From jaybee555@... Wed Dec 26 03:48:13 2001
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 11:48:16 -0000
Received: (qmail 15267 invoked from network); 26 Dec 2001 11:48:16 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 11:48:16 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 11:48:13 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.123) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 26 Dec 2001 11:48:11 -0000
Message-Id: <3.0.3.32.20011226195057.0077d914@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 26 Dec 2001 19:50:57 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: More on Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-Reply-To: <3.0.3.32.20011207215057.0070fd70@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=26960409
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14268

At 09:50 PM 12/7/01 +0800, you wrote:
>
>அன்பர்களே,
>
> இது ஒரு உண்மைக் கதை. என் வாழ்க்கையுடன் நெருக்கமாகச்
>சம்பந்தப்பட்டது. வாழ்க்கையின் திசையை மாற்றிவிட்டது.
> இன்று டிசம்பர் 7-ஆம் தேதி.
> சரியாக அறுபதாண்டுகளுக்கு முன்னர் 7-12-1941-இல்
>ஜப்பானியப் பேரரசு, மலாயாத் தீபகற்பத்தின்மீது படையெடுத்தது.


இரண்டாம் உலகப்போரின்போது மலாயாவில் இருமுறைகள் லூட்டி
அடித்தல் நடைபெற்றது என்று சொன்னேனல்லவா?
முதன்முறை ஜப்பானியரின் வருகையின்போது ஏற்பட்டது.
அது வெகு விரைவில் ஜப்பானியரால் அடக்கப்பட்டுவிட்டது.
இரண்டாவது முறை ஜப்பானியரின் தோல்வியின்போது ஏற்பட்டது.

பர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப்பின்னர் சில மாதங்களிலேயே
அமெரிக்கர்கள் தங்கள் கடற்படையை ஒருமாதிரியாக நிலை நிறுத்திக்
கொண்டுவிட்டனர்.
ஃபில்லிப்பைன்ஸை விட்டு மெக் ஆர்தர் ஆஸ்திரேலியாவுக்குச்
சென்றுவிட்டார். அங்கிருந்து போர்த்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார்.
மிட்வேய் கடற்போரின்போது ஜப்பானியக் கடற்படையின் மிக வலுவான
பிரிவுகள் அழிக்கப்பட்டுவிட்டன.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் பரப்பளவுகொண்டதொரு
கடற்பிரதேசத்திலும் பெரும் நிலப்பரப்பிலும் ஜப்பானியரின் ஆதிக்கம்
ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதிரி விரிந்துகிடந்த பேரரசு அவர்களுக்குப்
பாதகமாகவே அமைந்தது. ஜப்பானியப் படைப்பிரிவுகள் அத்தனை
இடத்துக்கும் போதவில்லை.
மிட்வேயைத் தொடர்ந்து பல இடங்களில் ஜப்பானியர் தோற்க
ஆரம்பித்தனர்.
Island Hopping என்னும் உத்தியை அமெரிக்கர்கள் கையாண்டு,
ஒவ்வொரு தீவுக்கூட்டங்களகக் கைப்பற்றி முன்னேறினர். ஒவ்வொரு இடத்திலும்
லட்சக்கணக்கான ஜப்பானியப் போர்வீரர்கள் இறந்தனர்.
1945-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஃபில்லிப்பைன்ஸ், பர்மா,
நியூ கினி, இன்னும் சில தீவுகள் ஆகியவற்றை மட்டுமே அமெரிக்கர்களும்
பிரிட்டைஷாரும் பிடித்திருந்தனர். தாய்லாந்து, சீனாவின் பகுதிகள்,
மஞ்ச்சூரியா, தாய்வான், கொரியா, மலாயா, இந்தோனீசியா, இந்தோ சீனா
ஆகிய நாடுகள் இன்னும் ஜப்பானியரின் வசம் இருந்தன.
அத்துடன் ஜப்பான் நாடும் இருந்தது.
ஈவோ ஜீமா, ஓக்கிநாவா ஆகிய இரு இடங்களில் மூன்று லட்சத்துக்கு
மேல் ஜப்பானியரும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் அமெரிக்கர்களும் இறந்து போயினர்.
அமெரிக்க ஆங்கிலேயக் கூட்டணியினருக்கு, தாங்கள் இன்னும்
பிடிக்கவேண்டிய பிரதேசங்களை நினைக்கும்போது பெரும் மலைப்பாக இருந்தது.
இன்னும் எத்தனை லட்சம் வீரர்களும் தளவாடங்களும் போகுமோ, தெரியவில்லை
என்று திகைத்திருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஓர் அலாதியான ஆசாமி. எதையுமே
வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகச் செய்பவர். ஒரு மாதிரிப்பட்டவர். அவர்
கூட்டிக்கழித்துப் பார்த்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் டக்கென்று
அணுகுண்டை ஜப்பானின் ஹீரோஷீமா நாகாசாக்கி நகரங்களில் வீசிவிட்டார்.
ஜப்பானியர் சரணடைந்தனர்.
இதுதான், இன்னும் பிடிபடாமலிருந்த பல நாடுகளிலும் பிரச்னைகளை
ஏற்படுத்தியது.
ஏனெனில் சரணடைந்த பின்னர் யாருடைய பாதுகாவலும் அங்கெல்லாம்
இல்லாமற் போயிற்று. யாராவது அங்கு வந்து, சண்டையிட்டு இடங்களைப்
பிடித்திருந்தால், பாதுகாப்புப் பொறுப்பு கைப்பற்றியவர்களைச் சேர்ந்துவிடும்.
ஆனால் இங்கோ நிலைமை வேறு.
ஜப்பானியரிடமும் அதிகாரமில்லை. அமெரிக்கர்/ஆங்கிலேயர்
இன்னும் வரவில்லை.
அங்கையா சொல்வதுபோல, அப்படி அப்படியே போட்டது
போட்டபடி கிடந்தது.

அன்புடன்

ஜெயபாரதி



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com