From harikris@... Fri Dec 21 22:15:56 2001
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 06:15:57 -0000
Received: (qmail 5981 invoked from network); 22 Dec 2001 06:15:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 06:15:57 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 06:15:55 -0000
Received: from harikris ([203.199.240.106]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GOOC2W01.WPE; Fri, 21 Dec 2001 08:53:20 +0530
Message-ID: <004e01c189fd$164c12a0$77f0c7cb@...>
To: , References: <20011221011541.89018.qmail@...>
Subject: Re: [tamil-ulagam] An analysis of "nIrArum kaTaluTutta"
Date: Fri, 21 Dec 2001 08:52:51 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14173
அன்புள்ள சந்திரா,
பிரமிக்கத்தக்க "ஆராய்ச்சி"யாகத்தான் இருக்கிறது. கவிதை எழுதத்ததான் தமிழ்ப் பயிற்சி தேவையில்லை என்று நினைத்தேன்!
கம்பன் கொள்ளாத பெருமிதமா? நூற்றுக் கணக்கில் அவன் பாடல்களில் மொழிப் பெருமிதம் ஊறித் ததும்புகிறதே! ஒரு பாடல். நாட விட்ட படலத்தில். சீதையைத் தேடித் தென்திசை செல்லும் அணிக்குச் சுக்ரீவன் சொல்கிறான்.
தென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்
தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடம் ஆம் ஆதலினால்
அம்மலையை iறைஞ்சி ஏகி...
இந்தத் தமிழ் நாட்டில் பொதிகை மலை என்றொன்று இருக்கிறது. அங்கே அகத்தியன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்தப் பக்கம் தப்பித் தவறி கூடப் போய்விடாதீர்கள். தூரே நின்றபடி அந்த மலையை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்பால் சென்று விடுங்கள். அருகில்சென்றீர்களானால், அந்தத் தமிழ்ச்சுவை உங்களைப் பற்றிக் கொள்ளும். அங்கேயே உட்கார்ந்து விடுவீர்கள். சீதையைத் தேடும் காரியம் கெட்டுப் போகும்.
தமிழையும், தமிழ் கவிஞர்களையும் எண்ணி எண்ணி எத்தனைப் பாடல்களில் சொல்லியிருக்கிறான்!
ஆனால் எனக்கென்ன தகுதியிருக்கிறது அவர்களைச் சொல்ல, முனைவர் பட்டமா பெற்றிருக்கிறோம்? தமிழைப் பெண்ணாக உருவகிக்கும் பாடல் ஏதும் இருக்கிறதா என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "Periannan Chandrasekaran" To: ; Sent: Friday, December 21, 2001 1:15 AM
Subject: [tamil-ulagam] An analysis of "nIrArum kaTaluTutta"
|
| அன்பர்களே
| | சுமதி இரா. தமிழ்மொழிப் பற்றை ஆங்கிலேயராட்சிக்குப் பின்னரே
| தமிழர் மேற்கொண்டனர்; தமிழைப் பெண்ணாக உருவகிப்பதும் அப்போதுதுதான்
| என்றும் "ஆராய்ந்து" கட்டுரைத்து பெர்க்கெலிப் பல்கலையில் முனைவர் பட்டம்
| பெற்று இப்போது மிசிகன் - ஆர்பர்ப் பல்கலையில்
| இடைநிலை/அடுநிலைப்(?) பேராசிரியராகவும் இருக்கிறார்.