From naga ganesan@... Sat Dec 22 04:52:58 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 12:52:56 -0000
Received: (qmail 54161 invoked from network); 22 Dec 2001 12:52:56 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 12:52:56 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (216.115.96.62) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 12:52:56 -0000
Received: from [216.115.96.127] by n12.groups.yahoo.com with NNFMP; 22 Dec 2001 12:52:56 -0000
Date: Sat, 22 Dec 2001 12:52:55 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: On VaLLalaar
Message-ID:
In-Reply-To: <009101c18ad4$bcaf7600$0200a8c0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1926
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.92
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14177

--- In agathiyar@y..., "Mani M. Manivannan" wrote:
[...[
> என்று எழுதியிருக்கிருந்தீர்கள். ஆறுமுக நாவலர் வள்ளலார் வாழ்ந்த காலத்தி
>ல் அவரை எதிர்த்து வழக்கு மன்றத்தில் (1864இல்?) பேச வந்தது பலருக்கும் தெரிந்ததே.
>ஆனால், உ. வே. சா. அவர்கள் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக
>ஆதீனங்கள் சார்பில் பேசினார் என்பது போல் தொனிக்கும் உங்கள் கூற்றைத் தெளிவி
>ப்பது நலம். வள்ளலார் 1874 இலேயே தேகசித்தி பெற்றுவிட்டார். உ. வே. சா. பிறந்ததே
>1855இல் தான். உ. வே. சா., அவர்கள் வள்ளலார் மறைந்த பின்பு அவருக்கு எதிராக
>எங்கே வழக்கு மன்றத்தில் பேசினார் என்பதைத் தெரிவிப்பீர்களா?

வள்ளலார் மீது நாவலர் தொடர்ந்த வழக்கு, இதனால் நிகழ்ந்த பிரிவுகள்,
பொதுக் கூட்டங்கள், சுமார் 50 ஆண்டுக் காலம் தமிழ் நாட்டிலும்,
இலங்கையிலும் தொடர்ந்தன. நா. கதிரைவேற் பிள்ளை (மேலைப் புலோலி)
அவர்கள் மாணவர். திரு. வி. க. திரு.வி.க மருட்பா கட்சியைத்
தொடர்ந்து நடத்தினார். பின்னாளில் மாறி வள்ளலார் பற்றிப் புத்தகம் ஒன்று
எழுதினார்.

அருட்பா, மருட்பா வழக்குகள் தொடர்ந்த கதையைச் சில புச்தகங்களில்
நீங்கள் காணலாம். சாபு அவர்கள் நாகர்கோவில் செய்குத்தம்பிப் பாவலர்
பற்றி எழுதினார். அவர் அருட்பாக் கட்சி. அவர் வாழ்ந்தது இருபதாம் நூற்றாண்டின்
முதற்பகுதி. வள்ளலார், நாவலர் இறந்த பின்னரும் பல வருடங்கள்
அருட்பா-மருட்பா வாதங்கள் கோர்ட்டுகளிலும், பேப்பர்களிலும் தொடர்ந்தன.

உவேசா சாட்சியளித்தது, இன்னும் பல செய்திகளை, மா. சு. சம்பந்தம்,
அச்சும் பதிப்பும், பேரா. சி. கணபதிப்பிள்ளை (யாழ்ப்பாணம்), வள்ளலார்
ஆய்வுப் புத்தகங்கள் (ஊரன் அடிகள், ...), நாவலர் நூற்றாண்டு மலர்
(சு. வித்தியானந்தன்) .... போன்றவற்றில் காண்க. அருட்பா மருட்பா
வாதம் பற்றி அதன் நெடிய வரலாறு, court documents எல்லாம்
இன்னும் வெளியே வரவேண்டும். பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

வள்ளலார் பெண்களைக் குறித்துப் பாடின பாடல்கள் பல உள்ளன.

அன்புடன்,
நா. கணேசன், PhD