From harikris@... Sat Dec 22 07:18:38 2001
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 15:18:38 -0000
Received: (qmail 99269 invoked from network); 22 Dec 2001 15:18:38 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 15:18:38 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 15:18:35 -0000
Received: (qmail 18211 invoked from network); 22 Dec 2001 20:38:07 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.130.45) by 0 with SMTP; 22 Dec 2001 20:38:07 +0530
Message-ID: <013a01c18b2a$9203e2a0$2d82d6d2@...>
To: References: Subject: Re: [agathiyar] Re: clarification
Date: Sat, 22 Dec 2001 20:50:29 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14183
அன்புள்ள சந்திரா,
ராமனுக்குத் திருமணம் நடந்தது அவனுடையபதினாறாவது வயதில்தான். முடி சூட்டலைப் பற்றிய அறிவிப்பு உடனே நடந்தது போல் தோன்றினாலும், திருமணத்திற்கும் இந்த அறிவிப்புக்குமான இடைக்காலம்கம்பனில் குறிக்கப்படவில்லை. 'சக்கரவர்த்தி திருமகனில்' (பின்னாளில் 'இராமாயணம்') ராஜாஜி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"ராமனும் சீதையும் மிகவும் சந்தோஷமாக அயோத்தியில் ஒரு குறையுமின்றிப்**பன்னிரண்டு ஆண்டுகள்** கழித்தார்கள். (அத்தியாயம் 16 தலைப்பு 'சுக வாழ்வு') அடுத்த அத்தியாயம் பின்வருமாறு தொடங்குகிறது: "பன்னிரண்டு ஆண்டுகள் ஆனந்தமாக ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம்அனுபவித்தார்கள். இனி உலகில் மக்கள்படும் இடையூறுகள், துயரங்கள், கோபதாபங்கள் எல்லாவற்றையுமே பகவானும் ஈசுவரியும் அனுபவிக்கப் போகிறார்கள்." (அத்தியாயம் 17 யுவராஜ்யம்) ராஜாஜி வால்மீகியிலும் கம்பனிலும் தோய்ந்தவர். வால்மீகியில்தான் இந்தக் காலக் குறிப்பைக் கண்டிருப்பார் என்பது தெளிவு. வால்மீகியில் எங்கோ ஒரு குறிப்பு இருக்கிறது. கைக்குக் கிடைக்காமல் நழுவுகிறது.
எனவே, வனம் புகும்போது ராமனுக்கு வயது 28. திரும்பி வரும்போது 42. 51 என்று சொல்லும் காலக்கணக்கு எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. மேலும் ஒன்று. தாங்கள் குறிப்பிட்டுள்ள நாள் (தேதி) கணக்கு எந்த ராமாயணத்தின் அடிப்படையில் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. யுத்த காண்டத்தில் பலப்பல மாறுதல்களைச் செய்திருக்கிறான் கம்பன். வால்மீகியின் யுத்த வைப்பு முறையில் அவன் செய்திருக்கிற மாறுதல்களை மட்டும் எழுத வேண்டும் என்றால், குறைந்தது 10 பக்கம் கட்டுரை எழுத வேண்டியிருக்கும். முதல் போர் ஒரே நாளில் முடிவதுபோல் கம்பனில் தோன்றுகிறது. ராவணன் மட்டும்தான் பொருகிறான். வான்மீகத்திலோ இரவிலும் போர் தொடர்கிறது. இந்திஜித் முதல்நாள் போரிலேயே தென்படுகிறான். அங்கதன் கையால் அடியும் படுகிறான். பல விதங்களிலும் மிகமிகச் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறான் கம்பன்.
அல்லது கம்பன் வான்மீகத்தை அடியொற்றவில்லை என்ற கருத்தையும் பார்க்க வேண்டும். (அ.ச.ஞா. அவர்களும் அவ்வாறே கருதுகிறார்.) ஆனால் "வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி என்பான்" என்ற பாடலை மட்டும்தான் அசஞா அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாகவும் ஓரிடத்தில் வான்மீகியைப் பற்றிய நேரடிக் குறிப்பு கம்பனில் வருகிறது.
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும் iயம்பு வான்மீகன் என்னும்
நல்நான் மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்.
(நாகபாசப் படலம்)
இந்திரஜித்துடன் சென்றது எவ்வளவு சைனியம் என்று என்னால் சொல்ல முடியாதேனும் நாற்பது வெள்ளம் என்று வான்மீகி சொல்லியிருக்கிறான்.
இந்தப் பாடலைப் பற்றி அசஞா அவர்கள் ஏதும் குறிப்பிடவில்லை. (பல வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில் படித்தது. கம்பன்ஒரு புதிய பார்வை என்று நினைவு.) ஆனால் அடிப்படைக் கதை வான்மீகத்தின=0ஷஔjவே=A2ல்லை. (பல
[Non-text portions of this message have been removed]