From ramaninaidu@... Wed Dec 26 09:43:35 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 17:43:34 -0000
Received: (qmail 95365 invoked from network); 26 Dec 2001 17:43:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 17:43:34 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 17:43:34 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.37) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 26 Dec 2001 17:43:30 -0000
Message-ID: <002801c18e35$2f5205c0$25eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppavai 12 tamil
Date: Wed, 26 Dec 2001 22:41:32 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14275

திருப்பாவை - நாள் பன்னிரெண்டு - பாடல் பன்னிரெண்டு

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பதினொன்றாம் பாடலில் தொடங்கிய வருந்திய அழைப்பு பன்னிரெண்டாம் பாடலிலும் தொடர்கிறது.

தலைவியின் இல்லத்துச் செல்வம் ஏராளமான பால்வளத்தைக் குறிப்பதாக அமைகிறது. அவளது சகோதரன்
வீட்டில் இருக்கும் எருமைகள் எண்ணிக்கையில் கணக்கிலடங்காது இருப்பதால் அனைத்திலிருந்தும் பால் கறப்பதென்பது
சிரமமான காரியம்தான். அவ்வாறு பால் கறக்காது விட்ட எருமைகள் தத்தமது கன்றுகளை நினைத்த அளவில்
தானாகவே பால் சொரியுமாம். அவ்வாறு சொரிந்து கொட்டிய பால் தரையில் சிந்திச் சேறாக்கும் அளவுக்குச்
செல்வக் குடும்பம் அவளுடையது. இலங்கையில் ராவணனை அழித்த இறைவனின் புகழைப் பாடியும் அவ்வளவு செல்வம்
படைத்த வீட்டுப் பெண்ணான அவள் தூங்கிக் கிடப்பது தகுமோ என்கிறார்கள். என்னதான் தூக்கமோ அது என்று
ஆச்சரியப்படுகிறார்கள். சுற்றியிருக்கும் அனைவரும்தான் இவள் அப்படிச் சோம்பிக் கிடப்பதைத் தெரிந்து
கொண்டார்களாம். எனவே அவளுடைய செல்வக் குடும்பத்தின் கெளரவத்துக்காகவாவது அவள் எழுந்து வரவேண்டுமாம்.

சம்பிரதாய விளக்கங்களில் நற்செல்வன் என்ற வார்த்தை ராமனின் தம்பியான லட்சுமணனைக் குறிப்பதாகச்
சொல்லப்படுகிறது. ராம சேவை என்ற சிந்தனை தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லாதிருந்தவன் லட்சுமணன்.
அவ்வாறே அவளுடைய சகோதரனும் பால் கறப்பது என்ற கடமையைத் தவிர்க்குமளவுக்கு இறைச் சிந்தனை உடையவன்
என்பார்கள்.

வேறொரு வகையில் இந்த அடிகளுக்கு விளக்கம் தரப்படுவதும் உண்டு. தானாகப் பெருகிப் பாயும் பால் இறைவனின்
கருணை என்பார்கள். அருச்சுனன் கேட்காத போதும் இறப்பும் வாழ்வும் பற்றிய விளக்கத்தைக் கீதையில் கண்ணன்
தானாக முன்வந்து அளித்ததை இதற்குக் காரியார்த்தமாகச் சொல்வார்கள்.

இந்தப் பாடலில் கன்றை நினைத்தவுடன் பால் சொரியும் அன்பையும் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சினத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அமைத்துக் கூறுவதைப் பற்றிய ஒரு விளக்கம் காணத்தான் வேண்டும். என்னதான்
ராவணன் மீது சினம் கொண்டவனாக இருந்தாலும் போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற அவனை அப்போதே
அழிக்கவில்லையே ராமன். இன்று போய் நாளை வா என்றுதானே அனுப்பினான்? அப்படியாகச் சினமன்றியும்
கருணை கொண்டிருந்த இறைவனின் பண்பைச் சிறப்பித்துப் பேசுகிறது இந்தப் பாடல்.

பேருறக்கத்தையும் இரண்டு வகையாகப் புரிந்து கொள்ளலாம். மானுட வாழ்வின் நோக்கமே ஆன்ம வளர்ச்சி.
ஆனால் சம்சார பந்தத்தில் பற்றுக் கொண்டு முக்கியமான கடமையை மறந்து போய் லெளகீகத்தில் உழன்று
கொண்டிருத்தல் ஒரு வகை உறக்கம்.

அடுத்து உறக்கம் என்பது இறைவனின் யோக நித்திரையைக் குறிக்கும் சொல்லான வைதிகம் என்பதோடும்
தொடர்புடையது. தன் கவனம் முழுவதையும் இந்த உலகத்தைப் புரப்பதில் வைத்து உறங்குவான் போலக் கண்களை மூடிக்
கிடப்பவன் இறைவன். வீட்டுக்குள்ளே படுத்திருப்பவள் லெளகீகத்தில் தோய்ந்து ஆன்மிகக் கடமையை மறந்தவள்
அல்ல. அதே சமயம் அவளுடைய உறக்கம் இறைவனின் உறக்கத்தைப் போன்றதும் அல்ல. என்றால் இது என்ன வகையான
உறக்கம் என்ற ஆச்சரியக் கேள்வி சரியாகத்தான் இருக்கிறது.

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் என்பதற்கும் இரண்டு வகையான விளக்கங்களைக் காணலாம். எல்லோரும்
வந்துவிட்டார்களோ என்ற கேள்விக்கு விடையாக எல்லோரும் விழித்து எழுந்து வந்துவிட்டார்கள் என்ற
பொருளில் அனைத்து இல்லங்களில் இருந்தும் நமது தோழியர் உறக்கம் கலைந்து எழுந்து வந்து விட்டார்கள் எனறு
சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக எல்லோருக்கும் நீ இன்னும் இப்படி உறங்கிக் கிடக்கிறாய் என்பது தெரிந்து போய்விட்டால் உன்
சகோதரனின் கெளரவத்துக்கல்லவா இழுக்கு என்ற கேள்வியாகக் வட இந்தக் கூற்றை எடுத்துக் கொள்ளலாம்.
முந்தைய பாடலில் தலைவியைப் பூதத்தாழ்வாராகக் கருதியதே போல் இந்தப் பாடலின் தலைவியைப் பொய்கை
ஆழ்வாரோடு தொடர்புபடுத்திக் காண்பார்கள்.

ஆழ்வார்களில் முதல்வர் என்ற வகையில் பொய்கையார் பிற ஆழ்வார்களுக்குத் தாயாகிறார். அவர்கள்
கன்றுகளாகிறார்கள். தன்னுடைய இறை அனுபவத்தைத் திருவந்தாதியில் வெளிப்படுத்திப் பிற ஆழ்வார்கள்
தத்தம் இறை அனுபவத்தைப் பாடல்களில் வெளிக் கொணர வைக்கிறார். பனித்தலை வீழ என்பதிலும் வாசற்கடை
என்பதிலும் முதலாழ்வார்கள் மழைக்காலத்தில் ஒரு வீட்டின் இடைகழியில் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி
கொண்டாடப்படுகிறது என்பார்கள்.
பொய்கை ஆழ்வாரின் பாடல்களில் காணப்படும் சில சொற்றொடர்கள் இந்தப் பன்னிரெண்டாம் பாடலுக்கு
அடியாகின்றன. ராமனை அவர் பூமேய மாதவத்தோன் என்பார். தாள் பணிந்த வாள் அரக்கன் என்று ராவணனைக்
குறிப்பார். பாதமத்தால் எண்ணினான் பண்பு என்று சினமன்றியும் கருணை காட்டிய ராமனின் சிறப்பைக்
குறிப்பார். பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீள்முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு என்பது
பாடல் வரிகள். இந்தக் கருணையே இறைவனை ஆய்க்குலத்துக் கன்னியரின் மனதுக்கினியானாக்குகிறது என்க.

இவ்வாறாக பன்னிரெண்டாம் பாடல் பக்தி இயக்கத்துக்கு ஆதாரமாக இருந்த முதல் ஆழ்வார்களில் முதல்வரான
பொய்கை ஆழ்வாரை மனதில் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. தவிரவும் இறைவனின்
கருணையைக் கொண்டாடி அவனை மனதுக்கினியானாக்குவதும் இந்தப் பாடல் என்று சொல்ல வேண்டும்.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com