From ramasamis@... Fri Dec 21 17:32:17 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 01:32:17 -0000
Received: (qmail 17035 invoked from network); 22 Dec 2001 01:32:17 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 01:32:17 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 01:32:17 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 21 Dec 2001 17:32:17 -0800
Received: from 24.190.41.151 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Sat, 22 Dec 2001 01:32:17 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] houston and bharathi-3
Date: Fri, 21 Dec 2001 19:32:17 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 22 Dec 2001 01:32:17.0419 (UTC) FILETIME=[7DD215B0:01C18A88]
From: "Ramasami Subbaier" X-Originating-IP: [24.190.41.151]
X-Yahoo-Group-Post: member; u=2188604
X-Yahoo-Profile: subbaierramasami
X-Yahoo-Message-Num: 14168
'பறப்புமுணர்'விமானத்தைப் பார்ப்பதற்கு முன்பு ஒருசில கேள்விகள்.
1 வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்
நல்ல குளிர் இருக்கும் பனிமலையில் நம்மை ஏன் உலாவச் சொல்கிறான் பாரதி.
2. காசி நகர்ப் புலவர் பேசுமுரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
அது என்ன கருவி?
3 சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்
இது எந்தச் சாத்திரத்தைக் குறிக்கிறது?
4. மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
ஏன் மேலைக் கடலைச் சொன்னான்?
அகத்திய அன்பர்களின் ஆய்வுப் பதிலை அறிய ஆவல்.
என்னையும் கவிஞர் மதுர பாரதியையும் (அவர் அங்கே மது பாரதி, மதுரை பாரதி என்றெல்லாம்
அழைக்கப்பட்டார்.
மதுரைக்காரர் என்று எண்ணி, ஊர் அபிமானத்தால் மதுரைக்காரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்)டாக்டர்
கணேசன்
நாஸாவுக்கு அழைத்துச் சென்றார்.ஒரு ஆளுக்கு 20$ நுழைவுக் கட்டணம்.
இங்கே டாக்டர் கணேசனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் வீட்டில் தான் நாங்கள் தங்கியிருந்தோம்.
நல்ல செமத்தியான சப்பாடு-முருங்கைக்காய் சாம்பார் மணக்க மணக்க. அவர் வீட்டில் எங்கு நோக்கினும்
புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகள் பதம்பார்த்த புத்தகங்களும் உண்டு. நான் பேச்சு வாக்கில் 'வேம்பத்தூர்
சௌந்தர பாரதி ஒரு துறைக் கோவைக்கு அகமும் புறமுமாக உரை செய்திருக்கிறார். அவருடைய நூற்கலௌம்
இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன" என்றேன். "கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்"என்று
சொல்லி உள்ளே போனார். சிறிது நேரத்துக்கெல்லாம் கையிலொரு சிறு புத்தகத்தோடு வந்தார்.அது
சௌந்தர பாரதியின்"நிரோட்டக யமக அந்தாதி"
என்ற புத்தகம் 70 ஆண்டுகட்கு முன்பு பதிப்பிக்கப்பட்டது. கி.வா.ஜ வின் கவிபாடலாம் புத்தகம் இப்பொழுது
கிடைப்பதில்லை என்றேன். உடனே உள்ளே சென்று அந்தப் புத்தகம் ஒன்றை. எடுத்து வந்தார் you name
it, he has it,
எத்தனை ஓலைச் சுவடிகள்! 19ம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட எத்தனையோ புத்தகங்கள் அவரிடம் உண்டு.
'பிரபோத சந்த்ரோதயம்' என்று நான் சொல்லி முடிக்கு முன்பே திருவேங்கட நாதர் என்கிறார். என்ன
நினைவாற்றல்!
தக்கை இராமயணம் என்று ஒரு நூல். இவரது பெரு முயற்சியால் வெளிவந்திருக்கிறது. கம்பனின் சுருக்கம் அது
தரவு கொச்சகத்தால் ஆனது. தக்கை இசையில் பாட உகந்தது.
புத்தகங்களுக்காக அவர் செலவிடும் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால் இன்னும் இரண்டு வீடுகள் கட்டியிருப்பார்.
அவருடன் நாஸா சென்றோம் அசலான விண்கலம் ஒன்றைக் கண்டோம்.விண்வெளி வீரர்களின் பயிற்சிக்
கூடத்தில் உண்மையான விண்கலத்தில் எப்படியிருக்குமோ அப்படிச் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே
ஓரிடத்தில் ஒரு விமானத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பெயர் X-38.
"இலந்தை சார், நீங்கள் சொன்ன பறப்புமுணர் விமானம் இதுதான்" என்றார் கணேசன்.
.
'ஏற்கனவே வெற்றிகரமாகச் சோதிக்கப் பட்டுவிட்டது. 2003ல் புழக்கத்துக்கு வரும்.
வின்வெளிக்கலங்களிலோ பரிசோதனைச் சாலைகளிலோ ஏதாது விபத்து ஏற்பட்டு விட்டாலோ அல்லது பறந்து
கொண்டிருக்கும் வீரர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டாலோ அவர்களைத் திரும்பவும் பூமிக்குக் கொண்டுவரும்
பணியை இவ்விமானம் செய்யும். தானாகவே இயங்கக் கூடியது. விமானி எவரும் தேவை இல்லை" என்றார்.அதைப்
புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
"சந்திரனின் மண் கருப்பாக இருக்குமென்று வேதம் சொல்கிறது. அதைப் பார்க்கவேண்டுமே"என்றேன்
'ஒருமணி நேரம் கழித்துப் பார்க்கலாம்" என்றார்
புகைப்படங்களைக் காண :
http://yahoo.photos.com/elanadhairamasami
_________________________________________________________________
MSN Photos is the easiest way to share and print your photos:
http://photos.msn.com/support/worldwide.aspx