From mmanivannan@... Sat Dec 22 03:04:15 2001
Return-Path: X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 11:04:15 -0000
Received: (qmail 50350 invoked from network); 22 Dec 2001 11:04:14 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 11:04:14 -0000
Received: from unknown (HELO gull.prod.itd.earthlink.net) (207.217.120.84) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 11:04:14 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by gull.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16Hjws-00078W-00 for agathiyar@yahoogroups.com; Sat, 22 Dec 2001 03:04:14 -0800
Message-ID: <009801c18ad8$c183e4a0$0200a8c0@...>
To: References: <9vtsju+dul3@eGroups.com>
Subject: Re: [agathiyar] On VaLLalaar
Date: Sat, 22 Dec 2001 03:06:49 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" Reply-To: "Mani M. Manivannan" X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14175
உயர்திரு முனைவர் நா. கணேசன் அவர்களே,
நீங்கள்
> வள்ளலாரின் காமாந்தரப் பாடல்களுக்குப் பொதுவாக
> இங்கிதமாலையைச் சொல்லுவார்கள். மட்டமாக எழுதியிருக்கிறார்
> என்பர் பழம்புலவர்.
எந்தப் பழம்புலவர், எங்கே, என்ன சொன்னார்கள் என்று குறிப்பிடுகிறீர்களா?
"மட்டமாக எழுதியிருக்கிறார்" என்று சொல்பவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, திருக்கோவையாரின் நூற்சிறப்புப்பா நினைவுக்கு வருகிறது.
ஆரணம் காண் என்பர் அந்தணர்;
யோகியர் ஆகமத்தின்
காரணம் காண் என்பர்; காமுகர்
காமநன்னூல் அது என்பர்;
ஏரணம் காண் என்பர் எண்ணர்
எழுத்து என்பர் இன்புலவோர்
சீரணங்காய சிற்றம்பலக்
கோவையைச் செப்பிடினே
சங்கப் பாடல்கள் சுவடிகள் பரவலாகக் கிடைக்காத போது, அகத்திணை ஒழுக்கத்தை அடியொற்றி வள்ளலார் பாடியிருப்பதைக் காணும்போது, அவர் மாணிக்கவாசகரின் பாடல்களில் ஈடுபட்டுத் தம் பாடல்களைப் புனைந்திருக்கக்கூடும் என்பார் சந்திரர்.
நீங்கள் குறிப்பிட்ட பழம்புலவர்கள் திருக்கோவையார், நாச்சியார் திருமொழி, திருப்பாவை பற்றி என்ன கருத்துரைத்தார்கள்?
அவாய் ஆதீனத்தைப் போல் அவர்களும் திருக்குறளின் காமத்துப் பாலை "மட்டமாக எழுதியிருக்கிறார்" என்று புறக்கணித்தார்களோ?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
"இந்த ஆண்டில் இன்றேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"