From sakthia@... Tue Dec 25 07:11:23 2001
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 15:11:22 -0000
Received: (qmail 9119 invoked from network); 25 Dec 2001 15:11:22 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 15:11:22 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.174.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 15:11:21 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 25 Dec 2001 20:43:39 +0530
Received: from 202.9.180.99 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Tue, 25 Dec 2001 20:43:35 +0530
Message-ID: <000401c18d55$c71715c0$63b409ca@sakthia>
To: Cc: "pas" , "harikrishnan" , "venkat" , "ramasamis" References: <20011223153556.24565A3E8@...> <015e01c18d2c$90d15580$1d966acb@mugunth>
Subject: Re: Our Bharathi-Kalaikkazaga-pon vizha
Date: Tue, 25 Dec 2001 20:09:15 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 25 Dec 2001 15:13:39.0375 (UTC) FILETIME=[BB650BF0:01C18D56]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 14249
என் அன்பு அகத்திய நண்பர்களே,
அனைவர்க்கும் வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முன்பே சொல்லி மகிழ்கிறேன்.22-12-01 அன்று
எனக்குப் பரவச தினம்.மகாகவி பாரதி சொன்னபடி
அன்று எனக்கு" திடம்படு தினம்.'
(தேடவும் எங்கே யிப்படிச் சொன்னார்?. ஒரே ஒரு
எழுத்துதான் மாற்றினேன்.)-அன்று மாலை அமுதசுரபி
ஆசிரியர் விக்கிரமன் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக
விடாமல் மாதம் ஒரு கவிஅரங்கை நடத்தி சாதனை செய்த/
செய்துவரும் பாரதிகலைக்கழகத்தினையும், அனைத்துக் கவிஞர்களையும்
அரவணைத்து (தலைவர் சுரா^ அவர்கள் முன் சாதி வேற்றுமையோ அல்லது 'அரசியல்'
விவகாரமோ கவிஞர்கள் பேசமாட்டார்கள்.-அன்பு ஒன்றே,நல்ல
கவிதை ஒன்றே முக்கியம்.கவி நன்றாக படிக்காவிட்டால்
தனியே(பொதுவாக)- அன்புடன் யின்னும் நல்ல முயற்சி
தேவை கவிஞரே! என தீரமாகச்சொல்லிவிடுவார்)-ஒரே கட்டுக்கோப்பில்
வைத்துவரும் கழகத் தலைவர் திரு. சுரா^ (SURAAJ)-
அவர்களின் பராக்கிரமத்தையும் பாராட்டினார்.
பின்பு ராம.வீரப்பன் அவர்கள் வழக்கம்போல் பாரதியைப்
பாராட்டிசற்றே அரசியல் நெடி கலந்து 45 நிமிடம் சொல் தூவினார்.
அவ்வை நடராfன் அவர்கள் தலைவரையும் கழகத்தையும் பாராட்டி
கவிதை எப்படி யிருக்கவேண்டும்,பாரதி கவிதைகள் எம்மாதிரி
எழுச்சியூட்டி நமக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தன என்றெல்லாம்
கூறி சில ஆங்கிலக் கவிகளையும் உதாரணம் காட்டினார்.அவர் பேச்சு
அமைதியான,சிரிப்பு கலந்த,அவையைக்கட்டிப்போடும் பேச்சாக
யிருந்தது.
நீதிபதி (கவிஞரும்கூட)-மோகன் அவர்கள் பேச்சு மிக அற்புதமான
பேச்சு.மகாகவி பாரதியின் /பாட்டின் பல்வேறு குணாதிசயங்களையும்
ஆவேசத்தையும் பலப்பல சான்றுகளோடு 20 நிமிடத்தில் 'குற்றாலச்'
சொற்பொழிவாய்ப் பொழிந்துதள்ளிவிட்டார்.பாரதி உலகுக்கே
சொந்தமான, 'நோபல்'பரிசைவிட மேலான பரிசுபெறும் கவிபொழிந்த
ஒரு ஆச்சர்ய யுகப்புரட்சிக் கவி என்றார்."His poems cannot be
inset/put in yur small capsules of samuthaaya maarram
or anmikam, or thesapparru etc,but he is also there, like
waves in a big ocean which only represent correctly
his vast 'IMAGE",vast vision.
உண்மையிலேயே அவரது கையால், ( பாரதியை தன் ஆத்மாவுக்குள்
அனுபவித்தவர் கையால்)- யானும் என் சக-கவிஞர்களும்(ஆகமொத்தம்
ஐந்து கவிஞர்களும்)- "கவிமாமணி'ப் பட்டம் பெற்றதை,வாழ்க்கையின்
ஒரு அற்புதத் திருப்பமாகவே கருதினோம்.
என் நண்பர் -அற்புத யிலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர்
சுகி சிவமும்(அவர் பேர் அழைப்பில் யில்லாதிருந்தும்- ஒரு மணி நேரத்திற்கு
தற்சமயம் 4000ரூ-வாங்கும் உலகம் சுற்றும் வாலிபச் சொற்செல்வர்)-
நம் தலைவர் சுரா^ அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு 15 நிமிடம்
மிக அற்புதமாகப் பேசினார்.தம் கையால் அவர்க்கு ஒரு பொன்னாடை
போர்த்தி கைவிரலில் அன்புப் பரிசாக மோதிரமும் அணிவித்தார்
எனில் பார்த்துக்கொள்ளுங்களேன்!கவிதை யிப்படித்தான்
யிருக்கவேண்டும் என எந்தக் கொம்பனும் கவிஞனுக்கு ஆணையிடமுடியாது
எனவும்,அப்படிவந்தால் அது செயற்கையான ஒப்பிக்கும் வாய்பாடாகத்தான்
திகழும் என்றும்,பொங்குகிற உணர்ச்சி-ஊற்றில் அறிவு திளைத்து,
நனைந்து ஆநந்தமாக, அனுபவித்து வருகிற நற்கவிதைகளே
காலம்தாண்டி நிற்கும் எனவும் விளக்கங்களோடு அற்புதமாக
எடுத்துரைத்தார்.
கவிமாமணிகள் ஐவரின் புகைப்படம் குறிப்போடு 24-12 அன்று
தினமணி'-யில் வெளியானது.பொதிகை'சானலில்'(டி.வி)-
23-12 அன்று யிந்நிகழ்ச்சியை விசேடமாக காட்டினார்களாம்.
தலைவர் சுரா^ அவர்கள் விருது-பெற்ற ஐவரையும்
தத்தம் மனைவிமார்களோடு மேடையில் நிற்கவைத்துபுகைப்படம்
எடுத்து மாலையும் மாற்றிக் கொள்ளச் செய்தார்கள்.
ஒரே ஆநந்தம் மனைவிமார் முகத்தில்!(திருமணம் நடந்த அக்கால
நினைவுக்குள் மூழ்கி எழுந்தோம்.)-
படம் வந்தவுடன்(ஒருவாரம் ஆகும்)-அந்த படத்தை 'scan'
செய்து யிங்கிடுகிறேன்.
விருது நிகழ்ச்சிக்குமுன் விக்கிரமன்-பெயர்த்தி'செல்வி ஐச்வர்யாவின்'
அற்புத நடன நிகழ்ச்சி நடைபெற்றது.பூராவும் பாரதியார் பாடல்கள்.
10 வயதுடைய அக்குழந்தை மேடையில் சுழன்று சுழன்று சின்னஞ்சிறு
கிளியே,பாரதநாடு போன்ற சில பாடல்கட்கு நடனமாடியது மேனியில்
எனக்கும், கூட அமர்ந்த கானடாக் கவி அநந்த்-திற்கும் ஒரு
தனிச் சிலிர்ப்பை ஊட்டியது.அடுத்தநாள் எம் தலைமையில்(5 பேர்)-
46 கவிஞர்கள் தத்தம் கவிகளை சுகமாக யிசைத்தனர்.10 மணி முதல்
மாலை 3 மணி வரை)-கவியரங்கம் விறுவிறுப்பாக,சுவையாக அமைந்தது.
நம் நண்பர் அநந்த்-கானடா ராகத்தில் 4 வரி அழகுறப் பாடி, பின்பு
கவிசொல்லி அவையைஅசத்திவிட்டார்.நல்ல வரவேற்பு அப்புலம்பெயர்ந்த
தமிழர்க்கு என அவையோர் பேசிக்கொண்டனர்.
என் விருதுக் கவிதையை(திரு. கவிமாமணி
யிலந்தையார் எழுதியது)- தனியாக யிங்கே யிடுகிறேன்.
yurs,
enrum anbu-ton,
yogiyaar-25-12-01