From nswaminathan@... Tue Dec 25 10:06:46 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 18:06:42 -0000
Received: (qmail 60773 invoked from network); 25 Dec 2001 18:06:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 18:06:42 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 18:06:45 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fBPI6ji19316 for ; Tue, 25 Dec 2001 10:06:45 -0800 (PST)
Message-ID: <000801c18d6e$75428fe0$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] A Doubt
Date: Tue, 25 Dec 2001 10:03:28 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 14256

நீங்கள் கேட்டது கதனகுதூகலத்தில் அமைந்த தில்லானாவாக இருக்கலாம்.
இது http://www.musicindiaonline.com/ ல் பாலமுரளிகிருஷ்ணாவின் பாடல்களில் உள்ளது.
அதில் 'முரளி மனோகர' என்ற சொற்றொடர் வரும்.

'முரளி' என்பது பாலமுரளிகிருஷ்ணாவின் முத்திரையாகும். 'முரளி கானப்ரிய',
'முரளி கான ரசிகப்ரிய', 'முரளி நாத வினோத' என்ற சொற்றொடர்களை
சமாயோசிதமாகப் புகுத்தி பாட்டில் 'முரளி' முத்திரை பதித்து விடுவார்.

அடிப்படையான 72 மேளகர்த்தா இராகங்களின் பலவிதக்கலவையில் 40,000க்கு
மேற்பட்ட கிளை இராகங்கள் ஏற்படமுடியும் என்று கணித்து இருக்கிறார்கள்.
பாலமுரளி ஒரு பிறவி மேதை. பல சொந்த சாகித்தியங்கள் இயற்றியிருக்கிறார்.
இதை 'முரளி கானம்' என்று குறிப்பிடுவார். பல தில்லானாக்களும் இயற்றியிருக்கிறார்.
தில்லானா இயற்ற அதிகத் திறமை வேண்டும்.
மஹதி, சுமுக சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி, ஜனசமோதினி, மனோரமா, ரோஹிணி, வல்லபி,
லவாங்கி, ஹம்ஸவினோதினி, ப்ரதிமத்யமாவதி, சுஷாமா போன்ற புது இராகங்களை
பாலமுரளி இயற்றியுள்ளார்.

மிகுந்த இசைத்தேர்ச்சி இருந்தால்தான்இவற்றை இனம்காண முடியும்.
இராகத்தைச் சொல்லாமல் இந்தப்பாடல்களை இசைத்தால் இவற்றின்
ஜன்ய இராகங்களின் சாயலே நினைவுக்குவரும்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
======================

-----Original Message-----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Date: Monday, December 24, 2001 4:42 PM
Subject: [agathiyar] A Doubt



அன்பர்களே,

நேற்று மாலை அரைகுறையாய் ஒரு டீவீ நிகழ்ச்சியைப்
பார்க்க நேரிட்டது.
அதில் பால முரளி கிருஷ்ணா கண்டுபிடித்த ராகம்
என்று ஏதோ ஆங்கிலத்தில் அறிவித்தார்கள்.
தொடர்ந்து அவர் பாடும்போது 'முரளி மனோகர' என்ற
சொல்லை வைத்துப் பாடினார். தில்லானாவாக அமைத்திருந்தார்.
ஆனால் கேட்பதற்கு அந்த ராகம் கதனகுதூகலம் போல்
தோன்றியது.
சரியாகக் கேட்கவில்லை.
'முரளி மனோகர' என்று புதிய ராகம் இருக்கிறதா?

அன்புடன்

ஜெயபாரதி