From ramaninaidu@... Thu Dec 27 08:27:15 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 16:27:15 -0000
Received: (qmail 40031 invoked from network); 27 Dec 2001 16:27:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 16:27:14 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 16:27:14 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.138) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 27 Dec 2001 16:27:12 -0000
Message-ID: <000801c18ef3$b1ed4a80$8aeac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppavai 13 tamil
Date: Thu, 27 Dec 2001 20:43:02 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14292

திருப்பாவை - நாள் பதின்மூன்று - பாடல் பதின்மூன்று


புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளியெழந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிர்ந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையின் பதின்மூன்றாவது பாடல் முந்தைய பாடலின் தொனியிலேயே தொடர்கிறது.

கன்னியர் பாவை நோன்பிருக்கக் களத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். பகாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் புகழ்
பாடுகிறார்கள். கொக்கைப் போலத் தோன்றியவன் பகாசுரன். கம்சன் கண்ணனைக் கொல்ல அனுப்பி வைத்த
அரக்கன். யமுனை நதிக்கரையில் பால கிருஷ்ணனை முழுங்கிவிட்டவன். கொக்கின் வயிற்றிலிருந்து தீயாகக்
கிருஷ்ணன் தகிக்க தன் அலகால் தன் வயிற்றைக் கொக்கு கொத்த முயல அந்த அலகைப் பற்றிப் பிளந்து
கொக்கைக் கொன்றுவிட்டான் கிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியைத்தான் புள்ளின் வாய்க் கீண்டான் என்ற தொடர்
குறிக்கிறது.

பாடலில் குறித்த இரண்டாவது நிகழ்ச்சி ராவணனைப் பற்றியது. ராம ராவண யுத்தத்தில் ராவணனை மட்டும்
ராமன் வதம் செய்யவில்லை. அசுரர் குலம் முழுக்க மறைந்துவிட்டது. அதனால்தான் அசுரர் குலத்தை வேரோடு
அழித்தவன் என்ற பொருளில் கிள்ளிக் களைந்தான் என்ற தொடரைக் காண்கிறோம்.

இப்படி கிருஷ்ண ராம அவதாரங்களைப் புகழ்ந்து பாவையர் பாடுகிறார்கள். மேலும் விடியலைக் குறிக்குமாறு
அமைகிறது பாடல்.

இறை உணர்வுக்கான நித்திய தாகத்தோடு இருப்பவர்கள் பாவையர். எனவே விடியும் முன்பிருந்தே இறைவன்
புகழைப் பாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். எனவே அவர்கள் ஒன்று சேர்ந்து இருத்தல் மட்டுமே
விடிந்துவிட்டதற்கு அடையளமாக எடுத்துக் கொள்ள முடியாது. விடியலுக்கான வேறு அடையாளங்களைச்
சொல்லியே இன்னும் உறங்கிக் கிடப்பவளுக்கு விடிந்துவிட்டதை உணர்த்த வேண்டும் என்பது போல பாடல்
தொடர்கிறது.

வெள்ளி முளைத்துவிட்டது. வியாழம் உறங்கிவிட்டது என்கிறார்கள். சுக்கிரன் எழவும் குரு மறையவும் விடியல்
வந்துதான் விட்டது என்கிறார்கள். அப்படியும் இவர்கள் தமது உற்சாகத்தின் மேலீட்டால் கோள்களைத் தவறாகப்
பார்த்துப் புரிந்திருக்கலாம் அல்லவா? எனவே மேலும் விடியலுக்கான அடையாளங்களைப் பட்டியலிடுகிறார்கள்.
பறவைகள் எழுந்து எங்கும் குரல் கொடுக்கின்றன. சரிதான், மாந்தர் பறவைகளிடமிருந்துதான் நேரத்தைத்
தெரிந்து கொள்ள வேண்டுமா என்று உள்ளிருக்கும் பாவை நினைத்துக் கொள்ளலாம்தான். இத்தனை சொல்லியும்
எழுந்து வரவில்லையே எனும்போது என்ன செய்வது?

அவளைப் பாராட்டிப் பேசினாலாவது வந்து சேர மாட்டாளா? அதனாலேயே அவளைப் போதரிக் கண்ணினாய்
என்கிறார்கள். அருமையான விவரிப்பு. செவ்வரி ஓடிய கண்கள். அழகிய கண்கள் மட்டுமல்ல. உணர்வின்
முகிழ்வாய்த் தெரியும் கண்கள்.

இதையே அரி என்பதற்கு மான் என்றும் போது என்பதற்குத் திரியும் என்றும் பொருள் கொண்டு துள்ளித் திரியும்
மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவள் என்றும் பொருள் காணலாம்.

மூன்றாவதாக போது என்பதற்கு மலர் என்றும் அரி என்பதற்கு மான் என்றும் பொருள் கொண்டு பாவையின் கண்கள்
குவளை மலர்களைப் போலும் மானின் விழிகளைப் போலும் அழகாக இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.

நான்காவது காட்சி இன்னமும் சிறப்பானது. போது என்பதற்கு மலர் என்றும் அரி என்பதற்கு வண்டு என்றும் பொருள்
கொண்டு மலரில் கிடக்கும் வண்டைப் போலக் கண்மணி என்றும் பொருள் கொண்டு காட்சியை மனக்கண்ணுக்குக்
கொண்டு வந்து பாருங்கள்.

இன்னமும் சொல்லலாம் பாருங்களேன். போது என்பதற்கு மலர் என்றும் அரி என்பதற்குப் போட்டி என்றும் பொருள்
கொண்டு அழகில் மலருக்குப் போட்டியாகும் கண்கள் என்றும் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பாவை நோன்புக்காக நீராடலைச் சாதாரண நீராடலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பக்தி எனும் நீரில்
முங்கி விடுதல் என்ற பொருளில் குள்ளக் குளிர்ந்து நீராடல் என்கிறார். மார்கழி மாதத்துக் குளிரில்
கிணற்றிலோ குளத்திலோ நீராடியவருக்கு இந்தத் தொடரின் அருமை நன்கு தெரியும். நதியில் நீராடுவது
வேறு. நதி நீர் ஒரே மாதிரிக் குளிர்ந்து இருப்பதால் குளிர்காலத்தில் நதியில் நீராடுவது என்பது
அவ்வளவாகச் சுகமான அனுபவம் அல்ல. ஆனால் குளத்து நீர் அல்லது கிணற்று நீரின் சுகமே வேறு. குளத்தில்
மேற்பரப்பு நீர் குளிர்ந்திருக்க கீழே வெது வெதுப்பாக இருக்கும். கிணற்றிலோ நீர் முழுக்க வெது
வெதுப்பாக இருக்கும். எனவே குளிர்ந்த உடல் வெது வெதுப்பான நீரில் முழுகிக் குளிக்கும் சுகத்தை
அனுபவித்தவர்கள் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். கிணற்று நீர்க் குளியல் கிளுகிளுப்பை ஊட்டும் என்றால்
குளத்து நீர்க் குளியல் புத்துணர்வைத் தருவதாக இருக்கும்.

இந்தப் பாடலில் இன்னுமொரு வார்த்தையும் சிறப்பாகத் தெரிகிறது. கள்ளம் என்ற வார்த்தையே அது. இறை
அனுபவத்தைத் தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு பிறரைத் தவிர்த்துவிடுகிறாள் என்று பொருள் கொண்டு
பார்க்கும் வகையில் அமைகிறது இந்த வார்த்தை. அப்படிப் பார்த்தால் துணையாக இருந்து நடத்திச் செல்ல
வேண்டிய குருவாக அவளும் ஆன்ம வளர்ச்சியில் வெவ்வேறு நிலைகளில் இவர்களுமாக இருப்பதாகக் கொண்டு
பார்க்கலாம். எனவேதான் இவர்கள் உன் கள்ளத்தைத் தவிர்த்து எங்களையும் உன்னோடு இறை அனுபவத்துக்கு இட்டுச்
செல்ல மாட்டாயோ? என்று விண்ணப்பம் செய்வதாக அமைகிறது. கள்ளம் என்பது உறங்குவது போலச் செய்யும்
பாசாங்காகிறது.

சம்பிரதாய விளக்கம் இந்தப் பாடலின் நாயகியைத் தொண்டரடிப் பொடியாழ்வாராகக் காண்கிறது. போதரிக்
கண்ணினாய் என்பதற்கு இன்னுமொரு பொருள் பாருங்களேன். பூக்களின் மேல் வைத்த கண்ணினாய். தொண்டரடிப்
பொடியாழ்வார் திருவரங்கத்தானுக்கு மலர்மாலை கட்டிக் கொடுக்கும் பணியில் நாட்களைக் கழித்தவர்.
எனவே இறைவனுக்காகச் சிறந்த மலர்களையே தேடித் தேடி எடுக்கும் கண்கள் என்று பொருள் கொண்டால் இந்நாயகி
தொண்டரடிப் பொடியாழ்வாராவது தெளிவாகப் புரிகிறது. பாவை என்ற சொல்லுக்குச் செதுக்கி வைத்த சிலை
என்று பொருள் கொண்டால் திருத்தமான வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். இது இறைவனுக்குத் தன்னை
அர்ப்பணித்திருப்பது, கடப்பாடு பூண்டிருப்பது என்று பொருள்படுமானால் தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு இப்பொருள்
மிகவும் பொருத்தமாக அமைகிறது. எவ்வாறெனில் அவர் திருவரங்கரத்துப் பெருமானை அல்லது நூற்றெட்டுத்
திருப்பதிகளுள் இருக்கும் வேறு எந்தப் பெருமானையும் தம் பாடலில் பாடவில்லை என்பதாலேயே என்க.

கள்ளம் என்ற வார்த்தையும் தொண்டரடிப் பொடியாழ்வாரோடு தொடர்புடையது. தன் கள்ளத்தை அவரே தன்
பாடலில் பாடி வைத்துள்ளார். தாசி ஒருத்தியின் மேல் வைத்த மையலால் திருடன் என்ற பெயர் பெற்றுக்
கடைசியில் இறைவனால் திருத்தப்பட்டு வந்தவர் என்பதால் தம்மை அவர் சூதனாகிக் கள்வனாகி என்று
குறிப்பிட்டுக் கொள்வார். மேலும் கள்ளமே காதல் செய்து என்றும் எழுதிப் போகிறார்.

தொடர்புடைய இன்னுமொரு தகவல் தொண்டரடிப் பொடியாழ்வார் மார்கழியில் பிறந்தவர் என்பது.

இப்படியாக விடியலுக்கான அடையாளங்களுக்குப் பட்டியலிடுவது போல அமைந்த பதின்மூன்றாவது பாடல் மிகவும்
பொருள் பொதிந்ததாகவும் சொற்சுவை கூடப் பெற்றதாகவும் அமைந்திருப்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க
முடியாது என்க.




_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com