From mmanivannan@... Sat Dec 22 02:35:29 2001
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 10:35:29 -0000
Received: (qmail 55603 invoked from network); 22 Dec 2001 10:35:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 10:35:29 -0000
Received: from unknown (HELO gull.prod.itd.earthlink.net) (207.217.120.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 10:35:29 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by gull.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16HjV2-0004xC-00 for agathiyar@yahoogroups.com; Sat, 22 Dec 2001 02:35:28 -0800
Message-ID: <009101c18ad4$bcaf7600$0200a8c0@...>
To:
References: <9vtsju+dul3@eGroups.com>
Subject: Re: [agathiyar] On VaLLalaar
Date: Sat, 22 Dec 2001 02:38:02 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
Reply-To: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14174

உயர்திரு முனைவர் நா. கணேசன் அவர்களே,

நீங்கள்

> http://groups.yahoo.com/group/agathiyar/message/13903

என்ற சுட்டியிலுள்ள மடலில்

"ஆதீனங்கள் ஆதரவு அளித்தது உயரிய செய்யுள் புராணங்களுக்கே.
ஆறுமுக நாவலர், உவேசா, ... போன்றோர்ஆதீனப் பக்கம்.
.......
உவேசா, வள்ளலார் பாடல் ஒரு குடம் பாலில்
ஒரு துளி நஞ்சு என்று கோர்ட்டில் ஆதினங்கள்
சார்பில் சொன்னார்."

என்று எழுதியிருக்கிருந்தீர்கள். ஆறுமுக நாவலர் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரை எதிர்த்து வழக்கு மன்றத்தில் (1864இல்?) பேச வந்தது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், உ. வே. சா. அவர்கள் வள்ளலார்வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக ஆதீனங்கள் சார்பில் பேசினார் என்பதுபோல் தொனிக்கும் உங்கள் கூற்றைத் தெளிவிப்பது நலம். வள்ளலார் 1874 இலேயே தேகசித்தி பெற்றுவிட்டார். உ. வே. சா. பிறந்ததே 1855இல் தான். உ. வே. சா., அவர்கள் வள்ளலார் மறைந்த பின்பு அவருக்கு எதிராக எங்கே வழக்கு மன்றத்தில் பேசினார் என்பதைத் தெரிவிப்பீர்களா? உ. வே. சா. அவர்களின் "என் சரித்திரம்" நூலில் அந்தக் குறிப்பு கிடைக்கிறதா? எங்கே அந்தக் குறிப்பைக் கண்டீர்கள்எனத் தெளிவுறுத்துவீர்களா? நன்றி.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

"இந்த ஆண்டில் இன்றேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"