From ramaninaidu@... Sat Dec 22 10:41:21 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 18:41:21 -0000
Received: (qmail 32002 invoked from network); 22 Dec 2001 18:41:21 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 18:41:21 -0000
Received: from unknown (HELO smtp013.mail.yahoo.com) (216.136.173.57) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 18:41:21 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.98) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 22 Dec 2001 18:41:18 -0000
Message-ID: <010c01c18b18$b3ee4f20$62eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" Subject: THIRUVEMPAVAI 8 TAMIL
Date: Sun, 23 Dec 2001 00:09:45 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14186
திருவெம்பாவை - நாள் எட்டு -பாடல் எட்டு
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
எழில் இயம்ப இயல்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
திருவெம்பாவையின் எட்டாவது பாடல் தாமச குணத்தைச் சார்ந்த நிகழ்ச்சியை நாடகப்படுத்தித் தருகிறது
எனலாம். என்னதான் கண்ணுக்கும் கருத்துக்கும் எளிதாக எட்டும்படி உயர் மதிப்புடையவை வலியக் கிடைத்தாலும்
தாமத குணமுடையவர்கள் அதைத் தெரிந்து கொள்வதில்லை. அடியார்கள் சத்துவ குணத்தினர்க்கே வழி காட்ட
வல்லவர்கள். அவர்கள் கூட்டத்திலே தாமச குணம் இருக்கலாமா?
பாவை நோன்பிருக்க முன் நிற்கும் கன்னியரில் ஒருத்தி அப்படி ஆகிவிட்டாளே என்ற ஐயத்தின் வழிப்பட்ட
பாடலாக திருவெம்பாவையின் எட்டாவது பாடல் அமைந்திருக்கிறது.
குரல் கொடுக்கும் சேவல். எங்கெங்கும் சிறகடித்துப் பரவும் பறவையினங்களின் ஒலி. திருக்கோயிலில்
திருப்பள்ளி எழுச்சி நடப்பதை அறிவிக்கும் வெண்சங்கு முழக்கம். பாவையரின் பாடல்.
பாடலின் பொருளா? பரஞ்சோதி நாயகனின் ஒப்பற்ற பெருங்கருணைத் திறன்தான். இத்தனையும் காதில்
விழாமலும் ஒருத்தி இருப்பாளா? இருக்கிறாளே! இப்படிக் கூட ஒருத்தி உறங்குவாளோ? அவன் மீது அன்பு
வைத்தவள் என்பதை இப்படிப் பொய்ப்பிக்கிறாயே. உயிர்கள் எல்லாம், பொருட்கள் எல்லாம் ஒடுங்கி நிற்கும்
ஊழிக் காலத்தில் ஒப்பற்ற தலைவனாக நிற்பவன் அவன். அருட்சக்தியாகிய அம்மையை இடப்பங்கில் எப்போதும்
கொண்டவன் அவன். இனியாவது எங்களுடன் சேர்ந்து அந்த அருளாளனைப் பாடுவாய்.
இப்படியாகப் பாவையர் எழுப்பும் பாவை வேறு யாருமில்லை. விழுப்பொருள் நாட்டமில்லாமல் சார்ந்ததன்
வண்ணமாகி ஆணவம் கன்மம் மாயை என்ற மல இருள் உற்ற உறங்கும் நம்மைத்தான் மணிவாசகர் இப்பாடலில்
உருவாக்கிக் காட்டுகிறார்.
நம்மாழ்வார் ஒரு பாடலில் "அற்றது பற்றெனில் உற்றது வீடு" என்பார். அதில் பற்று என்று அவர் பேசுவதைப்
பொருட்களின் மீது வைத்த பற்று என்று கொள்வதை விட தான் தனது என்ற அறியாமை விளைவான பற்று என்று
கொண்டால் அதை விலக்கும் போது வீடு பேறு சித்திக்கும் என்று கூறுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொழுது புலர்வது போல அறியாமை இருள் நீங்கி ஞான ஒளி உதயமாக வேண்டும் என்பதும் இந்த உதயத்துக்கு
உறக்கம் நீங்கிய அன்பு இன்றியமையாதது என்பதும் அவன் அருளால் அவன் தாள் வணங்கி இந்த அன்பை
அடையவேண்டும் என்பதும் இப்பாடலின் உட்பொருளாகும்.
இப்பாடலின் சிறப்பு காலம், களம், இனம் என்ற முவ்வகையிலும் சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்று
உணர்த்துவதே போல அமைந்திருப்பதாகும்.
ஞானச் சேவலின் குரல், குருவின் மணிவாசகம், வெண்சங்கின் ஒலி - இது காலத்தைக் குறித்தது.
மார்கழி மாதத்து நோன்பு இடத்தைக் குறித்தது.
அறனறிந்து மூத்த அறிவுடையார் தோழியர். அவர்கள் இனத்தைக் குறித்தனர்.
ஆக நல்லன நாடும் ஆன்மாவின் விழிப்பிற்கு ஏற்ற காலம், களம், இனம் ஆகிய யாவும் பொருந்தியிருப்பதை
எடுத்துச் சொல்கிறது இந்தப் பாடல்.
வள்ளுவரின்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
என்ற குறட்பாக்களை மனதில் கொள்ள ஏற்ற தருணம்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com