From nagas baan@... Sun Dec 23 23:17:04 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 07:17:04 -0000
Received: (qmail 48012 invoked from network); 24 Dec 2001 07:17:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 07:17:04 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 07:17:04 -0000
Received: from [216.115.96.158] by n1.groups.yahoo.com with NNFMP; 24 Dec 2001 07:17:04 -0000
Date: Mon, 24 Dec 2001 07:17:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: sahitya academy award for si.su.sellappa
Message-ID:
In-Reply-To: <20011223032606.9536.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2599
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 14217

அன்பு முருகன்,

தங்கள் நண்பரின் கவிதை நூலுக்கு அகாதமி பரிசு கிடைத்திருப்பது குறித்து மிக்க மகி
ழ்ச்சி !
நேரம் கிடைக்கும்போது அவருடைய ஓரிரு கவிதைகளை எங்களுக்கு மொழிபெயர்த்து
வழங்கினால் வாசித்து மகிழ்வோம் !

என்றும் அன்புடன்,
நாக சுப்ர மணியன். சொ.

--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> அகத்திய அன்பர்களே,
>
> இந்த ஆண்டு அமரர் சி.சு.செல்லப்பாவுக்கு விருது கொடுத்து சாஹித்ய அகாதமி
> தன்னைக் கௌரவப் படுத்திக் கொண்டுள்ளது.
>
> தமிழ் வாழ வாழ்ந்த விடுதலைப் போராட்ட தியாகி அமரர்
> சி.சு.செல்லப்பா. தமிழில் படைப்பிலக்கியமும் (முக்கியமாகப்
> புதுக்கவிதை), இலக்கிய விமர்சனமும் செழிக்கத் தன்னலமற்ற தொண்டாற்றிய
> சி.சு.செல்லப்பா 'எழுத்து' பத்திரிகையை அறுபதுக்களில் நடத்தியவர்.
> 'மணிக்கொடி', 'சரஸ்வதி' போல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய
> தமிழ் இதழ் 'எழுத்து'.
>
> அவருடைய "வாடி வாசல்", மதுரை - வத்தலக்குண்டு மண்ணின் மணம் கமழும்
> நாவல். 'சரஸாவின் பொம்மை' சிறுகதைத் தொகுதி இம்மொழியின்
> சிறுகதை வளத்துக்கு எடுத்துக்காட்டு.
>
> அமரர் செல்லப்பாவுக்கு அவர் கடைசியாக எழுதிய "சுதந்திர தாகம்"
> நாவலுக்காக இப்பரிசு கிடைத்திருக்கிறது. பாரத பூமியின் விடுதலைப்
> போராட்டத்தில் பங்கு கொண்ட, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட
> இந்தியத் தவப் புதல்வர்களின் வரலாற்றை - சி.சு.செல்லப்பாவும் இவர்களில்
> ஒருவர் - சித்தரிக்கும் மகத்தான புதினம் இது.
>
> வாழ்ந்த போது எந்த விதமான நிறுவன அங்கீகாரமும் கிடைக்காமல்,
> அதற்காகக் கவலைப் படாமல் தன் பணிகள் அளித்த மனத் திருப்தியோடு
> இறந்தவர் சி.சு.செல்லப்பா. தாமதமாக வந்த விருது இது.
>
> மலையாளத்தில் என் அன்பு நண்பர் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவருடைய
> "ஆத்தூர் ரவிவர்மயுடெ கவிதகள்" நூலுக்காக இவ்வாண்டு சாஹித்ய அகாதமி
> விருது பெறுகிறார். தமிழறிந்த, தமிழ் ஆர்வம் மிக்க ஆற்றூர் ரவிவர்மா
> தமிழிலிருந்து குறிப்பிடத் தகுந்த புத்திலக்கியங்களை மலையாளத்துக்கு
> மொழி பெயர்த்தவர். சுந்தரராமசாமியின் "ஜே.ஜே சில குறிப்புகள்"
> அவற்றில் ஒன்று. (சுந்தர ராமசாமி, தகழியின் மலையாள நாவல்களான
> "செம்மீன்", "தோட்டியின் மகன்" ஆகியவற்றைத் தமிழாக்கியிருக்கிறார் -
> பெருமையோடு பெற்றும், உவகையோடு அளித்தும் பரிமாறிப் பங்கு பெற்று
> வளரும் மொழிக்குடும்பம் நம்முடையது).
>
> ஆற்றூர் ரவிவர்மாவுக்கு வாழ்த்துக்கள். arvarma@m... என்ற
> மின்னஞ்சல் முகவரியில் அவருக்கு நீங்களும் வாழ்த்துரைக்கலாம்.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Send your FREE holiday greetings online!
> http://greetings.yahoo.com