From jaybee@... Mon Dec 24 04:01:58 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 12:01:58 -0000
Received: (qmail 88273 invoked from network); 24 Dec 2001 12:01:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 12:01:58 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 12:01:53 -0000
Received: from user (sp-103-47.tm.net.my [210.186.103.47]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOU001HCK32JL@...> for agathiyar@yahoogroups.com; Mon, 24 Dec 2001 20:01:52 +0800 (SGT)
Date: Mon, 24 Dec 2001 20:04:43 +0800
Subject: Bamboo bridges - Re: [agathiyar] 60 years ago.....A True story#2
In-reply-to: <3.0.3.32.20011208230118.01d73b54@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011224200443.0263f4d0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011207215057.0070fd70@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14221
அன்பர்களே,
At 11:01 PM 12/8/01 +0800, JayBee wrote:
>
> மலாயாவின் நடுப்பகுதியில் central range என்னும்
>மலைத்தொடரும் அடர்ந்த காடுகளும் இருக்கின்றன. நதிக்கரைகள்,
>கடற்கரைகள் எங்கும் சதுப்பு நிலங்கள். இவற்றையெல்லாம்
>ஜப்பானியர் கடந்து வரமாட்டார்கள் என்று பிரிட்டிஷார் எண்ணினர்.
>ஆகவே அந்த வழியிலேயே ஜப்பானியர் வந்தனர். சதுப்பு நிலங்களில்
>காண்டா மரம் என்னும் ஒரு வகை மரம் உண்டு. அதன் வேர்கள்
>நீர் மட்டத்துக்குமேல் படர்ந்து விளங்கும். அந்தக் காண்டா
>மரவேர்களின் மீது தாவித் தாவிச் சென்றனர்.
> மூங்கில்களை இணைத்துச் சிறு பாலங்கள் செய்தனர்.
>கனக்குறைவானவை. சதுப்பு நிலத்தில் போர்வீரர்கள் வரிசையாக
>ஒருவர் பின்னால் ஒருவர் நின்றுகொண்டு, குனிந்துகொள்வார்கள்.
>அவர்களின் முதுகுகளின்மீது அந்த மூங்கில் பாலங்கள் வைக்கப்படும்.
>அவற்றின் மீது சைக்கிள்களில் சிறு தளவாடங்களை ஏற்றிக்கொண்டு
>மற்ற வீரர்கள் செல்வார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் காட்சியை கீழ்க்கண்ட இலக்கில்
காணலாம்.
> மூன்றே நாட்களில் இப்படி மலைக்காடுகளைத் தாண்டி
>மலாயாவின் வட எல்லையில் இருந்த ஜித்ரா என்னும் ராணுவத்தளத்தை
>அடைந்தனர்.
> யுத்தத்துக்கு முன்னாலுள்ள சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான
>ஜப்பானியர் மலாயாவில் பல ஊர்களில் சிறு தொழில் செய்பவர்களாக வந்து
>சேர்ந்தனர். ஒவ்வொரு ஊரிலும் ஜப்பானிய நாவிதர்கள் நாலைந்து பேர்
>இருப்பர். இவர்கள் உளவு வேலை செய்தனர். போருக்குச் சில ம
>தங்களுக்கு முன்னர் ஒன்றுசொன்னார்ப்போல அத்தனை ஜப்பானியரும்
>திரும்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் தயாரித்திருந்த வரைபடங்களில் ஒவ்வொரு
>கிராமம், ரப்பர் எஸ்ட்டேட் ஆகியவற்றில் செல்லும் ஒற்றையடிப்
>பாதையெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப்பாதைகள் எல்லாம்
>பிரிட்டிஷ் ராணுவத்தினருக்குத் தெரியாது.
> ஓரிடத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் அரண்கள் அமைத்து நிலை
>கொண்டிருந்தால், ஜப்பானியர் அவர்களுக்குத் தெரியாமல், இரவில்
>அந்த ஒற்றையடிப்பாதைகளிலேயே சென்று பிரிட்டிஷ் அரணுக்குப்
>பக்கவாட்டிலும் பின்பக்கத்திலும் வந்து இருட்டில் தாக்குவார்கள்.
>எதிர்த்தாக்குதல்கூட செய்யமுடியாத நிலையில் பிரிட்டிஷார் தரப்பு
>ஓடிவிடும்.
> சுங்கைப் பட்டாணியில் ஒரு சிறிய விமானத்தளம் இருந்தது.
>ஜப்பானியர் மிக விரைவாக வந்துவிட்டதால், அந்த விமானங்களையும்
>அப்படியே விட்டு விட்டுச்சென்றனர். அந்த விமானங்களை எடுத்துக்கொண்டு
>பினாங்கின்மீது ஜப்பானியர் குண்டு வீசினர். ஏதோ பிரிட்டிஷ் விமானங்கள்
>போர்ப்பயிற்சி செய்வதாக நினைத்துக்கொண்டு, எஸ்பிலனேட் மைதானத்தில்
>மக்கள் மடக்கு நாற்காலிகளைப்போட்டுக்கொண்டு அமர்ந்து வேடிக்கை
>பார்த்தனர். அவர்களையெல்லாம் மெஷின் துப்பாக்கியால் ஜப்பானியர்
>சுட்டுக்கொன்றனர். அதிகாரபூர்வமான வரைபடங்களின் பற்றாக்குறையால்
>பள்ளிக்கூட அட்லாஸ்களையே பெரிதும் பயன்படுத்திய ஜப்பானியர்களுக்கு
>பிரிட்டிஷார் விட்டுச்சென்ற மேப்புகள்வரப்பிரசாதமாக விளங்கின.
> கோலாலம்பூர் போன்ற பெரிய ஊர்களுக்குள் நுழைந்து
>சண்டையிடாமல் சுற்றிச்சென்றுவிடுவது ஜப்பானியரின் வழக்கம். இது
>சீனப் போரியல் ஞானி ஸுன் ஃட்ஸுவின் போரியல் சித்தந்தத்தில் உள்ள
>உத்திகளில் ஒன்று.
> ஜப்பானியரின் மின்னர் போர் முறையால் நட்டுக்குக் குறைவான
>சேதமே ஏற்பட்டது.
> அவர்கள் இந்த நாடுகளையெல்லாம் பிடித்ததற்குக்காரணமே,
>அவற்றின் இயற்கை வளங்களையும் மனித ஆற்றல்கள் உழைப்பு
>போன்றவற்றை ஜப்பானியப் பேராதிக்கக் கூட்டுறவு வட்டத்திற்குப்
>பயன்படுத்துவதுதான் அவர்களின் குறிக்கோள். ஆகையால்தான்
>அழிவை அதிகம் செய்ய அவர்கள் விரும்பவில்லை. போரின்போது
>மலாயாவில் ஏற்பட்ட சேதங்கள் பின்னர் வந்த அமெரிக்க பி-52
>குண்டுவீச்சு விமானத்தாக்குதல்களாலேயே ஏற்பட்டவை. பினாங்கில்
>எங்கள் தெருவில் இருந்த கட்டடங்களில் கால்வாசி, குண்டுவீச்சில்
>காலியாகின. நேர் எதிர்வரிசையில் இருந்த வீடுகளின் வரிசை
>தரைமட்டமாகியது. எங்கள் வீட்டின் பின்னால் இருந்த கம்பிக்கிராதி
>அப்படியே கழன்று தொலைவில் தள்ளி விழுந்தது.
> இப்படியாக 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கப்பூரையும்
>கைப்பற்றிக்கொண்டனர்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>===========================