From ramaninaidu@... Mon Dec 24 10:08:56 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 18:08:56 -0000
Received: (qmail 95389 invoked from network); 24 Dec 2001 18:08:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 18:08:56 -0000
Received: from unknown (HELO smtp014.mail.yahoo.com) (216.136.173.58) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 18:08:56 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.217) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 24 Dec 2001 18:08:52 -0000
Message-ID: <005a01c18ca6$78f3fc00$d9eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , Subject: thiruvenmpavai 10 tamil
Date: Mon, 24 Dec 2001 23:37:22 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14229
திருவெம்பாவை - நாள் பத்து - பாடல் பத்து
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்.
பத்தாம் பாடலில் திருக்கோயிலையும் அக்கோயில் குளத்தையும் நோக்கிப் பாவையர் பரமன் புகழ் பாடி நாடிப்
போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் அவன் நினைவே. அந்த நினைவுக்கு ஒரு புதிய வடிவம்
தருகிறார்கள் இந்தப் பாடலில்.
கவிஞன் செஞ்சொற் கவியின்பத்தில் திளைக்கிறவன். தோய்ந்த சுவையன்றியும் சொல்தோறும் சொல்தோறும்
திளைத்து அதன் பெற்றி இன்பத்தில் தோய்ந்து மீண்டும் மீண்டும் கவிதைச் சுவை இன்பத்திலே நிலைப்பவன்
கவிஞன். அப்படியே இறை உணர்வு ஓர் அனுபவமாகிப் போக அதில் மீண்டும் மீண்டும் தோய்ந்து நிலைத்து
நிற்கும் அனுபவத்தை மணிவாசகர் இந்தப் பாடலில் சொல்லோவியம் ஆக்கியிருக்கிறார்.
பாதாளத்தையும் தாண்டி நீள்பவை அவன் திருவடிகள். சொல்லால் அளவிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு நெடிது
நீள்கின்றன. பாதங்கள் அப்படி எனில் படிவங்கள் எப்படியோ?
பெண் ஒரு பாகத்தவன். அப்படியான மூர்த்தங்களை எல்லாம் பட்டியலிட்டு முடித்துவிட முடியுமா என்ன?
அம்மையப்பனாக மட்டுமா இருக்கிறான்? இல்லையே, திருமேனி ஒன்றல்லன்.
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாதவன். ஆயிரம் திருநாமம் பாடி ஆயிரம் வடிவம் தந்தாலும் அவை
தாண்டியவன். அப்பர் சுவாமிகளும் ஒருவன் அல்லன் ஓர் ஊரன் அல்லன் என்பார்.
சொல்லானது கருத்துப் பொருளையும் காட்சிப் பொருளையும் உணர்ந்தபடி எடுத்துரைத்து விளக்குவது. பொருள்
பற்றிய தெளிவை முழுக்க, தெற்றெனத் தெளிவாகத் தருவதே சொல். சொல்லுக்கும் பொருளுக்குமான பிணைப்பே
அம்மை அப்பன் பிணைப்பு என்று காளிதாசன் சொல்வதாகச் சொல்வார்கள்.
ஆனால் சொல்லால் நம் அன்றாட அனுபவங்களைக் கூட முழுமையாக விளக்க முடிவதில்லை. சொல்லின் ஆற்றல்
போதாமையால் சைகைகளைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறோம். நாவைத் துருத்துகிறோம். தலையை அசைத்து
விழிகளை உருட்டிப் பேசுகிறோம். அப்படி நாளும் பழக்கமுற்ற உணர்வுகளுக்கே சொல் முழுத்திறன் பெறவில்லை
என்றால் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய பரம்பொருளின் உருவத்தை நம் அறிவானது சொல்
கொண்டு எட்டிப் பற்றிவிடுமா என்ன? அல்லது அப்படிப் பற்றி எடுக்கச் செய்த முயற்சியையாவது சொல் முழுக்க
வெளிப்படுத்திவிடுமா என்ன? தாயுமானவர் கூட சொல்லும் பொருளும் ஒரு பெருஞ்சுமையாகிப் போகிறது
என்பார்.
அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளும் சுமைகாண் பராபரமே.
இறைவன் அனுபவத்தின் உயிர்க் காதல். சிந்தை வாய்த் தேன். அவனை உணர அவனுக்குக் கை கால் படைத்துச்
சொல்லால் அளக்க முயன்றால் வெற்றி கிடைக்கவா செய்யும்? சொற்கழிவு என்ற தொடரின் அருமையைப்
பாருங்கள்.
விண்ணுலகும் மண்ணுலகும் வேதமும் சேர்ந்து கூட்டணி அமைத்து நாமரூபங்கள் ஓதினாலும் அவற்றின் சிறைக்குள்ளே
சிக்கமாட்டான் சிவ பரம் பொருள். ஓத உலவா இந்த நிலையினன் என்றாலும் சுந்தரருக்குப் போலவே நமக்கும்
அவன் தோழனே. சொல் வலையில் படாத சொக்கம் தொண்டர்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டவன்.
உள்ளத்தில் இருந்தும் அறிந்து கொள்பவர் சிலரே. கள்ளம் போனால் உள்ளது காணும் என்பது வாக்கு. எனவே
தூய்மை பெறும் உள்ளம் கடவுள் உண்மை காண்கிறது என்றாகிறது.
பத்தாம் பாடல் கோயில் திருப்பணி செய்யும் பாவையரிடம் நோன்பிருக்கும் பாவையர் கேட்கும் கேள்வியாக
அமைகிறது. பரமனைப் பட்டியல் சீட்டிலே பதிய வைக்க முடியவில்லையே. அரனின் கோயில் திருத்தொண்டு
செய்கிறவர்களே, நீங்கள் சொல்லுங்கள். அரனின் ஊர் எது? சரியான பேர் எது? உற்றார் உறவினர் யார்
யார்? ஒட்டி வாரா அயலவர் யார்? அவனையே பாடும் எங்களுக்கு அவனைப் பாடும் நெறி தெரியவில்லை.
சரியான நெறியை எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும். என்கிறார்கள்.
கோயில் திருப்பணி செய்யும் பெண்களாக இப்பாடலில் தோன்றுவோர் உருத்திர கன்னியர் என்பர்.
ஒரு பக்தனின் ஏலாமையைப் பாருங்கள். இறைவா, உன்னைக் குளிப்பாட்ட ஒரு குடம் நீர் கொண்டு வந்தேன்.
அந்த ஒரு குடம் நீரில் நாற்பத்திரண்டாயிரம் கோடி ஜீவன்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய். எந்த நீரைக் கொண்டு உன்னைக் குளிப்பாட்டுவது? இறைவா, உனக்குச் சூட்ட மலர்கள் கொய்து
மாலை கட்டி வந்தேன். நீதான் வண்டாக இருந்து ஏற்கெனவே அந்த மலர்களை முகர்ந்துவிட்டாயே. இறைவா,
உனக்குப் படைக்கப் பாலைக் காய்ச்சிக் கடைந்து வெண்ணெய் எடுத்து வந்தேன். நீதான் கன்றாக இருந்து அந்தப்
பாலை ருசித்துவிட்டாயே. அது நாமதேவர் பாடலின் பொருள். இறைவன் எதிலும் அது
அதுவாக இருப்பதைத்தானே மாணிக்கவாசகரும் இந்தப் பத்தாவது பாடலில் கொண்டாடுகிறார்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com