிற்றில் அமைத்தீர்கள். இது
எதற்கு? என்று சொல்லிச் சிற்றில்களை அழிக்கப் போகிறான். அப்போதும் தம் நிலையை விட்டுத்
தராமல் இது உனக்கன்று. பங்குனி மாதக் காமன் விழாவில் வீதி வலம் வரும் காமனுக்காகச் செய்தது இது என்று
அவர்கள் கூற கண்ணன் அப்படிக் காமனுக்காகச் சிற்றில் அமைப்பது அந்நியக் காரியம் என்று சொல்லி அவற்றை
அழித்துக் கொண்டே இருப்பதாக ஒரு நாடகக் காட்சி முதல் பாடலில் விரிகிறது.
இரண்டாம் பாடலிலும் நாடகம் தொடர்கிறது. முதுகெல்லாம் வலிக்க நாளெல்லாம் இழைத்த குடில்கள். இதைக்
கண்ணன் கண்கொண்டு பார்த்திருந்தால் ய்ச்சியர் ர்வத்தை உணர்ந்து கொள்ள முடியும். அவனோ அவற்றைச் சிதைக்கக்
காண்கிறார்கள். இது என்ன? ஊழிக் காலத்தில் சிசுவாகத் துயிலமர்ந்த விவரத்தைக் கூறி அப்போது மூடிய
கண்கள் இன்னமும் திறக்கவில்லையோ என்று சொல்வார்கள் போல அமைகிறது இரண்டாம் பாடல். செங்கண்
சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ என்று திருப்பாவையில் கேட்டதைப் போல இங்கும் உன் கண்களில் இருந்து
கருணை எம்மேல் எம் சிற்றில் மேல் பொழியாமல் இருக்க நாங்கள் செய்த பாவமே காரணமாக இருக்கும் என்று
சொல்வது இரண்டாம் பாடல்.
மூன்றாம் பாடலிலும் அவன் பக்கம் மெளனமான நாடகக் காட்சி தொடர்கிறது. சிற்றில்களைக் காலால்
மிதித்தும் கையால் அழித்தும் சிதைத்துக் கொண்டும் முகத்தில் முறுவலோடு அவற்றைச் செய்து வைத்த ய்ச்சியரைக்
கடைக் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கண்ணன். அவனைப் பார்த்துத் துன்பம் தவிர்க்கிறவன் என்று
கொண்டே உன் மேல் சை வைத்தோம். கடலில் பாம்பணையில் உறைகிறவன். மிடுக்கான சிங்கம் போன்றவன்.
கஜேந்திரன் துன்பம் தொலைத்தவன். இப்படியா எமக்குத் துன்பம் செய்வது? வளையல்களை அணிந்த கைகளால் மிக
வலிக்கும்படி மணலைப் புடைத்துச் சிறு கல்லும் நீக்கிக் கட்டிய சிற்றில்களை இப்படிச் சிதைக்கிறாயே
என்கிறார்கள்.
மூன்றாம் பாடலுக்கும் நான்காம் பாடலுக்கும் இடையே கண்ணன் விட்டுவிட்டுப் பெய்யும் மழையைப் போல
ய்ச்சியரிடம் விநயமான வார்த்தைகளும் குழைந்த பேச்சும் அருகே வருதல் தொடுதல் போன்ற செய்கைகளுமாக
அவர்களுக்கு மையல் ஏற்றி மயக்கி இருக்க வேண்டும். அதில் மயங்கிப் போன ய்ச்சியர் சற்றே சுருதி
தளர்ந்தவர்களாக உன் முகத்தில் என்ன வசீகரம் இருககிறதோ என்கிறார்கள். இதற்கு மேலும ஏதாவது பேசப்
போக அது அவன் நெஞ்சு புண்படும்படி கிவிடுமோ என்று தாமரைக் கண்ணனே எங்கள் சிற்றில் சிதைக்காதே
என்கிறார்கள்.
ஐந்தாம் பாட்டில் இன்னமும் சுருதி தளர்ந்து போகிறது. வெண்மை நிறத்தில் மிகச் சிறு பொடியாகப் புடைத்து
எடுத்த மணலில் கட்டிய சிற்றில்கள் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விசித்திர வனப்புடையவவை.
அந்த வனப்பன்றியும் அவற்றைச் சிதைக்கிறாயே என்று உள்ளம் உருகுகிறது. தவிர இப்படிச் செய்து விட்டாயே
என்ற ரோஷம் எங்களுக்கு இல்லை மாதவா, கேசவா என்கிறார்கள். உன் முகத்தில் இருப்பவை உண்மையில்
பார்வையுள்ள கண்கள் என்றால் இவற்றைச் சிதைக்க மாட்டாய் என்கிறார்கள்.
றாம் பாடலில் இலங்கையை அழித்தது உன் வீரத்தின் வெளிப்பாடு. இன்னமும் முற்றாத முலைகளை உடைய
சிறுமியர் கட்டிய சிற்றில்லை அழிப்பது என்ன சீலம் என்கிறார்கள். ஐந்தாம் பாடலுக்கும் றாம்
பாடலுக்கும் இடையே கண்ணன் இன்னதென வாய்விட்டுச் சொல்ல முடியாத குறும்புகளைப் பண்ணியிருக்க வேண்டும்.
அதனால்தான் சிறுமியிரிடம் இதுவோ என்ற தொனி இந்தப் பாடலில் தொனிக்கிறது. அதனால்தான் ஏழாம்
பாடலில் பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் நன்றாயிருக்கும் என்கிறார்கள். இன்சுவை கொட்டும்
வார்த்தைகளை அவன் பேசியிருக்க வேண்டும். இதுவெல்லாம் பொருள் தருமளவுக்கு முதிர்ந்தவர்கள் அல்ல நாங்கள்.
நாங்களோ விவரம் தெரியாத சிறு பெண்கள் என்கிறார்கள். அதனால்தானோ என்னவோ அவன் மணவாட்டியர்
பேரில் ணையாகத் தம் சிற்றில் சிதைக்க வேண்டாம் என்கிறார்கள்.
ஏழாம் பாடலுக்கும் எட்டாம் பாடலுக்கும் இடையே இன்னொரு நாடகக் காட்சி. எங்களது சிற்றில்லை தொட்டு
உதைத்து அழிப்பதால் உனக்கு என்ன நன்மை என்று இவர்கள் கேட்க இல்லைதான். உங்களைத் தொட்டுப் பார்ப்பதில்
அல்லவா எனக்கு நன்மை இருக்கிறது என்று அவர்களை இவன் தொட்டுப் பார்க்கிறான். அவர்களோ
தீண்டலின் இன்பம் அறியாச் சிறுமிகள். அவர்கள் சுருங்கி விலக இவன் எனது தீண்டல் அவ்வளவு மலிவாகப்
போய்விட்டதோ என்று கூறித் தன் பொலிவு தோன்றச் சக்கரக் கையனாகத் தோற்றம் தருகிறான். யினும்
ய்ச்சியர் விட்டுத் தராமல் நீ ஈஸ்வரன்தான். என்றாலும் நாக்குக் கசந்தால் வெல்லம் கசந்து போய் விடும்.
அப்படியே எமக்குப் பிரியம் இன்னதெனத் தெரியாத பருவத்தே எம்மோடு மையல் செய்ய நீ வந்தால்
எமக்கு இன்பம் சித்திக்குமோ? என்கிறார்கள்.
ஒன்பதாம் பாடலில் ய்ச்சியர் தமது கையறு நிலையைத் தெளிவாக்கி விடுகிறார்கள். சிற்றில்லை மட்டுமா
சிதைக்கிறாய்? எங்கள் சிந்தையைக் கூட அழித்து விடுவாய் போலும். பக்கத்தில் பெரியவர்கள்
நிற்கிறார்கள் என்ற லஜ்ஜை கூடப் பாராது இப்படியா விளையாடுவது என்று வெட்கித் தலைகுனிகிறார்கள்.
ஒன்பதாம் பாடலில் கொண்டாடியிருப்பது செளலப்யம் என்று வடமொழியிலும் எளிவரல் என்று தமிழிலும்
சொல்லும் இறைவனின் சிறப்பு தன்னடியார்க்கென்று அவன் என்றும் எளியவனாக வந்து அருள் தரத் தயாராக இருக்கும்
போது இது என்ன தேவையற்ற காமன் நோன்பு என்று கேட்பதைப் போல அமைகிறது, இந்தக் காட்சி. இதைக்
குறிக்கத்தான் அடைத்த கதவினதாகிய முற்றத்திலும் புகுந்து ய்ச்சியர் இடையே தோன்றுகிறான் என்கிறது இந்தப்
பாடல்.
இரண்டாம் திருமொழியிலும் ழ்வார்கள் இலக்கியத்துக்கே உரிய அவதார மேன்மை குறித்துப் பாடும் வழக்கம்
சிறப்புறத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி இறைக் குணங்களில் மிகவும் சிறப்பான செளலப்யத்தைக்
கொண்டாடும் வகையில் நாடகக் காட்சிகளைத் தன்னுள் கொண்டிருப்பது நாச்சியார் திருமொழியின் இரண்டாவது
திருமொழியின் சிறப்பாக அமைகிறது.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com