From elangov@... Sat Dec 22 04:15:04 2001
Return-Path:
X-Sender: elangov@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 12:15:01 -0000
Received: (qmail 26826 invoked from network); 22 Dec 2001 12:15:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 12:15:01 -0000
Received: from unknown (HELO md2.vsnl.net.in) (202.54.6.20) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 12:15:03 -0000
Received: from egopc (unknown [203.199.237.93]) by md2.vsnl.net.in (Postfix) with SMTP id C5BF2A43E; Sat, 22 Dec 2001 17:46:54 +0530 (IST)
X-Sender: elangov@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@egroups.com
Subject: Re:[agathiyar] KaNNaki statues
Message-Id: <20011222121654.C5BF2A43E@...>
Date: Sat, 22 Dec 2001 17:46:54 +0530 (IST)
From: Elangovan N
X-Yahoo-Group-Post: member; u=25782209
X-Yahoo-Message-Num: 14176

அன்பின் நண்பர்களே,

25-திச-01 நாளிட்டு, இன்று வந்த நக்கீரன் இதழில் கண்ணகி சிலை பற்றிய
கட்டுரையின் பகுதியாக சிலை செய்த சிற்பியின் தம்பியிடம் நேர்கண்டு
படத்துடன் போட்டிருக்கிறார்கள். அப்பகுதியை மட்டும் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

நக்கீரனின் கட்டுரைப் பகுதி....... அப்படியே....

"..........................சோதிடர் காழியூர் நாராயணன் சொல்வது குறித்து..இந்த
சிலையை வடிவமைத்தவர்களிடமே விசாரிக்க முடிவெடுத்தோம்.

சிலை வடிப்பில் பிரிட்டிசு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இராவ்பகதூர் எம்.எசு.நாகப்பா
என்பவர் மகன் இராசாராம் நாகப்பாதான்
அந்த சிலையை வடித்தார் என்பதால் அவரைத் தேடினோம். இராசாராம் நாகப்பா தற்போது உயிரோடு
இல்லையாம். நந்தனத்தில் அவரது தம்பி
மணி நாகப்பா இருக்கிறார் என்பதறிந்து அவரது சிலை வடிப்புக் கூடத்திற்கு
சென்றோம். தன் 77-ஆவது வயதிலும் இளமைத் தெறிப்போடு பேசினார்
மணி நாகப்பா.

"என் அண்ணன்தான் கண்ணகி சிலையை உருவாக்கினார். அப்ப இலங்கையில் தொல்பொருள் ஆய் வுக்
கமிட்டியில் நான் இருந்தேன். முதல்வராக இருந்த அண்ணாவும், பி.டபிள்யூ.டி மந்திரியாயிருந்த கலைஞரும்,
நாவலரும் அடிக்கடி வந்து சிலையைப் பார்த்து கரெக்சன் சொல்வாங்க. நானும்
இலங்கையில் இருந்து இங்க வந்து பார்வையிடுவேன். இந்த கண்ணகி சிலை
30 ஆயிரம் உரூபா எசுடிமேட்டில் உருவாக்கப் பட்டது. இது தவிர வெள்ளைக்கார தமிழ் அறிஞர் போப் உட்பட
4 சிலையை எங்க அண்ணன்
உருவாக்கினார். நீங்க கேட்ட மாதிரி இது கல்லால் ஆன சிலை அல்ல.
களிமண்ணால் உருவம் செஞ்சு அதுக்கு மேல வெண்கலத்தால் மோல்டிங்
பண்ணி உருவாக்கப் பட்டது. அந்த சிலைக்கு மாடலா கல்பனாங்கிற நடிகை இருந்தாங்க. இப்ப அந்த
கல்பனாவுக்கே ஒரு சிலை வடிக்க ஆர்டர் வந்திருக்கு.

இன்னொன்று, கண்ணகி சிலை ஆவேசமாக இருந்தது என்று சொல்றதும் தப்பு. கலைஞரும் அண்ணாவும் வந்து
சிலையில் ஆவேசம் தெரியக் கூடாது. கண்ணீர் வடித்தபடி சோகப் பதுமையா நீதி கேக்குற மாதிரிதான்
சிலை இருக்கணும்னு சொன்னாங்க. அப்படிதான் அமைக்கப் பட்டது. மத்தபடி
அந்த சிலை வாசுத்து குற்றத்தோட அமைக்கப்பட்டது என்பதெல்லாம் பொய்.
நாங்க வாசுத்து பாக்குறதில்லை. அது பக்கா மூட நம்பிக்கை.
அந்த ஏரியா நில அமைப்பு, சிலையை தாங்குமான்னு விஞ்ஞானபூர்வமா கணக்குப் போட்டு சிலையை வைப்போம்
அவ்வளவுதான்" என்றார்
மணி நாகப்பா.

கிண்டி கத்திப்பாரா நேரு சிலை, சின்னமலையில் இருக்கும் இராசீவ் சிலை,
நாடாளுமன்றத்தில் இருக்கும் காமராசர் சிலை போன்றவை மணி நாகப்பாவின்
கைவண்ணத்துக்கு அடையாளங்கள்.

(நேர்காணலுடன் மணிநாகப்பாவின் படம், சோதிடர் காழியூர் நாராயணனின் படம், கண்ணகி சிலையின் படம்
காணப்படுகிறது. கண்ணகி சிலையை விரும்புபர்கள் படம் கிடைத்தால் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
பாதுகாக்குமிடத்து, கையாளுதல் கோளாறால், கண்ணகி சிலையின் சிலம்புக் கையும் இடுப்பும் ஒடிந்து
விட்டதாய் ஏட்டுச் சேதி! உண்மையோ பொய்யோ அறியேன். )

அன்புடன்
நாக.இளங்கோவன்
----------------------------------------------------------------------------
-------------
தமிழர்க்கழகு தமிழெழுதல்
----------------------------------------------------------------------------
-------------