From harikris@... Sat Dec 22 08:18:33 2001
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 16:18:35 -0000
Received: (qmail 12413 invoked from network); 22 Dec 2001 16:18:35 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 16:18:35 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 16:18:31 -0000
Received: (qmail 5819 invoked from network); 22 Dec 2001 21:38:11 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.130.45) by 0 with SMTP; 22 Dec 2001 21:38:11 +0530
Message-ID: <01b801c18b32$ed630600$2d82d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" References: Subject: Re: [agathiyar] Re: clarification
Date: Sat, 22 Dec 2001 21:50:06 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14184
அன்பின் சந்திரா,
இந்தக் கால வித்தியாசத்தை இப்போதுதான் கவனித்தேன். ராவணனைக் கொன்று 20 ஆண்டுகள் கழித்து இராமன் அயோத்தி திரும்புவது சற்று வினோதமாகப் படுகிறது. மறுபடியும். வான்மீகத்தில் திரும்பி வந்த நாள் பற்றிய செய்தி தெளிவாக இல்லை. தாமதமாகி விட்டது என்று அனுமனை முதலில் அனுப்புகிறான் ராமன்.
கம்பனிலோ, சரியாகப் பதினான்கு ஆண்டுகள் (வனவாசம் புகுந்ததலிருந்து) என்பது தெரிகிறது. ஒரு நாள் தாமதமானாலும் எரிபுகுவேன் என்று பரதன் ஆணையிட்டிருப்பதால்.
ஆம்எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐயநீ
நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம்
கோமுறை புரிகிலை என்னின் கூர்எரி
சாம் iது சரதம் நின் ஆணை சாற்றினேன்.
என்பது பரதனின் ஆணை. (அயோத்தியா காண்டம், திருவடி சூட்டுப் படலம்.)
iன்றுநாம் பதிவருது முன்மாருதி ஈண்டச்
சென்றுதீ தின்மை செப்பி அத் தீமையும் விலக்கி
நின்ற காலையின் வருதும் என்று ஏயினான் நெடியோன்
நன்று எனா அவன் மோதிரம் கைக்கொடு நடந்தான். (யுத்த காண்டம், மீட்சிப் படலம்)
நான் இன்று வந்திருக்க வேண்டியது. வராததால், பரதன் எரிபுகுவான். எனவே உடனே சென்று நான் சொன்ன நேரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லி, அவன் மனத்தில் மேற்கொண்ட தீமை விளைவிக்கக் கூடிய செயலையும் தடுப்பாயாக.
எனவே, 20 ஆண்டுகள் என்பது எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பது விளங்கவில்லை.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: perichandra
To: agathiyar@yahoogroups.com
Sent: Saturday, December 22, 2001 1:00 AM
Subject: [agathiyar] Re: clarification
Ravana is killed by Rama 15th November 7292 B.C.
Rama returns to Ayodhya 6th December 7272 B.C.
[Non-text portions of this message have been removed]