From ramaninaidu@... Wed Dec 26 09:43:18 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 17:43:18 -0000
Received: (qmail 39185 invoked from network); 26 Dec 2001 17:43:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 17:43:18 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 17:43:18 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.37) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 26 Dec 2001 17:43:15 -0000
Message-ID: <002701c18e35$26273880$25eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: nacciyar thirumoli 12 tamil
Date: Wed, 26 Dec 2001 22:39:44 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14274

மார்கழி நாள் பன்னிரெண்டு - நாச்சியார் திருமொழி
ஐந்தாம் திருமொழி
26.12.2001

மன்னு பெரும் புகழ் மாதவன் மாமணிவண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்சங்கு இழக்கும் வழக்குமுண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்.

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலையற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வரக் கூவாய்.

என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருணக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய்.

மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூருறைவான் தன்
பொன்னடி காண்பதோர் சையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன் அடிசிலொடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்.

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன் வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலையல்லால் கைம்மாறு இலேனே.

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வது ஓர் சையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து வியை குலம் செய்யும்
அங்குயிலே உனக்கென்ன மறைந்துறவு ழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கை அவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி.

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையவன்
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன் கனி மரம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றையாகில் அவனை நான் செய்வன காணே.

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்.

அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் வன்வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்று இக் காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணன் வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்.

விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு கருங்குயிலே என்ற மாற்றம்
பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணா என்பாரே.








_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com