From ramaninaidu@... Fri Dec 21 09:05:56 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 21 Dec 2001 17:05:55 -0000
Received: (qmail 79355 invoked from network); 21 Dec 2001 17:05:55 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 21 Dec 2001 17:05:55 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 21 Dec 2001 17:05:55 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.95) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 21 Dec 2001 17:05:52 -0000
Message-ID: <006601c18a42$3a6bc320$5feac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" Subject: THIRUVEMPAVAI 7 TAMIL
Date: Fri, 21 Dec 2001 21:54:48 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14156
திருவெம்பாவை - நாள் ஏழு - பாடல் ஏழு
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளாக் கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய்.
நேற்றுச் சொல்ல விட்டுப் போனதைச் சொல்லி ஏழாவது பாடலைப் பார்க்கலாம்.
திருவெம்பாவையின் முதல் ஐந்து பாடல்கள் பாவை நோன்பிருக்கும் பாவையர் தோழியரைத்
துயிலெழுப்பினார்கள். கதவைத் திறக்கச் சொல்லி வலியுறுத்தினார்கள்.
திருப்பாவையில் தலைவி ஒருத்தி நோன்பிருப்பாரோடு வந்து சேராதிருக்க அவளைப் பிற கன்னியர்
துயிலெழுப்புவதாகத்தான் பாடல்கள் அமைந்திருப்பதாக வழக்கமான விளக்கம் சொல்லப்படுகிறது.
திருவெம்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பவர்களோ முதல் ஐந்து பாடல்களில் ஒவ்வொருவராக ஐந்து
தோழியரைத் துயிலெழுப்புவதாக விளக்கம் தரப்படும்.
முதல் பாடலில் ஒன்பது சக்திகளில் மனோன்மணி என்னும் சக்தி ஸர்வபூதமணி என்ற சக்தியை எழுப்புவதாகக்
கொள்ளப்படும்.
இரண்டாவது பாடலில் ஸர்வ பூதமணி என்னும் சக்தி பலப்பிரதமணி என்ற சக்தியைப் பரிகசித்து எழுப்ப முயல
பலப்பிரதமணி தானும் பரிகசித்து விட்டு எழுந்து வருவதாகக் கொள்ளப்படுகிறது. மனோன்மணி, சர்வ பூத
தமணி, பலப்பிரதமணி என்ற மூவரும் தோழிகளுடன் நான்காவது சக்தியைத் துயிலெழுப்பப் போகிறார்களாம்.
மூன்றாவது பாடலில் பலப்பிரதமணி என்னும் சக்தியும் பிறரும் பலவிகரணி என்ற சக்தியை எழுப்புவதாகக்
கருதுவர்.
நான்காவது பாடலில் பலவிகரணி என்னும் சக்தி கலவிகரணி என்ற சக்தியை எழுப்ப எல்லோரும் ஆறாம்
சக்தியாகிய காளியை நோக்கிப் போகும் குறிப்பு உள்ளது என்பர்.
ஐந்தாவது பாடலில் காளியை எழுப்ப காளியும் வேறு சக்திகளும் ரெளத்திரி சேட்டை வாமை என்ற சக்திகளை
எழுப்புவதாக உள்ளுறை கொள்ளப்படும்.
நவதேவதைகள் அசுத்த மாயையை உசுப்பி மண் ஈறான பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற அடிப்படை சைவக்
கருத்து சிவபூசையின் தொடக்கத்தில் நவசக்திகளை எழுப்பும் விதத்தான் அமைகிறது. திருவெம்பாவை என்ற
சிவ கைங்கரியத்திலும் அப்படியே நவசக்திகளை எழுப்புவதாக ஐந்து பாடல்கள் அமைகின்றன.
ஆறாவது பாடலில் பாவை நாடகத்தில் ஒரு திருப்பம் காணக் கிடக்கிறது. இதுவரை தோழியரை எழுப்புமாறு
அமைந்த பாடல்கள் போய் ஆறாம் பாட்டு முதல் ஒன்பதாம் பாட்டு வரை எல்லோரும் சேர்ந்து வீதியில் செல்வதும்
அப்போது நிகழும் உரையாடலும் பாட்டின் பொருளாக அமைகின்றன.
ஆறாம் பாடலில் முன்னிலையில் வைத்துத் தோழியிடம் பேசுவதிலும் அவளையே படர்க்கையில் குறிப்பதும்
காணப்பட வேண்டியது. ஒரு நல்லாசிரியன் போல் உறக்க மயக்கத்தில் இருக்கும் மான்விழியாள் உலக மயக்கத்தை
உதறித் தள்ளிவிட வேண்டியதை நினைவுறுத்துகிறாள்.
ஏழாம் பாடலில் இத்தொனி தொடர்கிறது. அய்யோ பாவம் நீ என்ன செய்வாய்... உன் உறக்கமன்றோ நீ
செய்ய வேண்டியதைச் செய்யாது வைத்திருக்கிறது என்ற பாவத்தை இந்தப் பாடலில் காண்கிறோம்.
எங்களுடன் வந்து கலந்து கொண்டும் இன்னமும் உறங்குவது போலிருக்கும் இது என்ன விளையாட்டு? சிவன் அமரரும்
நினைத்துத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குச் சீர்மை உள்ளவன். அவனுக்குரிய சின்னங்களை ஒலிக்க சிவ
சிவ என்கிறவள் நீ. சிவன் பெயரைச் சொல்ல வாய் திறந்த அளவில் அனலில் இட்ட மெழுகு போல உருகிப்
போகிறவள் நீ. ஆனால் இன்றோ அவனை என்னவன், என் அரசன், என் இன்னமுது என்று நாங்கள் பலரும் பலவும்
சொல்லிப் பாடவும் நீ இன்னமும் உறக்கத்திலேயே இருப்பதைப் போலிருக்கிறதே. அய்யோ பாவம் நீ என்ன
செய்வாய்? உன் உறக்கமன்றோ நீ செய்ய வேண்டியதைச் செய்யாது வைத்திருக்கிறது என்கிறார்கள்.
ஒவ்வொருவருக்குமான தனி இயல்புகள் உண்டு. அவ்வியல்புகள் மாறிப் போய்விடக் கூடாது. வக்கிரப்பட்டு
விடக்கூடாது. அப்படி நேர்ந்தால் செயலில் குழப்பம்தான் மிஞ்சும். இயற்கை நெறி ஒழுங்கானது. இயல்பானது.
தூண்டுதல் இன்றிச் செயல்படுவது. மறதி, போதை, மயக்கம், பொருந்தாச் சேர்க்கை போன்றவற்றுக்கு இடம்
கொடுத்தால் இயல்பில் மாற்றமும் செயலில் குழப்பமும் உண்டாகும்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
இதுவும் வள்ளுவரின் வாக்கு.
செய்தக்க அல்லன செயக் கெடும். விரைந்து செய்ய வேண்டியதில் தாமதம் கூடாது. இயல்பிலேயே பக்திக்
கனிவுடைய கன்னி தாமதம், மறதி, சோம்பல், தூக்கம் ஆகியன வயப்படுதல் கூடாதல்லவா? சுதர்மத்துக்கு அவள்
வந்து சேர வேண்டும் என்பதே தோழியின் கருத்து.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com