From perichandra@... Fri Dec 21 16:48:31 2001
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 00:48:30 -0000
Received: (qmail 9032 invoked from network); 22 Dec 2001 00:48:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 00:48:29 -0000
Received: from unknown (HELO web10008.mail.yahoo.com) (216.136.130.44) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 00:48:30 -0000
Message-ID: <20011222004829.72132.qmail@...>
Received: from [66.56.76.69] by web10008.mail.yahoo.com via HTTP; Fri, 21 Dec 2001 16:48:29 PST
Date: Fri, 21 Dec 2001 16:48:29 -0800 (PST)
Subject: Markazi Tamil Music Concert reviews
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@egroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Periannan Chandrasekaran
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14165

ஆமாம் மார்கழி வந்தது. தமிழிசைப் பருவம் பிறந்தது.
இதுகாறும் நடந்த நிகழ்ச்சிகளின் அலசல்:
http://www.chennaionline.com/musicseason2001/reviews/index.asp

கடந்த சில நாட்களில் செம்மங்குடி சிரீநிவாச ஐயர் இந்து நாளிகைக்கோ அன்றித்
தொலைக்காட்சிக்கோ கண்ட நேர்காணலில் தமிழிசை நிகழ்ச்சிகளில் குறைந்த மட்டம் 50% ஆவது
திருவாரூர் மும்மணிகளின் கிருதிகளைப் பாடாவிட்டால் சிறக்காதென்று கலக்கிவிட்டிருப்பதாகக்
கேள்வி.
தமிழ்மக்கள் இந்த இசையினின்று தம்மைத் தொலைத்துவிட்டு தம் தலைவிதியைப் பிறர் நிறுவ
விடுவது அவர்களுடைய தவறே. ஐயரைப் போய் என்னசெய்வது?

இன்னொரு புறம் ஒரு பெரிய தமிழிசையியல் அறிஞர் தமிழிசை நுணுக்கங்கள் பொதிந்த
திருப்புகழை விரித்துப் பாடாமல் துக்கடாவாகத் தமிழிசை நிகழ்ச்சிகளில் பாடுவது இசையழிப்புவாதிகளின்
(musical terrorists) செயல் என்கின்றார். அவரே பண்ணாராய்ச்சி மாநாடொன்றில் ஓதுவார்கள்
தமிழிசைக்கு முதன்மை கொடுத்துக் கற்பனையை ஓடவிட்டுக் கவர்ச்சியாக விரித்துப்பாடித் தேவாரத்தை
இசைப்பதில்லை; மொழிக்கு மட்டும் முதன்மை கொடுத்துச் சுருங்கப் பாடுகிறார்கள் என்று சொன்னபோது ஒரு
பெயர்பெற்ற ஓதுவார் தம் பெயரில் பலபத்து இசைநாடாக்களும் வெளிவந்துள்ள ஒருவர் கிண்டலாகக் கிளுக்கிச்
சிரித்ததாகச் செய்தி. அதிலிருந்து அவர் அம்மாநாட்டுக்குப்போய்ப் பேசுவதை நிறுத்திவிட்டாராம். மேலும்
இயற்றமிழ் மட்டுமே தேர்ந்த அ.ச.ஞானசம்பந்தம் போன்றோருக்கு அங்கே தலைமை கொடுப்பதும் இசைநோக்கம் சிதற
வழிவகுக்கிறதென்றார். தேவாரம் தமிழிசையின் களஞ்சியம் என்று வாய்கிழிக்கிறோம் ஆனால் அங்கே
பெயருக்குத்தான் இசை மற்றபடிச் செய்யுள்தான் முதன்மை.
தமிழர்கள் பொதுவாகவே மொழித் தமிழுக்கு மட்டும் முதன்மை கொடுத்து இசையைத் தம்மிடமிருந்து தொலைத்துக்
கோமாளிகள் ஆளாகிறார்கள் என்பது தேற்றம்.
லால்குடி சுவாமிநாதன் இசைக்கும் முதன்மை கொடுப்பவர்.
ஏற்கனவே ஓதுவார்கள் என்றால் சொல்லிவைத்த இசையை அப்படியே ஒப்பிப்பவர்கள் என்று பெயர்.
குற்றத்தைச் சுட்டினாலும் ஏற்கும் முதிர்ச்சியின்மை நல்லதன்று.
தமிழர்களிடம் வாத்தியவிசைக் கேள்வி முற்றிலும் இல்லை; திரைப்பட வசைஞர்கள் இடுபிச்சையை ஏந்தி
வாழ்கிறார்கள். முன்பெல்லாம் நாயன இசைநிகழ்ச்சிகளுக்குப் பெரிய பெயர்.
இராநெடுகக் கச்சேரி நடத்துவார்கள். அவர்களுக்கு நல்ல பெயர் இருந்தது.
தில்லானா மோகனாம்பாள் காலம்...

மொழிக்கு முதன்மை கொடுத்து அதுவாவது தேறியதென்றால் மொழியும் பெர்க்கெலிப் பேராசிரியர் ஆர்ட்டுசுச்
சொல்வதுபோல் அடுக்களைத் தமிழாகிவிட்டது.

நிலைமையை மாற்றச் செயல்படுவோமாக.
இதுவரை நுழையாதவர்கள் நுழைய:
திருப்பாவை:
நித்யசிரீ (வாணி பதிவுக் கூடம்), வேதவல்லி, சுதாஇரகுநாதன்(சோனி/ஏவிஎம்) பாடியவை
உண்டு.-கேட்டவுடன் கவரும் அமைப்பு.
காவடிச் சிந்து- எஸ். சௌமியா (ஏவிஎம்)
தாலாட்டு - எம்.எல்.வசந்தகுமாரி
இரங்கலாதா - பம்பாய் செயசிரீ (CDW)
பிந்துமாலினி - சுதா இரகுநாதன் - (அமுதம்)

எல்லாமே சென்னை ஏவிஎம் சங்கரா ஆலில் உள்ள கடையில் கிடைக்கும்.
தேவார மலர்கள் - லால்குடி சுவாமிநாதன்: கிரி டிரேடிங் ஏசன்சீசு வெளியீடு நன்றாயிருக்கும்.
ஏவீஎம் லால்குடி சுவாமிநாதனின் ஒரு சுவடியை வெளியிட்டுள்ளனர்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.

__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com