From ramaninaidu@... Wed Dec 26 09:42:47 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 17:42:47 -0000
Received: (qmail 21920 invoked from network); 26 Dec 2001 17:42:46 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 17:42:46 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 17:42:46 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.37) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 26 Dec 2001 17:42:27 -0000
Message-ID: <002501c18e35$099bc960$25eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: nacciyar thirumoli 11 tamil
Date: Wed, 26 Dec 2001 22:38:59 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14272
மார்கழி நாள் பதினொன்று - நாச்சியார் திருமொழி
நான்காம் திருமொழி விளக்கம்
25.12.2001
நாச்சியாரின் நான்காம் திருமொழி கூடலிலுக்கும் பதிகம் என்று அறியப்படும். வட்டமாக ஒரு கோடு கீறி
அதற்குள்ளே சுழிசுழியாக சுற்றும் சுழித்து இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும் போது ஒற்றைக் கணக்காக
முடிவு பெற்றால் கூடாமை என்று கொள்வார்கள். இந்தக் குறிபார்த்தலுக்கு கூடல், கூடலிழைத்தல், கூடல் வளர்த்தல்,
கூடல் குறி என்ற வேறு பெயர்களும் உண்டு. திருமழிசைப் பிரான் நான்முகன் திருவந்தாதியில் "அழைப்பன்
திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட" என்று பாடுகிறார். அகத்திணைப் பாடல்களை
பக்தி இலக்கியத்துக்குக் கொண்டு சென்ற போது கூடலிழைக்கும் கூறும் எடுத்துச் செல்லப்பட்டது.
நாச்சியார் தமது நான்காம் திருமொழியை மிக எளிமையான இலக்கியமாக
க்கியிருக்கிறார். இறை இயல்பின் பேரிலும் அவதார மேன்மையின் பேரிலும் இப்பாடல்களை
க்கியிருக்கிறார்.
தெளிவுடைய பக்தர்கள் கைதொழும் தேவன், திருவேங்கடக் காட்டிலும் கண்ணபுர நகரிலும் வாழ்கிறவன், பூவிற்
பிறந்த பிரமனும் போற்றிப் பாராட்டுகிற கீர்த்தி உடையவன், வலும் அன்பும் உடையார் மனத்தில் அன்றி
வேறு இடத்தே தோன்றாதவன் என்றிவ்வாறு இறை இயல்புகளைப் பேசுகிறார்.
தேவகியின் மாமகன். வசுதேவரின் கோமகன். காளியன் மேல் நடனமாடியவன். மருத மரங்களை முறித்தவன்.
கஞ்சனைக் கொன்றவன். மதுரைக்குக் கொற்றவன். சிசுபாலனைக் கொன்றவன். துவாரகையின் காவலன். கன்று
மேய்க்கும் கோவலன். வாமனனாக உயர்ந்தவன். இவ்வாறு பெரிதும் கண்ணன் அவதார மேன்மை பாடுகிறது நான்காம்
திருமொழி.
அவன் அடிகளை வருடிக் கொடுக்க வேண்டும். அவன் ஓடிவந்து கையைப் பற்றித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள
வேண்டும். தன்னைத் தேடி வரவேண்டும். இவை நாச்சியாரின் கோரிக்கைகள்.
இப்பத்துப் பாடல்களில் சிறப்புற அமைந்திருப்பது இரண்டாம் மற்றும் நான்காம் பாடல்களாகும்.
"ஓட்டரா வந்து என் கைபற்றித் தன்னொடும் கூட்டுமாகில்"
என்கிறார். இறைவன் ஓடிவந்து தன் கைபற்றி இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டுமாம்.
"நந்தெருவின் நடுவே" வந்திட வேண்டுமாம்.
இப்பாடல்களின் கூறுகளைப் பொருத்திப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
பக்தர்களும் பிரமனும் தேடிப் போய்த் தொழும் சிறப்புடையவன். அசுரர் இராக்கதர்களை அழித்த வல்லமை
உடையவன். அப்படிப்பட்டவன் எளிவந்து தன்னைத் தேடி வரவேண்டும் என்று கூறுவதில் உள்ள பெருமிதம் இப்பத்துப்
பாடல்களுக்கு ஒரு முரண்தொடை அழகைத் தருகிறது.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com