From muguntharaj@... Tue Dec 25 01:54:13 2001
Return-Path: X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 09:54:13 -0000
Received: (qmail 54936 invoked from network); 25 Dec 2001 09:54:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 09:54:13 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 09:54:13 -0000
Received: from unknown (HELO mugunth) (210.186.194.123) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 25 Dec 2001 09:54:05 -0000
Message-ID: <015e01c18d2c$90d15580$1d966acb@mugunth>
To: Cc: References: <20011223153556.24565A3E8@...>
Subject: Re: [agathiyar] Maariamman Goddess = kannaki ???
Date: Tue, 25 Dec 2001 18:11:45 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4133.2400
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4133.2400
From: "S.Muguntharaj" X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14245
அன்புள்ள இளங்கோ!
சிலம்பு மடல் படைத்த நீங்கள் தான் இந்த ஆய்வையும் செய்ய பொருத்தமானவர்.
விரைந்து ஆய்ந்து , தமிழர்க்கு அறியபடுத்துங்கள்.
நான் சிறுபையனாக இருக்கும் போதுதான்மாரியம்மன் பண்டிகையை கிட்ட இருந்து கவனித்திருக்கிறேன்...அப்பறம் பள்ளி கல்லூரி படிக்கும் காலங்களில் எங்க அப்பா ஒவ்வொரு வருடம் பண்டிகையின் போதும்.. மாரியாய் நொம்பி போட்டுருக்காங்கடா ஊருக்கு வந்து போ என்று எழுதுவார் எனக்கு தான் சென்று வர நேரம் இருக்காது...
உங்கள் ஆய்வுக்கு சில குறிப்புகள்.
நான் பார்த்தவரை, மாரியம்மன் பண்டிகையின் போது ஒரு மரச்சிலையை(மூன்று கையுடைய கவட்டை மாதிரி இருக்கும்) மாரியம்மனின் கனவனாக பாவித்து கோயிலின் முன் வைத்து பூசைகள் நடைபெறும்.
பூசையின் கடைசி நாள், அந்த சிலையை.. கொண்டுபோய் ஊர் கோடியில் இருக்கும் கினற்றில் இறக்கி விடுவார்கள்....
அதன் பிறகு சில நாட்களுக்கு கோயில் பக்கம் யாரும் போக மாட்டார்கள்.. (கோயில் பூசாரி சாமி கோவத்துல இருக்கு... நான் ராத்திரி புலம்புவதைக்கூட கேட்டேன் என்று சொல்ல கேட்டுருக்கேன்....)
ஆனால் இங்கு நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னன்ன... மாரியம்மன் பண்டிகையின் கடைசி தினத்தன்று நடக்கும் சம்பிரதாயங்களின் போது தமிழில் பல பாடல்களை பூசாரிகள் பாடுவதைக்கெட்டுள்ளேன் அந்த பாடல்களை நீங்கள் கவனித்தால்... சிலப்பதிகார சாயல் இருக்கா என்று அறிந்துகொள்ளலாம் உங்கள் ஆய்வுக்கு உதவியாக இருக்கும்......
அன்புடன்
முகுந்தராஜ்
----- Original Message -----
From: Elangovan N
To: agathiyar@yahoogroups.com
Cc: tamil-ulagam@egroups.com
Sent: Sunday, December 23, 2001 11:35 PM
Subject: Re: [agathiyar] Maariamman Goddess = kannaki ???
அன்பின் முகுந்தராசு,
கண்ணகிக்கு கோயில் கட்டிய காலந்தொட்டு தெய்வமாக
வழிபடப் படுகிறார். இங்கு மட்டுமல்ல இலங்கைக் கண்டியிலும் கண்ணகிக்
கோயில் உண்டு; வழிபாடும் உண்டு.
நீங்கள் கூறியது போல மாரியில்லா ஊரில்லை. ஒவ்வொர் ஊரிலும்
ஊர்த் தெய்வம் ஒன்றிருக்கும். அதற்கு வருடா வருடம் ஊர்ப் பொது விழா
நிகழும். அத்தெய்வங்கள், காத்தான், கருப்பன், மதுரைவீரன் போன்ற தெய்வங்களாகவோ (எங்கள் ஊரில்
காத்தான் கழுவேற்றம் மிகவும் அந்தப்
பகுதியில் அறியப் பட்ட ஒன்று ), அடைக்காயி, வனத்தாயி, அரசாத்தி,
நடாத்தி, எல்லையம்மன், காளியம்மன் போன்ற பெண் தெய்வங்களாகவோ இருக்கும்.
அதோடு ஊரில் மாரியம்மன் கோயிலும் உண்டு. ஊர் விழா நடக்கிறதோ
இல்லையோ, ஊர்த் தெய்வம் தேரேறி வருகிறதோ இல்லையோ (சாதிச் சண்டையால் பல தேர்கள் நின்று
விட்டன) வருடா வருடம் மாரியம்மன் திருவிழா மட்டும் நான் அறிந்த வரையில் நிற்பதே இல்லை.
மாரியம்மன் விழாவை நான் எங்கள் கிராமங்களில் நிறைய பார்த்திருக்கிறேன்.
தமிழ்ப் பகுதிகளின் பொதுக்கடவுளாக மாரியம்மன் மட்டுமே இருப்பதாக
எனக்கு ஒரு எண்ணம் உண்டு. குறிஞ்சிக் கடவுளான முருகன் கூட
எல்லா ஊர்களிலும் இருப்பதாக சொல்ல முடியாது. எங்கள் ஊர்களில் முருகன்
கோயில் இல்லை. ஆனால் அம்மன் கூட முருகர் இருப்பார்.
எந்த ஊருக்கென்றும் தனியாக இல்லாமல் தமிழ்நாட்டிற்கென்று,
வழிபாட்டு முறையிலும் தமிழரை இணைக்கும் ஒரே கடவுளாக இருப்பது
மாரிஅம்மன் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு.
இந்தக் கருத்தோடு சிலப்பதிகாரத்தையும் படித்த போது எனக்கும்,
மாரியம்மன் கண்ணகியே (யோ) என்ற எண்ணம் ஏற்பட்டது.
பலருடன் பேசினேன்; பெரும்பாலானோர் அப்படியே என்றனர்.
பல தமிழ் அறிஞர்கள் 'இல்லை' என்று சில காரணங்களையும் கூறினனர்.
இது குறித்து ஒரு மடலை என் சிலம்பு மடல்கள் தொடரில் ஏற்ற வேண்டும்
என்றும் அதற்கு முன்னர் கண்ணகி கோட்டத்திற்கு சென்று வர வேண்டும் என்று
நான் முயன்று காலத் தாழ்வானதுதான் மிச்சம்:-) எனக்குப் போதிய தரவுகள்
கிடைக்காததால் நானும் மடல் எழுதவில்லை.
இருப்பினும் மாரியம்மன்தான் கண்ணகியாக இருக்கக் கூடும்
என்பதற்கு, மாரிஅம்மன் வழிபாட்டு முறைகளை ஒப்பு காட்டுகின்றனர்
பெரியோர்.
1) மாரியம்மன் விழா ஆடித் திங்களில்நடைபெறுவது வழக்கம்.
சித்திரா பெளர்ணமி அன்று சிறப்பு செய்யப் படுவது உண்டு.
ஆனால் ஆடியில் செய்யப்படுவதுதான் மாரியம்மன் திருவிழா.
ஆடி மாதத்தில்தான் மதுரை எரிந்து கண்ணகி சேரம் சென்று உயிர் நீத்ததும்.
2) சிலம்பின் அடிப்படையில், மதுரை எரிந்ததற்குப் பின் பாண்டிய நாட்டில்
மழை பொழியாமல் நீண்ட காலம் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிர்ப்பலிகளும், பல பூசைகளும் செய்த பின்
மழை பொழிந்ததாகக் கூறப்படுகிறது.
கண்ணகியைக் குளிர்வித்து அவளின் அருளால் மழை வந்ததாகக் கூறப்படுவதால், மாரி = மழை என்ற பொருளில்
கண்ணகிதான் மாரிக்கடவுள்
என்று சொல்லப் படுகிறது.
3) மழை வளம் இல்லாது வெப்பத்தால் வாடிய பாண்டிய நாட்டில்
"வெப்பு நோயும் குருவும் தோன்றின" என்று சிலம்பின் உரை பெறு கட்டுரையில்
காணப் படுகிறது. வெப்பு நோயும், குருவும் என்பது அம்மை நோயைக் குறிக்கும்
என்று சொல்லப் படுகிறது. அம்மை நோய்க்கும் மாரி அம்மனுக்கும் உள்ள
தொடர்பு நாடறிந்தது.
4) ஆடித்திங்கள் நடக்கும் மாரியம்மன் விழாவில்,
"குளுமை" செய்து ஊற்றுவார்கள். நீர், மோர், பாணக்கம் (பாணக்கம் என்றால்
என்ன பொருள் என்று அறிய ஆவல் ) கலக்கி ஊற்றுவார்கள்.
அடிப்படையில் கண்ணகியை/அம்மனைக் குளிர்விக்கும் சடங்காக இருக்கும்.
5) இளநீரைப் பொத்து அதையும் படைப்பார்கள். அந்த இளநீரை
கைம்பெண்களுக்கு கொடுப்பார்கள். கைம்பெண்களை முன்னால்
வைத்து நடைபெறும் விழா மாரியம்மன் விழா மட்டுமே. ( வீட்டில்
காது குத்துக்கு கூட பக்கத்தில் விட மாட்டார்கள் :-))) )
கணவனை இழந்த கடவுளாகிய கண்ணகி, என்ற வகையில்
கைம்பெண்ணுக்கு கொடுக்கப் படும் மரியாதையால் மாரி = கண்ணகி
என்று கருதப் படுகிறது.
6) விழாவில் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். அரிசிக்கூழோ, கேழ், கம்புக் கூழோவாகவோ இருக்கும்;
கிராமங்களில் மட்டும்தான் என்றில்லை.
நகரங்களிலும் இவ்விழா நடக்கிறது. (கடந்த ஆடியில் தாம்பரத்தில்
நண்பர் வீட்டுக்கு சென்ற போது அவர்கள்வீட்டில் காய்ச்சி ஊற்றிய
கூழைக் குடித்தேன்.)
7) ஆடு, கோழி போன்ற உயிர்ப் பலி பூசைகளும் இந்த காலத்திற்கு
பின்னால் ஏற்பட்டது என்றும் கருத்துண்டு. ஆனால் உண்மையாயிருக்குமா என்று தெரியவில்லை.
8) பெண்களால் மட்டுமல்ல, ஆண்களாலும் பயத்துடன் போற்றப்படுகிறது.
மழை பெய்யும் என்ற நம்பிக்கையால் இக்கடவுள் மக்களிடம் செல்வாக்கு
பெற்றது என்று கூறப்படுகிறது.
மழை பெய்கிறதோ இல்லையோ, கிராமத்து மக்களுக்கு,
மாரியாயி கோயிலை விட பெரிய நீதி மன்றம் கிடையாது. மாரியாயி நீயே
கேளு என்று "மண்ணை வாரி வீசுவதும்", கோயிலில் மண் அள்ளி வைப்பதும்
மிகவும் அறியப் பட்ட ஒன்று; கண்ணகி நீதி கேட்டாள்! நீதி வென்றாள்!
என்ற காரணத்தால், நீதி செய்வாள் என்ற நம்பிக்கை மக்களிடம் ஆழப் பதிந்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.
நீதி எப்பொழுதும் செத்துக் கிடக்கும்
தமிழ் நாட்டின் நீதி மன்றங்களாக மாரியம்மன் கோயில் ஆகியிருக்கிறது,
என்பதே என் எண்ணம். அதனால் கண்ணகியையும் மாரியம்மனையும்
ஒப்பாய்வு செய்வது பொருத்தம் என்று எண்ண இருக்கிறது.
ஈழகாவியம் என்ற நூலும், கோவிலன் கதை என்ற நூலும் சிலம்பின்
வழி நூல்களாக வந்தவை என்றும் அதில் இது குறித்து பல சேதிகள் இருக்கிறது என்றும் அறிகிறேன். (ஈழ
காவியத்தில் குளிர்ச்சிக் காதை என்றே ஒன்று உள்ளது என்று படித்திருக்கிறேன்). ஆனால் படிக்க வில்லை.
"சிலம்பு வழிச் சிந்தனைகள்" என்ற சரளா இராசகோபாலன் அவர்களின்
நூலில் கண்ணகி வழிபாடு, மாரியம்மன்வழிபாடு குறித்து பல சேதிகள்
கிடக்கின்றன. (ஒளிப் பதிப்பகம், 63, டாக்டர் அரங்காச்சாரி சாலை,
சென்னை 18).
அன்புடன்
நாக.இளங்கோவன்
>அன்பு நன்பர்களே!
>தமிழகத்தில் மாரியம்மன் கோயில் இல்லாத கிராமத்தை பார்பது அரிது.
>கன்னகியை தான் மக்கள் மாரியம்மனாக வழிபடுகிறார்கள் என்ற கருத்தும்
>இருக்கிறது.
>
>இது சம்பந்தமாக வெகுநாட்களுக்கு முன் படித்த ஒரு புத்தகம் தற்போது நிணைவுக்கு
>வருகிறது.
>
>அந்த புத்தகத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வர வில்லை ("மங்கல தேவி
>கண்ணகிகோட்டம்" என்று நினைக்கிறேன்). அது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக
>வெளியீடு. அந்த புத்தகத்தின் ஆசிரியர் பல சான்றுகளை காட்டி தற்போது
>தமிழரிடையே நிலவி வரும் மாரியம்மன் வழிபாடு, பத்தினி தெய்வமாக
>கண்ணகிவழிபாடுதான் என்று எழுதியிருப்பதாக நியாபகம்.
>அந்த புத்தகத்தை யாரேனும் அன்மையில்படித்துள்ளீர்களா??? அதுப்பற்றி
>விபரம் தெரிந்தவர்கள் இணையத்தில் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
>
>
>அன்புடன்,
>முகுந்தராஜ்.
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Send your FREE holiday greetings online!
>http://greetings.yahoo.com
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
----------------------------------------------------------------------------
-------------
தமிழர்க்கழகு தமிழெழுதல்
----------------------------------------------------------------------------
-------------
Yahoo! Groups Sponsor
---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------
Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
[Non-text portions of this message have been removed]