From eramurug@... Fri Dec 21 15:57:47 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 21 Dec 2001 23:57:46 -0000
Received: (qmail 68528 invoked from network); 21 Dec 2001 23:57:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 21 Dec 2001 23:57:46 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 21 Dec 2001 23:57:46 -0000
Message-ID: <20011221235746.96330.qmail@...>
Received: from [210.214.128.184] by web14810.mail.yahoo.com via HTTP; Fri, 21 Dec 2001 15:57:46 PST
Date: Fri, 21 Dec 2001 15:57:46 -0800 (PST)
Subject: Re: [agathiyar] houston and bharathi
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14162

வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் இலந்தையார் அவர்களே.

"சந்திர மண்டிலத்தியல் கண்டு தெளிவோம்" என்றவன் சட்டென்று அடுத்த
வரியில் "சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்" என்கிறானே -
அங்கே தான் அவன் மகாகவியாக விஸ்வரூபம் எடுக்கிறான். மனம் வானை
அளக்கும் போதும் தரையில் அழுத்தக் கால்பதித்து நடந்த மக்கள் கவிஞன் அவன்.

தோழர் எம்.பி.சீனிவாசனைத் தெரிந்திருக்கும். 'பாதை தெரியுது பார்',
"நிர்மால்யம்" (மலையாளம்) போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளர்.
பொதுவுடைமைக் கவிஞர் கே.சி.எஸ் அருணாசலத்தின் "சின்னச் சின்ன
மூக்குத்தியாம்", ஜெயகாந்தனின் "தென்னங் கீற்று ஊஞ்சலிலே" போன்ற
அழகான பாடல்களுக்கு இசையுருவம் கொடுத்தவர் அவர். சென்னை மாநகராட்சிப்
பள்ளிகளில் படிக்கும் ஆயிரக் கணக்கான குழந்தைகளை (சமுதாயத்தின்
அடித்தட்டு, விளிம்புநிலைகளிலிருந்து வந்த பிஞ்சுகள்) ஒரே குரலில் "பாரத
தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடி பயம் கொல்லுவார் - துயர் பகை
வெல்லுவார்" என்று பாட வைத்த மக்கள் கலைஞர் எம்.பி.எஸ். அவரது இசைக்குழு
இந்தப் பாடலைப் பாடும் போது "ஆயுதம் செய்வோம்..நல்ல காகிதம்
செய்வோம்" என்று வரும் வரிகளைப் பாடி விட்டுத் தொடர்ந்து
"ஆயுதம்..காகிதம்..செய்வோம்..செய்வோம்" என்று உச்ச ஸ்தாயியில்
முழங்குவார்கள். புல்லரிக்கும். ஆயுதத்துக்கு அடுத்ததாகக் காகிதத்தைச்
சொல்வதில் எழுத்தை விடுதலைப் போரில் ஆயுதமாகக் கையாண்ட
பத்திரிகையாளன் பாரதி என்ற அடுத்த பரிமாணமும் கிடைப்பதை எழுத்தாளர்
நண்பர் மாலன் குறிப்பிடுவார்.

ஹூஸ்டன் பாரதி விழா பற்றித் தொடருங்கள்.

அன்புடன்,
இரா.முருகன்


--- Ramasami Subbaier wrote:
>
> ஹூஸ்டனும் பாரதியும்-1
>
> ஹூஸ்டனுக்கும் பாரதிக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்?
>
> ஹூஸ்டனில் வானவியல் ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்பதும்,
> அங்கிருந்துதான் விண்வெளிக்கலங்கள்
> கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதும் நமக்கு நன் கு தெரியும்.
>
> பாரதியும் வான நூலில் அதிக ஆர்வமுள்ளவன். வானநூல் பயிற்சி கொள்
> என்று தனது புதிய ஆத்தி சூடியில்
> சொல்கிறான்.
> விநாயகர் நான்மணிமாலையில்,
> 'படர்வான் வெளியில் பலகோடி
> கோடிகோடிப் பலகோடி
> இடராதோடும் மண்டலங்கள்
> இசைத்தாய் வாழி இறையவனே'
> என்கிறான்,
>
> விண்வெளியின் தூரத்தை அளக்க ஒளியாண்டு என்னும் அளவை பயன்படுத்தப்
> படுகிறது. மண்டலங்களுக்கிடையே உள்ள
> தொலைவின் பிரம்மாண்டத்தைச் சுட்டிக் காட்ட
> பாரதி ஒரு அளவை சொல்கிறான்.
>
> "மண்டலத்தை அணுவணுவாக்கினால்
> வருவதெத்தனை அத்தனை யோசனை
> கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை"
>
> என்கிறான். பஞ்ச பூதங்களால் இவ்வுலகு படைக்கப் பட்டதை எவ்வளவு அழகாகச்
> சொல்கிறான் பாருங்கள்
>
> "படைப்புக் கடவ்ளே, நான்முகனே,
> பண்டே உலகைப் படைத்தனைநீ என்கின் றார்
> நீரைப் படைத்து, நிலத்தைத் திரட்டிவைத்தாய்
> நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தாய்
> காற்றை முன்னே ஊதினாய், காணரிய வானவெளி
> தோற்றுவித்தாய்,நின்றன் தொழில் வலிமை யாரறிவார்?
> உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத
> கொள்ளைப் பெரியஉரு கொண்ட பலகோடி
> வட்ட உருளைகள்போல் வானத்திலண்டங்கள்
> எட்ட நிரப்பி அவை எப்போதும் ஓட்டுகிறாய்
> எல்லா மறைவில் இருப்பதற்கே சக்திகளைப்
> பொல்லாப் பிரமா,புகுத்திவிட்டாய் அம்மாவோ"
> என்கிறான்
>
> சாதாரண வருஷத்துத் தூமகேது என்ற பாடலில்
> "எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை
> எண்ணிலா மென்மை யியன்றதோர் வாயுவால்
> புனைந்தநின் நெடுவால் போவதென்கின்றார்"
> என்று வா.ல்மீனின் அமைப்பை விளக்குகிறான்
>
> "சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
> என்றான். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிந்ததில் ஹூஸ்டனுக்கு என்ன பங்கு
> என்பது வெள்ளிடை மலை.அந்தத்
> திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளும் இருந்தனர் என்று கேள்வி
>
> 1900வாக்கில் ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கும் முயற்சியில்
> ஈடுபட்டார்கள். 1908 ல்
> பிரான்ஸில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டார்கள்
> 1909ல் சென்னையில் சிம்சன் நிறுவனம் ஒரு விமானத்தை உருவாக்கியது.
> அதைப் பற்றி பாரதி
> எழுதியிருக்கிறான். அவனுடைய மனத்தில் விமானத்தைப் பற்றிய
> எண்ணம் நன்கு பதிந்திருக்க வேண்டும். அவன் மனம் மூன்று உலகும் சூழ்ந்து
> பறக்கும் விமானத்தைக் கற்பனை செய்தது.
> அது மட்டுமல்ல, ஆளின்றிப் பறக்கும்
> விமானத்தையும் அவன் கற்பனையில் கண்டான்.
>
>
_________________________________________________________________
> Join the worlds largest e-mail service with MSN
> Hotmail.
> http://www.hotmail.com
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com