From ramasamis@... Fri Dec 21 13:02:26 2001
Return-Path:
X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 21 Dec 2001 21:02:27 -0000
Received: (qmail 87347 invoked from network); 21 Dec 2001 21:02:27 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 21 Dec 2001 21:02:27 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.208) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 21 Dec 2001 21:02:25 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 21 Dec 2001 13:02:25 -0800
Received: from 24.190.41.151 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Fri, 21 Dec 2001 21:02:25 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: houston and bharathi
Date: Fri, 21 Dec 2001 15:02:25 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 21 Dec 2001 21:02:25.0723 (UTC) FILETIME=[CAD158B0:01C18A62]
From: "Ramasami Subbaier"
X-Originating-IP: [24.190.41.151]
X-Yahoo-Group-Post: member; u=2188604
X-Yahoo-Profile: subbaierramasami
X-Yahoo-Message-Num: 14160


ஹூஸ்டனும் பாரதியும்-1

ஹூஸ்டனுக்கும் பாரதிக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்?

ஹூஸ்டனில் வானவியல் ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்பதும், அங்கிருந்துதான் விண்வெளிக்கலங்கள்
கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதும் நமக்கு நன் கு தெரியும்.

பாரதியும் வான நூலில் அதிக ஆர்வமுள்ளவன். வானநூல் பயிற்சி கொள் என்று தனது புதிய ஆத்தி சூடியில்
சொல்கிறான்.
விநாயகர் நான்மணிமாலையில்,
'படர்வான் வெளியில் பலகோடி
கோடிகோடிப் பலகோடி
இடராதோடும் மண்டலங்கள்
இசைத்தாய் வாழி இறையவனே'
என்கிறான்,

விண்வெளியின் தூரத்தை அளக்க ஒளியாண்டு என்னும் அளவை பயன்படுத்தப் படுகிறது. மண்டலங்களுக்கிடையே உள்ள
தொலைவின் பிரம்மாண்டத்தைச் சுட்டிக் காட்ட
பாரதி ஒரு அளவை சொல்கிறான்.

"மண்டலத்தை அணுவணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை"

என்கிறான். பஞ்ச பூதங்களால் இவ்வுலகு படைக்கப் பட்டதை எவ்வளவு அழகாகச் சொல்கிறான் பாருங்கள்

"படைப்புக் கடவ்ளே, நான்முகனே,
பண்டே உலகைப் படைத்தனைநீ என்கின் றார்
நீரைப் படைத்து, நிலத்தைத் திரட்டிவைத்தாய்
நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய், காணரிய வானவெளி
தோற்றுவித்தாய்,நின்றன் தொழில் வலிமை யாரறிவார்?
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத
கொள்ளைப் பெரியஉரு கொண்ட பலகோடி
வட்ட உருளைகள்போல் வானத்திலண்டங்கள்
எட்ட நிரப்பி அவை எப்போதும் ஓட்டுகிறாய்
எல்லா மறைவில் இருப்பதற்கே சக்திகளைப்
பொல்லாப் பிரமா,புகுத்திவிட்டாய் அம்மாவோ"
என்கிறான்

சாதாரண வருஷத்துத் தூமகேது என்ற பாடலில்
"எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை யியன்றதோர் வாயுவால்
புனைந்தநின் நெடுவால் போவதென்கின்றார்"
என்று வா.ல்மீனின் அமைப்பை விளக்குகிறான்

"சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
என்றான். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிந்ததில் ஹூஸ்டனுக்கு என்ன பங்கு என்பது வெள்ளிடை மலை.அந்தத்
திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளும் இருந்தனர் என்று கேள்வி

1900வாக்கில் ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். 1908 ல்
பிரான்ஸில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டார்கள்
1909ல் சென்னையில் சிம்சன் நிறுவனம் ஒரு விமானத்தை உருவாக்கியது. அதைப் பற்றி பாரதி
எழுதியிருக்கிறான். அவனுடைய மனத்தில் விமானத்தைப் பற்றிய
எண்ணம் நன்கு பதிந்திருக்க வேண்டும். அவன் மனம் மூன்று உலகும் சூழ்ந்து பறக்கும் விமானத்தைக் கற்பனை செய்தது.
அது மட்டுமல்ல, ஆளின்றிப் பறக்கும்
விமானத்தையும் அவன் கற்பனையில் கண்டான்.

_________________________________________________________________
Join the worlds largest e-mail service with MSN Hotmail.
http://www.hotmail.com