From jaybee@... Wed Dec 26 20:17:30 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 04:17:29 -0000
Received: (qmail 90988 invoked from network); 27 Dec 2001 04:17:28 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 04:17:28 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 04:17:24 -0000
Received: from user (sp-103-76.tm.net.my [210.186.103.76]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOZ00IJ4IKAUF@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Dec 2001 12:17:00 +0800 (SGT)
Date: Thu, 27 Dec 2001 12:20:06 +0800
Subject: Island Hopping - Re: More on Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: <20011226235051.28963.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011227122006.011693d0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011226195057.0077d914@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14282
At 03:50 PM 12/26/01 -0800, you wrote:
>
>> மிட்வேயைத் தொடர்ந்து பல இடங்களில் ஜப்பானியர் தோற்க
>> ஆரம்பித்தனர்.
>> Island Hopping என்னும் உத்தியை அமெரிக்கர்கள் கையாண்டு,
>> ஒவ்வொரு தீவுக்கூட்டங்களகக் கைப்பற்றி முன்னேறினர். ஒவ்வொரு இடத்திலும்
>>
>> லட்சக்கணக்கான ஜப்பானியப் போர்வீரர்கள் இறந்தனர்.
>>
>
>சுவாரசியமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நன்றி.
>
>Island Hopping பற்றி?
>
>அன்புடன்,
>இரா.முரு
ஜப்பானியர்களின் பேரரசு அவர்களின்ஜப்பானியத் தீவுக்
கூட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு பசிஃபிக்
பெருங்கடல் முதற்கொண்டு பல கடல்களிலும் உள்ள சிறிய பெரிய தீவுகள்
அனைத்திலும் பரவியிருந்தது.
அமெரிக்கர்கள், பல்லாயிரக்கணக்கானமைல்கள் தூரத்திலிருக்கும்
பெரிய நாடுகளை எடுத்த எடுப்பில் தொட விரும்பவில்லை. மேலும்
அவர்களுக்குத் தளங்கள் தேவையாக இருந்தன.
Robert Bruce கதை படித்திருப்பீர்கள். ஸ்காட்லாந்து மன்னன்.
இங்கிலாந்தின் பேராதிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவன்.
'Brave Heart' படத்தில் பார்த்திருப்பீர்களே?
பன்முறைகள் அவன் ஸ்காட்லாந்தின் மையப்பகுதிகளையும்
தலைநகரையும் தாக்கிப்பிடிக்கப்பார்ப்பான். ஆனால் ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போய்விடுவான்.
ஒருமுறை உயிர்தப்புவதற்காகத் தலைமறைவாகத் திரிந்தபோது ஒரு
குடிசைக்குச் சென்று உணவு யாசித்தான். அங்கிருந்த கிழவி ஒருத்தி,
அவனுக்குச் சுடச்சுட ரொட்டி சுட்டுக் கொடுத்தாள்.
மூன்று நாட்களாக உணவில்லாதிருந்த ராபர்ட், அவசரம் அவசரமாக
அந்தச் சூடான ரொட்டியின் மையப்பகுதியில் விரல்களை வைத்து ரொட்டியைக்
விள்ளமுயன்றான்.
ரொட்டி நன்றாக விரல்களைச் சுட்டுவிட்டது.
அப்போது அந்த கிழவி சொன்னாள்:
"நீயும் அந்த ராபர்ட் புரூஸ் மாதிரியேஅவரசரக்காரனாக இருக்கிறாயே?
ரொட்டியின் ஓரப்பகுதிகள் முதலில் ஆறியிருக்கும். ஆகவே முதலில்
ஓரப்பகுதிகளைப் பிய்த்துவிட்டு அப்புறம்தான் ரொட்டியின் மையப்பகுதியில்
கைவைக்கவேண்டும்.தாதற்குள் அது ஆறியிருக்கும். இல்லையெனில்
இப்படித்தான் கையைச்சுட்டுக்கொள்ள நேரிடும். ராபர்ட் புரூஸும் அப்படித்தான்.
எடுத்த எடுப்பில் நாட்டின் மையப்பகுதியைப் பிடிக்கப்பார்க்கிறான். முதலில்
நாட்டின் ஓரப்பகுதிகளை அவன் பிடித்துக்கொள்ளவேண்டும். அங்கிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக அவன் உள்ளே சென்று இடங்களைக் கைப்பற்றவேண்டும்.
அப்படிச் செய்தானானால் விரைவில் ஸ்காட்லாந்து பூராவையும் அவன் பிடித்துக்
கொள்ளமுடியும்"
ராபர்ட் புரூஸ், சில நாட்களில் அந்தக்கிழவியின் யோசனைப்படியே
படைகளை நகர்த்தித் தாக்கி, ஸ்காட்லாந்தை சுதந்திர நாடாக்கிக் கொண்டான்.
அதேபோலத்தான்.
மெக் ஆர்தரின் போர்நடவடிக்கைகள் ஓரங்களிலிருந்து உட்செல்லுதலாக
அமைந்திருந்தது. முதலில் மிகக்கோடியில் இருந்த சிறு தீவுகள்; பின்னர்
அங்கிருந்து இன்னொரு தீவு. இப்படியே சென்றார். நியூ கினியில் இன்னொரு
முறையைக் கடைபிடித்தார்.
ஒரு தீவில் சண்டையிட்டு அதனைக் கைப்பற்றிய பின்னர்
அடுத்தாற்போல இருக்கும் இன்னொரு தீவை விட்டுவிடுவார். அதற்கடுத்த தீவில்
தாக்குதல் நடக்கும். இந்தமாதிரி zig-zag முறையில் படையை நடத்திச்சென்றார்
இவ்வாறு செய்யும்போது சில தீவுகள் கைப்பற்றப்பட்டன. வேறு சில தீவுகளில்
இருந்த ஜப்பானியர் தனிமைப் படுத்தப்பட்டனர்.