From ramaninaidu@... Thu Dec 27 08:27:49 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 16:27:49 -0000
Received: (qmail 59435 invoked from network); 27 Dec 2001 16:27:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 16:27:49 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 16:27:49 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.138) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 27 Dec 2001 16:27:46 -0000
Message-ID: <000a01c18ef3$c5feece0$8aeac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruvempavai 13 tamil
Date: Thu, 27 Dec 2001 20:52:41 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14294
திருவெம்பாவை - நாள் பதின்மூன்று - பாடல் பதின்மூன்று
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம் கோமானும் போன்று இசைந்த
பொங்கும் மடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோரெம்பாவாய்.
திருவெம்பாவையின் பதின்மூன்றாவது பாடல் சொல் நயமும் பொருள் நயமும் மிகக் கொண்ட பாடல்.
குறிப்பாக இந்தப்பாடலின் சிலேடை நயம் மிகச் சிறப்பு மிக்கதாகிறது.
சிவன் சூடிக் கொள்வது குவளை மலரும் செந்தாமரையும். இறைவனைச் சுற்றியிருப்பது பறவைக் கூட்டம். கழுத்தில்
சுற்றிக் கிடப்பது அரவம். அவனைத் தேடி வருகிறவர்கள் தம் மன அழுக்கைக் கழுவிக்கொள்ள விழைகிறவர்.
குவளை மலரின் நீலநிறம் இறைவியையும் தாமரையின் செந்நிறம் இறைவனையும் குறிப்பதையும் காணலாம்.
இதை இப்படிப் பாருங்கள். குளத்தில் குவளை மலர்களும் தாமரையும் உண்டு. குளத்தில் பறவைக் கூட்டம் கூடும்.
பின்னிக் கிடக்கும் பாம்புகளும் உண்டு. குளத்தில் நீராடி அழுக்கைக் கழுவிக் கொள்ள வருகிறவர்களும் உண்டு.
இப்படியும் பாருங்கள். குவளை செந்தாமரை மலர் போன்ற கண்களோடும் அங்கமாகிய கைகளில் வளைகள் பல
பூண்டும் பின்னித் தொடர்ந்து எழுகின்ற சத்தத்தோடும் பாவையர் குளம் சேர்கிறார்கள். பின்னும் அரவம் என்பதை
எல்லா அரவங்களுக்கும் மூலமாகிய பிரணவம் என்றும் பார்க்கலாமே. எனவே ஓம் என்று பாவையர் முழங்குகிறார்கள்
என்க.
இப்படியாக மூன்று விதமாகப் பொருள் கொள்ளத் தக்க வகையில் அமைந்தவை பாடலின் முதலிரண்டு அடிகள்.
அம்மையப்பனாக இருக்கும் இறைவன் அல்லது அம்மையும் அப்பனும் ஒத்து இசைந்திருப்பதைப் போன்ற குளம் என்று
பொருள்படும் வகையில் அமைந்திருப்பது நான்காம் அடி.
நீரில் உடலைக் கழுவிக் கொள்வதைப் போல அருட்புனலில் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைக் கழுவிக்
கொள்ளலாம் என்கிறார்கள்.
அத்தகைய குளத்தில் பாய்ந்து மீண்டும் பாய்ந்து நமது வளைகள் ஒலிக்க பாதச்சிலம்புகள் அவற்றோடு கலந்து
ஒலிக்க மனப்பூரிப்பால் உடல் பூரிப்பாகக் கொங்கைகள் பூரிக்க முழுகி எழும் போது நீர் பொங்க நாம்
நீராடுவோம் என்கிறார்கள்.
பூம்புனலில் தோய்ந்து நீராடுவதைப் போல அருட்புனலில் தோய்வோம் என்கிறார்கள் என்க.
பொய்கையே அம்மையப்பர் கோலமாவது விந்தை. கவிதையின் மந்திர ஜாலம்.
இறைவியோடு இணைந்த இறைவனே வேண்டுவோர்க்கு வேண்டுவன தருகிறவன். பற்றிலார்க்குக் கூட வீடு பேறு
அருளும் பரமயோகி பரமசிவன். அதனால்தான் இறைவனின் திருமணக் கோலத்தை மணிவாசகர் இப்படிச்
சொல்லிப் போகிறார்.
சுற்றும்நான் மறைகள் ஆர்ப்பத் தூரியம் சங்கம் ஏங்கக்
கற்றநான் முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்தவாற்றால்
முற்றமங் கலநாண் சாத்தி முழுதுல கீன்றாள் செங்கை
பற்றினன் பற்றிலார்க்கே வீடருள் பரம யோகி.
மாதொரு பாகனாரின் உருவக் குறிப்பைக் கூறும் இன்னொரு பாடல்.
தென்பா லுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும் பித்தன் காணேடி
பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.
உயிரினம் தழைப்பதற்காகவே இறைவனும் இறைவியும் என்றான உருவம் பெற்றது என்பது குறிப்பு. இதையே சங்க
நூலொன்று எப்படிக் கூறுகிறது என்று பாருங்கள்.
நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவனது இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்ந்தன முறையே. (ஐங்குறுநூறு)
இப்படியாக திருவெம்பாவையின் பதின்மூன்றாவது பாடல் சொல் பொருள் சுவையோடு அமைந்திருக்கிறது.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com