From eramurug@... Sat Dec 22 19:26:07 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 23 Dec 2001 03:26:09 -0000
Received: (qmail 8704 invoked from network); 23 Dec 2001 03:26:08 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 23 Dec 2001 03:26:08 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Dec 2001 03:26:06 -0000
Message-ID: <20011223032606.9536.qmail@...>
Received: from [210.214.131.63] by web14803.mail.yahoo.com via HTTP; Sat, 22 Dec 2001 19:26:06 PST
Date: Sat, 22 Dec 2001 19:26:06 -0800 (PST)
Subject: sahitya academy award for si.su.sellappa
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011223102323.01921500@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14195

அகத்திய அன்பர்களே,

இந்த ஆண்டு அமரர் சி.சு.செல்லப்பாவுக்கு விருது கொடுத்து சாஹித்ய அகாதமி
தன்னைக் கௌரவப் படுத்திக் கொண்டுள்ளது.

தமிழ் வாழ வாழ்ந்த விடுதலைப் போராட்ட தியாகி அமரர்
சி.சு.செல்லப்பா. தமிழில் படைப்பிலக்கியமும் (முக்கியமாகப்
புதுக்கவிதை), இலக்கிய விமர்சனமும் செழிக்கத் தன்னலமற்ற தொண்டாற்றிய
சி.சு.செல்லப்பா 'எழுத்து' பத்திரிகையை அறுபதுக்களில் நடத்தியவர்.
'மணிக்கொடி', 'சரஸ்வதி' போல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய
தமிழ் இதழ் 'எழுத்து'.

அவருடைய "வாடி வாசல்", மதுரை - வத்தலக்குண்டு மண்ணின் மணம் கமழும்
நாவல். 'சரஸாவின் பொம்மை' சிறுகதைத் தொகுதி இம்மொழியின்
சிறுகதை வளத்துக்கு எடுத்துக்காட்டு.

அமரர் செல்லப்பாவுக்கு அவர் கடைசியாக எழுதிய "சுதந்திர தாகம்"
நாவலுக்காக இப்பரிசு கிடைத்திருக்கிறது. பாரத பூமியின் விடுதலைப்
போராட்டத்தில் பங்கு கொண்ட, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட
இந்தியத் தவப் புதல்வர்களின் வரலாற்றை - சி.சு.செல்லப்பாவும் இவர்களில்
ஒருவர் - சித்தரிக்கும் மகத்தான புதினம் இது.

வாழ்ந்த போது எந்த விதமான நிறுவன அங்கீகாரமும் கிடைக்காமல்,
அதற்காகக் கவலைப் படாமல் தன் பணிகள் அளித்த மனத் திருப்தியோடு
இறந்தவர் சி.சு.செல்லப்பா. தாமதமாக வந்த விருது இது.

மலையாளத்தில் என் அன்பு நண்பர் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவருடைய
"ஆத்தூர் ரவிவர்மயுடெ கவிதகள்" நூலுக்காக இவ்வாண்டு சாஹித்ய அகாதமி
விருது பெறுகிறார். தமிழறிந்த, தமிழ் ஆர்வம் மிக்க ஆற்றூர் ரவிவர்மா
தமிழிலிருந்து குறிப்பிடத் தகுந்த புத்திலக்கியங்களை மலையாளத்துக்கு
மொழி பெயர்த்தவர். சுந்தரராமசாமியின் "ஜே.ஜே சில குறிப்புகள்"
அவற்றில் ஒன்று. (சுந்தர ராமசாமி, தகழியின் மலையாள நாவல்களான
"செம்மீன்", "தோட்டியின் மகன்" ஆகியவற்றைத் தமிழாக்கியிருக்கிறார் -
பெருமையோடு பெற்றும், உவகையோடு அளித்தும் பரிமாறிப் பங்கு பெற்று
வளரும் மொழிக்குடும்பம் நம்முடையது).

ஆற்றூர் ரவிவர்மாவுக்கு வாழ்த்துக்கள். arvarma@... என்ற
மின்னஞ்சல் முகவரியில் அவருக்கு நீங்களும் வாழ்த்துரைக்கலாம்.

அன்புடன்,
இரா.முருகன்



__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com