From ramaninaidu@... Sun Dec 23 08:21:02 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 23 Dec 2001 16:21:00 -0000
Received: (qmail 31442 invoked from network); 23 Dec 2001 16:20:59 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 23 Dec 2001 16:20:59 -0000
Received: from unknown (HELO smtp015.mail.yahoo.com) (216.136.173.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Dec 2001 16:21:02 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.199) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 23 Dec 2001 16:20:39 -0000
Message-ID: <005301c18bce$32e24ce0$c7eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: nacciyar thirumoli 9 tamil
Date: Sun, 23 Dec 2001 21:42:51 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14203

மார்கழி நாள் ஒன்பது - நாச்சியார் திருமொழி
24.12.2001
மூன்றாம் திருமொழி

கண்ணன் அவதாரத்தில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆய்ச்சியரின் உடைகளை எடுத்துக் கொண்டு குருந்த
மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு வேடிக்கை காட்டியதை முன்னிறுத்தி அமைந்தவை நாச்சியார்
திருமொழியின் மூன்றாவது பத்துப் பாடல்கள்.

சூரியோதயத்துக்கு முன்பே குளத்துக்கு வந்து விட்டார்களாம். சூரியன் எழுந்த பின்னும் குளத்தை விட்டு நீங்க
முடியாமல் தவித்துக் கிடக்கிறார்களாம். எங்களுடைய சேலைகளைத் தந்து விடு. இனிமேல் இந்தக் குளத்துக்கே
வர மாட்டோம் என்கிறார்கள். இது எப்படி நீ இங்கே வந்தது? உன்னோடு கலந்து உறவாடல் முறையின்மை அன்று
என்பதால் அவசரப்பட வேண்டாம். குருந்த மரத்தின் மீது வைத்திருக்கும் சேலைகளைத் தந்து விடு என்கிறார்கள்.
எம்மை நீருக்குள் நிர்வாணமாக்கி நிறுத்தி வைத்திருப்பது சிறு பிள்ளைத்தனமான விளையாட்டு. பலரும்
நீராடும் இச்சுனையில் நாங்கள் கண்களில் நீர் பெருக நிற்கிறோம். எமது உடைகளைத் தந்துவிடு. பலரும்
காண நாங்கள் கண்ணீர்ப் பெருக்கைக் அடக்க முடியாமல் குளத்தில் நிற்கிறோம். எங்கள் உடைகளைத் தந்துவிடு.
மீன்கள் காலைக் கடிக்க நீரில் நிற்கிறோம். நடந்தது இன்னதென்று தெரிந்து எம் தமையனார் வேல் கைக்
கொண்டு உன்னை விரட்ட வந்தால் விளையாட்டு வினையாகிப் போகும். எமது உடைகளைத் தந்து விடு.
தாமரையின் தண்டுகள் நெருங்கிக் காலை உறுத்த நீரில் நிற்கிறோம். தேள் கடித்தாற் போல இருக்கிறது.
எமது உடைகளைத் தந்து விடு. ஊரோ வெகு தூரத்தில் இருக்கிறது. நாங்களோ நீருக்குள் நின்று
வருந்துகிறோம். எம் தாயார் இந்த எம் நிலை கண்டால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்களை உடைகளை
மரத்தில் இருந்து கீழே போட்டுவிடு. நாங்கள் மட்டுமல்ல இங்கே இருப்பது. பிறரும் காண நாங்கள் இந்தப்
பாடுபடுவது சரியல்ல. எமது உடைகளைத் தந்து விடு. நீரின் குளிரால் உடல் வாட உன் குறும்பால் உள்ளம் வாட
நிற்கிறோம். உடைகளைத் தந்து விடு.

தொழுது கேட்கிறார்கள். எங்கள் அமுதே என்று போற்றிக் கேட்கிறார்கள். வேண்டியதெல்லாம் தருகிறோம்.
பிறர் கண்ணில் படாது போய்விடுகிறோம் என்று உறுதியளித்துக் கேட்கிறார்கள். குரங்குகளின் தலைவன் என்று
பாதி கேலியும் பாதி புகழுமாகக் கேட்டுப் பார்க்கிறார்கள். விளையாட்டு வினையாகிப் போகும் என்று
மிரட்டிப் பார்க்கிறார்கள். மீன்கள் கடிக்கின்றன. தேள் கொட்டியதைப் போலத் தாமரைத் தண்டுகள்
தீண்டுகின்றன என்று அலறிக் கேட்கிறார்கள். இது உனக்கு நீதியல்ல என்று குற்றம் சாட்டிப்
பார்க்கிறார்கள். இது உனக்குத் தகுதியான செயல் அல்ல என்று சுட்டிக் காட்டிக் கேட்கிறார்கள். இதற்காகவா
நீ தப்பிப் பிழைத்து எம்மோடு வாழ வந்திருப்பது என்றும் கேட்டுவிடுகிறார்கள். இத்தனைக்கும் கண்ணன்
மனம் இரங்கி அவர்களுடைய உடைகளைத் தருவதாகக் காணோம்.

வழக்கமான ஆழ்வார் இலக்கியக் கூறுகளான இறைத் தோற்ற மேன்மையும் அழகும் இப்பாடல்களிலும் பயின்று
வருகின்றன. அரவணை மேல் பள்ளி கொண்டவன், மதுவின் துழாய் முடி மால், கோலங்கரிய பிரான், தூமலர்
கண்கள் வளரத் தொல்லை இராத் துயில்வான்.

அவதாரச் சிறப்பும் பேசப்படுகிறது. வில்லால் இலங்கை அழித்தவன், குரங்குகளுக்கு அரசன், குடக் கூத்து
ஆடியவன், கஞ்சன் வஞ்சனையில் இருந்து காரிருளில் எல்லிப் பிழைத்து வந்தவன், பேய் முலை நஞ்சுண்டவன்.

இவற்றில் குடக்கூத்து பற்றி இந்திரா பார்த்தசாரதி இப்படிக் கூறுவார்.
"முல்லை நிலப் பகுதியில் வாழும் ஆயர் இனமக்களால் ஆடப்படும் ஒருவகைக் கூத்து குடக்கூத்தாகும். கைகளில
ஒவ்வொரு குடமும் இரு தோள்களில் ஒவ்வொரு குடமும் தலையில் அடுக்கி வைக்கப்பட்ட பல குடங்களும் இருக்க ஆடும்
கூத்து இது. கைகளில் உள்ள குடங்களை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்த வண்ணம் தோள்களிலும்
தலையிலும் உள்ள குடங்கள் கீழே விழாதபடி முழவின் ஓசைக்கேற்பக் கால்களை அடி வைத்து ஆடவேண்டும்.
சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் ஆறுவகைக் கூத்துக்களுள் ஒன்றான மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில்
குடக் கூத்தும் ஒன்று. பார்வையாளர்களுக்கு மிகுந்த அழகுணர்ச்சியுடன் கூடிய மனமகிழ்வைத் தரவல்லது இது.
"குடத்தால் குன்றெடுத்தோன் ஆடல் அதனுக் கடைக்குப வைந்துறப் பாய்ந்து" என்று அடியார்க்கு நல்லார்
சிலப்பதிகார உரையில் குறிக்கிறார். இந்த ஆடலினைக் கண்டு பிடித்தவன் கண்ணன் எனவும்
குறிக்கப்படுகிறது. இசைக் கலைஞனாகவும் கூத்தாடுகிறவனாகவும் இறைவனைக் காணும் இக் கோட்பாடு அழகியல்
பூர்வமான உருவத்தை மகிழ்சசியாக்குவதுடன் வாழ்க்கையின் ஆற்றல்கள் யாவற்றையும் மிகவும் ஏற்ற முறையில்
வெளிக் கொணர்கிறது. இறைவனாக இராமல் மனிதனாக நின்று இதனை ஆடுகிறான். ஆணும் பெண்ணுமாக
பார்வையாளர்களின் கற்பனையைத் தூண்டும் வண்ணம் கண்ணன் ஆடுகிறான். சித்தும் அசித்தும் ஈசுவரனை நாடி நிற்பது
போல ஈசுவரனும் சித்தையும் அசித்தையும் நாடி நிற்கிறான் என்பதே இதனுடைய தத்துவ விளக்கமாகும்."

இப்பாடல்களிலும் நாடகப் பாங்கு வெளிப்படுகிறது.

தோழியும் நானும் தொழுதது ஏன்? குடைந்து நீராட வந்தோம் என இவர்கள் சொல்கிறார்கள். கலவியைச்
சுனையாடல் என்பது மரபு. கலவிக்கென்ன தடை என்கிறான் கண்ணன். பொழுது புலர்ந்து விட்டதே என்கிறார்கள்.
சரிதான். என்னை ஏமாற்றிவிட்டுக் குளத்துக்குப் போனீர்களே. மன்னிக்கக் கேட்டுத் தொழுங்கள் என்கிறான்.
ஒரு கையாலே தொழ முடியாது. இரு கைகளை எடுத்துத் தொழும் நிலையில் அவர்கள் இல்லை. எனவே ஆளுக்கு ஒரு
கையாக இருவரும் சேர்ந்து தொழுகிறார்கள்.
விதி இன்மையான் அது மாட்டோம் என்பது என்ன? எப்படி வந்தால் என்ன? வந்து சேர்ந்து விட்டேன். சேர்ந்து
அனுபவிப்போம் என்கிறான். இன்னமும் அதற்குக் காலம் வரவில்லை, அவசரப்படாதே என்கிறார்கள்.
பிறகு தருவோம் நீ வேண்டியதெல்லாம். இப்போதைக்கு எம் உடைகளைத் தந்து விடு என்கிறார்கள்.
மாமியார் மக்களேயல்லோம் மற்றும் இங்கு எல்லோரும் போந்தார் என்று கூறுவது எதனால்? தனியிடத்திலே
வந்து இவ்வளவு தீமைகள் செய்கிறாயே, இது ஏன் என்று கேட்கிறார்கள். ஊரில் உள்ளோரை எனக்கு மைத்துனிகள்
ஆக்கிக் கொள்ளத்தான் என்கிறான். அடாடா, இங்கே மைத்துனை முறைமையார் அன்றியும் மாமிமாரும்
மாமியரின் தாயரும் கூட இருக்கிறார்களே என்கிறார்கள்.

அஞ்சவுரப்பாளசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் என்பதைப் பாருங்கள். குறும்புகள் மகன் செய்ய அதைக் குறித்துத்
தாயிடம் புகாரிட அத்தாய் அவனைக் கடிந்து கொள்ளாமல் அவன் விருப்பத்துக்கு விட்டுவிட்டாள் என்கிறார்கள்.


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com