From ramasamis@... Fri Dec 21 09:46:49 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 21 Dec 2001 17:46:50 -0000
Received: (qmail 92112 invoked from network); 21 Dec 2001 17:46:50 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 21 Dec 2001 17:46:50 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.237) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 21 Dec 2001 17:46:49 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 21 Dec 2001 09:46:49 -0800
Received: from 24.190.41.151 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Fri, 21 Dec 2001 17:46:48 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Houston bharathi vizha
Date: Fri, 21 Dec 2001 11:46:48 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 21 Dec 2001 17:46:49.0083 (UTC) FILETIME=[773C34B0:01C18A47]
From: "Ramasami Subbaier" X-Originating-IP: [24.190.41.151]
X-Yahoo-Group-Post: member; u=2188604
X-Yahoo-Profile: subbaierramasami
X-Yahoo-Message-Num: 14159
ஹூஸ்டனில் டிசம்பர் 15ந்தேதி பாரதி கலாமன்றம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழாவில் நானும் கவிஞர்
மதுர பாரதியும் கலந்து கொண்டோம்.
14தேதி காலை சிகாகோவிலிருந்து நான் கிளம்பிய பொழுது,வானம் பனிப்பூ தூவி என்னை வழியனுப்பி
வைத்தது. அன்றுதான் இவ்வாண்டின் முதல் பனி விழுந்தது.
மேகமூட்டம் அதிகம் இருந்ததால் விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்புமா என்ற கவலை.11-25க்கு விமானம்
கிளம்பும். நான் 9 மணிக்கே சென்றுவிட்டேன்
பாதுகாப்புச் சோதனையில் எல்லாவற்றையும் திறந்து காட்டச் சொல்கிறார்கள்(பைகளைத்தான்).என்மனைவி
எப்பொழுதும் விபூதிப் பொட்டலம் எடுத்து வைப்பாள். அன்று எடுத்து வைத்திருக்கக்கூடாதே என்று கவலை. அது
ஆந்த்ராக்ஸ் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு என் தலையில் விழுந்தால் என்ன செய்வது.? ஷேவிங்ஸ்
செட்டில் கத்திரி வைத்திருக்கக் கூடாதே என்று இன்னொரு கவலை,பயம்
'என்னைக் கவலைகள் தின்னாத் தகாதென்று
உன்னைச் சரண் புகுந்தேன்"
என்றும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே '
என்றும் பாடிய பாரதிக்கு எடுக்கும் விழாவில் கலந்துகொள்ளப் போகும் நான் இப்படி சின்னச் சின்ன
விஷயங்களுக்குக் கவலைப் படுவதும் பயப்படுவதும் பொருத்தமில்லைதான். படிக்கிறோமே தவிர எங்கே
நடைமுறைப் படுத்த முடிகிறது!
நல்ல வேளையாக ஒன்றும் இல்லை.
பை சோதனை முடிந்ததும் தொப்பை சோதனை தொடங்கியது. மெட்டல் டிடக்டர் வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி
மிக நெருக்கமாக சோதனை செய்தாள். சற்று நீண்ட சோதனையாக இருந்தாலும் சங்கடப் படுத்தவில்லை.
மீண்டும் விமானத்துக்குச் செல்லும் வாயிலருகே சோதனை. அவர்களுக்குத் தெரியாத பெயராக இருந்தாலோ
அல்லது பாஸ்போர்ட்டை அடையாளமாகக் காட்டினாலோ பல சோதனைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது. இதில்
என்ன கொடுமையென்றால் ஒரு பெண்மணிக்கு மெட்டல் டிடக்டர் சோதனை செய்தபோது மார்பகப் பகுதியிலிருந்து
சப்தம் வந்தது. சோதனை செய்த பெண்மணி "உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பார்க்கலாமா" என்று எல்லோர்
முன்னிலையிலும் கேட்டதுதான்.
நல்லவேளையாகச் சரியான நேரத்தில் விமானம் கிளம்பியது. மாலை 5-30 மணிக்கு ஹூஸ்டனை அடைந்தேன்.
வெளியே வந்து சாமான் எடுக்கும் பகுதியத் தாண்டி வந்தால் திடீரென ஒரு ஒளி. நிமிர்ந்து பார்த்தால்
டாக்டர் நாக கணேசன் அங்கே நின்றுகொண்டிருந்தார்.. அவரை முன்பு பார்த்திராவிட்டாலும் அந்த ஒளியும்
அவர்முகத்தில் ஊறிய தமிழும் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டன.
மறுநாள் பாரதி விழா.. அதில் நான் 'பாரதியின் வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பில் ஒருமணி நேரம்
பேசினேன் .அதை முழுக்க எழுதுவதென்றால் ஒரு புத்தகம் போட வேண்டியதிருக்கும்.
எனவே ஹூஸ்டனுக்கும் பாரதிக்கும் என்ன தொடர்பு என நான் பேசியதை மட்டும் இங்கே இடுகிறேன்.
_________________________________________________________________
Join the worlds largest e-mail service with MSN Hotmail.
http://www.hotmail.com