From cbose@... Sun Dec 23 20:14:09 2001
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 04:14:10 -0000
Received: (qmail 31782 invoked from network); 24 Dec 2001 04:14:10 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 04:14:10 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 04:14:07 -0000
Received: from vsnl (unknown [203.199.231.82]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id A5525E40E for ; Mon, 24 Dec 2001 09:47:55 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011223224843.007ccc50@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 23 Dec 2001 22:48:43 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Conference in Spore
In-Reply-To: <3.0.3.32.20011223203748.01904970@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 14214
அன்பு பழனி,
தகவல்களுக்கு நன்றி.
மாநாடு செவ்வனே நடைபெற வாழ்த்துக்கள்.
ஏதேனும் ஒரு திருப்புமுனையை மாநாடு உருவாக்கட்டும்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
At 08:37 PM 12/23/01 +0800, you wrote:
>அன்பு நண்பர்களே,
>அடுத்த மாதம் ஜனவரி 5,6 தேதிகளில், "அனைத்துலக அரங்கில் தமிழ்" எனும் மாநாடு சிங்கப்பூரில்
>நடைபெற உள்ளது. அதில் கலந்துகொண்டு பேச உள்ள அறிஞர்கள் யார் யார் என்பதையும் அவர்கள் எது பற்றி
>பேசப் போகிறார்கள் என்பது பற்றியும் இன்றைய தமிழ் முரசு நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து
>கிடைத்த விவரங்கள்:
>
>"இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சரும் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவருமான திரு ப சிதம்பரம்
>மாநாட்டின் முதன்மை உரை ஆற்றுகிறார். " அனைத்துலக பொருளியல் அரங்கில் தமிழர்கள்" என்ற தலைப்பில்
>இவர் பேசுகிறார்."
>
>" தமிழ் கலை, இலக்கிய உலகின் மதிப்புமிக்க இலக்கிய ஆய்வாளராகவும் விமர்சராகவும் திகழ்பவர்
>இலங்கைப் பேராசிரியர் கா சிவதம்பி. சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தில் பங்கு கொண்டிருப்பவர். இன்று
>உகலின் பல நாடுகளிலும் சிறப்போடு வளர்ந்து வரும் தமிழ் நாடகக் கலை பற்றிய ஆழ்ந்த விவரங்களை
>"தமிழர்களின் அரங்கியல் மரபுகள்" என்ற இவரின் உரையில் தெரிந்து கொள்ளலாம்.
>
>"இயக்குநர் இமயம் கே பாலசந்தர் "கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகம் கண்டுள்ள மாற்றங்களும்
>அதன் எதிர்காலச் சவால்களும்" என்ற தலைப்பில் பேசுகிறார். "
>
>" பரத நாட்டியத்தில் பல ஆய்வுகளைச் செய்தவரும் நூல்களை எழுதியிருப்பவரும் தலைசிறந்த பரநாட்டியக்
>கலைஞருமான பத்மபூஷண், டாக்டர் பத்மா சுப்பிரமணியம், "பரதநாட்டிய முத்திரைகள்" பற்றி விளக்கிப்
>பேசுவார். இவரது உரையில் இசையோடு கூடிய விளக்க நடனங்களும் இடம்பெறும்."
>
>"தமிழில் படைப்பிலக்கியம்" என்ற தலைப்பில் மலேசியைவைச் சேர்ந்த டாக்டர் ரே கார்த்திகேசு
>பேசுகிறார்."
>
>"இந்தியாவைச் சேர்ந்த இரா கலைக்கோவன் "தமிழர்களின் கட்டடக்கலை மரபுகளும் புதுமைகளும்" என்ற
>தலைப்பில் பேசுகிறார். "
>
>" அமெரிக்க அறிஞர் "திருக்குறள்" ராம்மோகன் " தொழில் முனைப்பாற்றலும் தமிழர்களும்" பற்றி
>உரையாற்றுகிறார்."
>
>"இரண்டாம் மொழிநிலையில் தமிழ்" என்பது பற்றி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் ஆ கந்தையா
>பேசுகிறார். "
>
>"பழம்பெரும் தமிழ் நூல்களையும் சுவடிகளையும் இணையத்தில் பாதுகாக்கும் "மதுரை திட்டம்" என்னும் பெரும்
>திட்டத்தை தொடங்கி செய்து வுரம் டாக்டர் நா கண்ணன் "நாளைய உலகில் தமிழ்" பற்றிப் பேசுகிறார்."
>
>"சிங்கப்பூரின் தமிழ் அறிஞர் டாக்டர் சுப திண்ணப்பன் "தமிழரின் இலக்கிய மரபுகள்" என்ற தலைப்பில்
>பேசுகிறார். மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சுப திண்ணப்பன், "பல தகவல்களை ஒரே
>நேரத்தில் தொகுத்துத் தரும் மாநாடு இது" என்றார்." "
>
>"தற்போது ஜப்பானிய பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சிங்கப்பூரின் சமூகவியல் துறை அறிஞரான டாக்டர்
>அ வீரமணி "சிங்கப்பூரில் தமிழர்கள் - நேற்று, இன்று, நாளை" என்பது பற்றி இந்த மாநாட்டில்
>உரையாற்றுகிறார்."
>
>இந்தத் தகவலை எல்லாம் தொகுத்து எழுதியிருப்பவர் அப்பத்திரிகையின் நிருபர் கனகலதா என்பார்.
>
>
>பழனி
>
>
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>