From ramaninaidu@... Tue Dec 25 08:13:34 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 16:13:36 -0000
Received: (qmail 80192 invoked from network); 25 Dec 2001 16:13:36 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 16:13:36 -0000
Received: from unknown (HELO smtp016.mail.yahoo.com) (216.136.174.113) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 16:13:33 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.150) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 25 Dec 2001 16:13:30 -0000
Message-ID: <007e01c18d5f$7a152460$96eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , , Subject: thiruvempavai 11 tamil
Date: Tue, 25 Dec 2001 21:10:35 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14254
திருவெம்பாவை - நாள் பதினொன்று - பாடல் பதினொன்று
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல
செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமை ஏலோர் எம்பாவாய்.
துயிலுணர்ந்து, துயிலுணர்த்திய பாவையர் பொய்கைக்கு வந்து சேர்கின்றனர். பொய்கையில் புகுந்து குடைந்து
குடைந்து நீராடுகிறார்கள். கையால் நீரைக் குடைந்து குடைந்து உடல் குளிர, உள்ளம் குளிரக்
குளிக்கிறார்கள்.
நீரால் அமையும் புறத்தூய்மையைப் பெற்றாயிற்று. அகத்தூய்மை வேண்டுமே. அதற்கும் மேலாக ஆன்மத் தூய்மையும்
வேண்டுமே. அதனால்தான் நீராடும் போதே நிமலன் திருவடிகள் பற்றிப் பாடுகிறார்கள். அப்படிப்
பாடும்போதே தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் புலப்படுத்துகிறார்கள். நாங்கள் உன் வழி
அடியோம். இறைவன் ஆட்கொண்டு அருளுவோர் நிலையும் அவர்கள் செய்யும் கடமைகளும் அடைந்தாயிற்று. இனி
நடக்க வேண்டியதைப் பார்த்துக் கொள்வது அவனே என்கிறார்கள்.
தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாயிற்று எனும் போது அதற்கான பயனை இறைவனிடம் உரிமையோடு
கேட்பதாக இந்தப் பாடல் அமைகிறது.
நெருப்புப் போன்ற திருமேனியில் தூய வெண்ணீறு பூசியிருப்பது நீறு பூத்த நெருப்பை நினைவூட்டுகிறது.
நீற்றுக்குள் நெருப்பு இருப்பதை அறியாதவர்கள் கடவுளுண்மையை அறியார்.
செல்வா எனும்போது அடியார்க்குச் செல்வம் இறைவனே என்கிறார்கள். செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
என்பது ஞான சம்பந்தருடைய பாடல் அடி.
மார்கழி நீராடி சிவனடியாரைக் கணவராகப் பெறுவது இறைவனின் திருவிளையாடல் கருணை என்கிறார்கள்.
முன்பு எப்போதும் போலவே இனியும் பாக்கியம் பெற இறைவன் காப்பாற்ற வேண்டும் என்பது வேண்டுதல்.