From ramasamis@... Fri Dec 21 14:48:59 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 21 Dec 2001 22:48:58 -0000
Received: (qmail 80880 invoked from network); 21 Dec 2001 22:48:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 21 Dec 2001 22:48:56 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.133) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 21 Dec 2001 22:48:56 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 21 Dec 2001 14:48:56 -0800
Received: from 24.190.41.151 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Fri, 21 Dec 2001 22:48:55 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] houston and bharathi-2
Date: Fri, 21 Dec 2001 16:48:55 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 21 Dec 2001 22:48:56.0150 (UTC) FILETIME=[ABCF1F60:01C18A71]
From: "Ramasami Subbaier" X-Originating-IP: [24.190.41.151]
X-Yahoo-Group-Post: member; u=2188604
X-Yahoo-Profile: subbaierramasami
X-Yahoo-Message-Num: 14161
ஹூஸ்டனில் பாரதி-2
விஞ்ஞான அறிவு கைவரப் பெற்றவனாகப் பாரதி எவ்வாறு திகழ்ந்தான் என்பதற்குச் சில சான்றுகள் தந்தேன்.
இதோ இன்னொன்று
கடலில் மேல்மட்டத்துக்கும், வெவ்வேறு தளங்களுக்கும் இடையே வெப்ப நிலை மாறுபாடு உண்டு . குளிர்ந்த பகுதி,
வெவ்வேறு வெப்ப நிலை உள்ளவை, மற்றும் நல்ல சூடு உள்ளவை என்று பல நிலைகள். இவ்வெப்ப நிலை
மாறுபாட்டைப் பயன்படுத்தி மின்சாரம் எடுக்கிறார்கள் இதற்குocean thrmal energy
conversion(OTEC) என்று பெயர்.
பாரதி மாகாசக்திக்கு வாழ்த்து என்ற பாடலில்
"சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும், சுட்ட வெந்நீரும்என
ஒத்த நீர்க்கடல் போல"
என்கிறான்
ஞாயிறு மண்டலத்தைப் பற்றிச் சொல்லும் போது
"ஞாயிறே, நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம்ரு ஒளி பெறுகின்றது
பூமி,சந்திரன்,செவ்வாய்,புதன்,சனி.வெள்ளி, வியாழன்,யுரேனஸ், நெப்ட்யூன் முதலிய
பலநூறு வீடுகள்--
இவையெல்லம் நின் கதிர் பெற்ற மாத்திரத்திலே ஒளி பெற்று நகை செய்கின்றன".
ஒன்பது கிரகங்கள் தானே, பாரதி ஏன் பலநூறு வீடுகள் என்று சொல்கிறான்?
ஒருவேளை ஒவ்வொரு கிரகத்தின் உபகிரகங்களையும், ஆச்ட்டிரய்ட்ஸ் பற்றியும் சொல்கிறானோ?
'நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்'
என்றான்
பறப்புமுணர் என்பதை ஏனோ இத்தனைகாலமும் 'பரப்புமுணர்"என்ற பொருளிலேயே படித்துவந்திருக்கிறேன்.
ஹூஸ்டனுக்குக் கிளம்புமுன் தான் பறப்புமுணர் என்பதை அறிந்தேன். இரண்டுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு!
ஓரெழுத்து மாறுவதால் பொருள் எவ்வாறு மாறுபடும் என்பதற்கு
ஒருசில எடுத்துக்காட்டுகள்
ஒரு கட்சித்தலைவர் தனது செயலாளரை ஒரு அறிக்கை தயாரிக்கச் சொன்னார். அதில் ஒரு வாக்கியம்"
எங்கள் கட்சி தன்மானத்தோடு வாழ்வது. எங்கள் பலமே தொண்டர்கள்தான்."
அச்சடித்த அறிக்கையைத் தலைவர் வாங்கிப் பார்த்தார். அவர் முகம் கோபத்தி சிவந்தது.
அந்த அறிக்கையில்" எங்கள் கட்சி சன்மானத்தோடு வாழ்வது ,எங்கள் பலமே குண்டர்கள்தான்"
என்றிருந்தது.
இன்னொரு நிகழ்ச்சி, கவிமாமணி மஹி எனக்குச் சொன்னது. உண்மை நிகழ்ச்சி.
கல்யாணப் பத்திரிகை அச்சுக்குக் கொடுக்கப் பட்டது;அதில்
"கன்னிகாதானம் செய்து கெடுப்பதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு" என்று
அச்சாகியிருந்தது.
சில சமயங்களில் பொருள் சிறப்பதும் உண்டு.
ஒரு கட்டுரையில்
"மக்கள் தொடர்பு என்பது விளம்பரமல்ல. அதை அப்படிப் பயன்படுத்துவது எதிர் விளைவை ஏற்படுத்தும்"
என்று எழுதிக் கொடுத்தேன்.'அதிர் விளைவை ஏற்படுத்தும்' என்று அச்சாகியிருந்தது. பொருள் இன்னும்
சிறப்பாயமைந்தது
நடையும் பரப்புமுணர் என்றால் வேகமும் விரிவும் உடைய என்று பொருள்
பறப்பு என்பதற்கு, விரைவு, வேகம், பறத்தல் என்று அகராதி பொருள் சொல்கிறது.
பறப்பும் உணர் என்றால் பறப்பதையும் உணர்வது, அதாவது தானே உணர்ந்து பறப்பது.
அதாவது ஆளே இன்றித் தானாகப் பறப்பது.
நடையும் பறப்புமுணர் வண்டியென்பதைச் சாதாரண நடைவண்டியாய் எண்ணிவிடக் கூடாது என்றுதானோ என்னவோ
வேறோரிடத்தில்
"முன்றிலில் ஆடிடும் வண்டியைப் போலன்று மூன்றுலகும் சூழ்ந்தே நன்று திரியும் விமானம்" என்கிறான்
டாக்டர் கணேசனிடம்" ஆளின்றிப் பறக்கும் 'பறப்புமுணர் வண்டி இருக்கிறதா?.
என்று கேட்டேன்.
"நாளை பார்க்கலாமே!" என்றார் அவர்.
_________________________________________________________________
Send and receive Hotmail on your mobile device: http://mobile.msn.com