From eramurug@... Mon Dec 24 17:07:15 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 01:07:15 -0000
Received: (qmail 334 invoked from network); 25 Dec 2001 01:07:15 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 01:07:15 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 01:07:15 -0000
Message-ID: <20011225010715.55060.qmail@...>
Received: from [210.214.131.35] by web14803.mail.yahoo.com via HTTP; Mon, 24 Dec 2001 17:07:15 PST
Date: Mon, 24 Dec 2001 17:07:15 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: sahitya academy award for si.su.sellappa
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14239
Lavanya,
Was it mAlan? I vaguely remember it is Thiruppur
Krishnan..where did I read it.. sify.com?
Rgds,
Eramu
--- nchokkan wrote:
> வார இறுதியில் கிடைத்த மிகநல்ல செய்தி இது ! மணிக்கொடி முதல்வர்,
> அமரர் சி. சு.
> செல்லப்பாவின் புதினத்திற்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது
> மிக்க மகிழ்வளிக்கி
> றது !
>
> சில ஆண்டுகள் முன்பு, இந்த புதினத்தை நூலாக வெளியிடுவதற்கு சி. சு.
> செ. அவர்கள்
> பட்ட சிரமங்களை மாலன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். கட்டுரை
> முழுதும் தற்போது நி
> னைவில் இல்லை (என் டைரியில் குறித்து வைத்திருக்கிறேனா, தேடவேண்டும்
> !)
> 'சுதந்திர தாகம்' நூலின் கையெழுத்துப் பிரதியை அவர் பாதுகாப்பாய்
> போற்றி வைத்தி
> ருந்ததையும், அந்த நாவலின்மேல் அவர் கொண்டிருந்த தாய்மைப்பாசத்தையும்
> விவரித்தி
> ருந்த கட்டுரை அது. விடுதலைப்போராட்ட காலத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு
> சொன்னால்
> போதும், உடனே 'அந்த அலமாரியில் நான்காவது கட்டில், மூன்றாவது
> அத்தியாயத்தை
> எடு' என்று தன் நினைவிலிருந்தே கச்சிதமாய்ச் சொல்வாராம் ! அந்த
> அளவு தன்
> படைப்பை நேசித்திருக்கும் முன்னோடி எழுத்தாளர் சி. சு. செல்லப்பா
> அவர்களுக்கு வி
> ருது வழங்குவதன்மூலம், முருகர் சொல்வதுபோல அகாதமி தன்னை
> பெருமைப்படுத்தி
> க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை !
>
> என்றும் அன்புடன்,
> நாக சுப்ர மணியன். சொ.
>
> --- In agathiyar@y..., "era.murugan achwin"
> wrote:
> > அகத்திய அன்பர்களே,
> >
> > இந்த ஆண்டு அமரர் சி.சு.செல்லப்பாவுக்கு விருது கொடுத்து சாஹித்ய
> அகாதமி
> > தன்னைக் கௌரவப் படுத்திக் கொண்டுள்ளது.
> >
> > தமிழ் வாழ வாழ்ந்த விடுதலைப் போராட்ட தியாகி அமரர்
> > சி.சு.செல்லப்பா. தமிழில் படைப்பிலக்கியமும் (முக்கியமாகப்
> > புதுக்கவிதை), இலக்கிய விமர்சனமும் செழிக்கத் தன்னலமற்ற
> தொண்டாற்றிய
> > சி.சு.செல்லப்பா 'எழுத்து' பத்திரிகையை அறுபதுக்களில்
> நடத்தியவர்.
> > 'மணிக்கொடி', 'சரஸ்வதி' போல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய
> > தமிழ் இதழ் 'எழுத்து'.
> >
> > அவருடைய "வாடி வாசல்", மதுரை - வத்தலக்குண்டு மண்ணின் மணம் கமழும்
> > நாவல். 'சரஸாவின் பொம்மை' சிறுகதைத் தொகுதி இம்மொழியின்
> > சிறுகதை வளத்துக்கு எடுத்துக்காட்டு.
> >
> > அமரர் செல்லப்பாவுக்கு அவர் கடைசியாக எழுதிய "சுதந்திர தாகம்"
> > நாவலுக்காக இப்பரிசு கிடைத்திருக்கிறது. பாரத பூமியின் விடுதலைப்
> > போராட்டத்தில் பங்கு கொண்ட, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட
> > இந்தியத் தவப் புதல்வர்களின் வரலாற்றை - சி.சு.செல்லப்பாவும்
> இவர்களில்
> > ஒருவர் - சித்தரிக்கும் மகத்தான புதினம் இது.
> >
> > வாழ்ந்த போது எந்த விதமான நிறுவன அங்கீகாரமும் கிடைக்காமல்,
> > அதற்காகக் கவலைப் படாமல் தன் பணிகள் அளித்த மனத் திருப்தியோடு
> > இறந்தவர் சி.சு.செல்லப்பா. தாமதமாக வந்த விருது இது.
> >
> > மலையாளத்தில் என் அன்பு நண்பர் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவருடைய
> > "ஆத்தூர் ரவிவர்மயுடெ கவிதகள்" நூலுக்காக இவ்வாண்டு சாஹித்ய
> அகாதமி
> > விருது பெறுகிறார். தமிழறிந்த, தமிழ் ஆர்வம் மிக்க ஆற்றூர்
> ரவிவர்மா
> > தமிழிலிருந்து குறிப்பிடத் தகுந்த புத்திலக்கியங்களை மலையாளத்துக்கு
> > மொழி பெயர்த்தவர். சுந்தரராமசாமியின் "ஜே.ஜே சில குறிப்புகள்"
> > அவற்றில் ஒன்று. (சுந்தர ராமசாமி, தகழியின் மலையாள நாவல்களான
> > "செம்மீன்", "தோட்டியின் மகன்" ஆகியவற்றைத்
> தமிழாக்கியிருக்கிறார் -
> > பெருமையோடு பெற்றும், உவகையோடு அளித்தும் பரிமாறிப் பங்கு பெற்று
> > வளரும் மொழிக்குடும்பம் நம்முடையது).
> >
> > ஆற்றூர் ரவிவர்மாவுக்கு வாழ்த்துக்கள். arvarma@m... என்ற
> > மின்னஞ்சல் முகவரியில் அவருக்கு நீங்களும் வாழ்த்துரைக்கலாம்.
> >
> > அன்புடன்,
> > இரா.முருகன்
> >
> >
> >
> > __________________________________________________
> > Do You Yahoo!?
> > Send your FREE holiday greetings online!
> > http://greetings.yahoo.com
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com