From jaybee@... Fri Dec 28 06:37:33 2001
Return-Path:
Received: (qmail 36908 invoked from network); 28 Dec 2001 14:37:33 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 14:37:33 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 14:37:33 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.97.83] by n13.groups.yahoo.com with NNFMP; 28 Dec 2001 14:26:39 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Dec 2001 14:37:30 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Dec 2001 14:37:04 -0000
Received: (qmail 21697 invoked from network); 28 Dec 2001 14:37:03 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 14:37:03 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 14:37:03 -0000
Received: from user (sp-103-207.tm.net.my [210.186.103.207]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP20078W5XO5Y@...> for agathiyar@yahoogroups.com; Fri, 28 Dec 2001 22:37:02 +0800 (SGT)
Date: Fri, 28 Dec 2001 22:40:16 +0800
Subject: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: <3.0.3.32.20011207215057.0070fd70@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011228224016.00729f30@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14304

At 09:50 PM 12/7/01 +0800, you wrote:
>
>அன்பர்களே,
>
> இது ஒரு உண்மைக் கதை. என் வாழ்க்கையுடன் நெருக்கமாகச்
>சம்பந்தப்பட்டது. வாழ்க்கையின் திசையை மாற்றிவிட்டது.
> இன்று டிசம்பர் 7-ஆம் தேதி.
> சரியாக அறுபதாண்டுகளுக்கு முன்னர் 7-12-1941-இல்
>ஜப்பானியப் பேரரசு, மலாயாத் தீபகற்பத்தின்மீது படையெடுத்தது.

ஜப்பானியர் சரணுக்குப் பின்னர் பலநாட்கள் தென்கிழக்காசியாவில்
anarchy - அராஜகம் நிலவியது. அந்தந்த நாடுகளில் பல விடுதலை
இயக்கங்களும் படைக்குழுக்களும் தங்களுக்குள் போரிட்டு, நாடுகளை
அவரவர் வசம் கைப்பற்றி வைத்துக்கொள்ள முயன்றனர்.
மலாயாவில் சீனர்கள், ஜப்பானியரால் மிகவும் அடக்குமுறைக்கு
ஆளாக்கப்பட்டிருந்தனர். அவர்களில் கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் தீவிரமாகக்
களையெடுக்கப்பட்டனர். ஆகவே அவர்கள் தலைமறைவாக ஜப்பானியரை
எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுடன் பிரிட்டிஷ் ராணுவ
ரகசியப் பிரிவினர் தொடர்புகொண்டு, ஆயுதங்கள் தளவாடங்கள்
முதலியவற்றைக் கொடுத்து, வலுவான தலைமறைவுப் படை இயங்க
உதவினர். Malayan People's Anti-Japanese Army(MPAJA) என்று
அது இயங்கியது. ஜப்பானியரின் சரணுக்குப் பின்னர் மலாயாவின்
ஆதிக்கத்துக்கு அவர்களும் போட்டியிட்டனர். ஜப்பானியரின் ஆயுதத்
தளவாடங்களுக்காகவும் அவர்களின் போட்டியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் அந்த இரண்டாவது லூட்டி நிகழ்ந்தது.
இதன்மூலம் பணக்காரர்கள் ஆகியவர்கள் பலர்.
ஆனால் லூட்டியடித்த எல்லாருக்கும் அந்தக்கொடுப்பினை
இருக்கவில்லை.

பினாங்கில் எங்கள் வீட்டில் சுத்திகரிப்புச்செய்யும் வேலையில்
ராமசாமிக்கிழவனார் என்பவர் ஈடுபட்டிருந்தார். செல்லமாக அவரை
'ராமசாமிப் பெரியார்' என்று சொல்வோம். ரகசியமாகத்தான் அப்படி
அழைப்போம். ஏனெனில் தந்தையாரின் குருவின் பெயரை அப்படியெல்லாம்
நையாண்டியாக உபயோகிப்பதை தந்தையார் விரும்பமாட்டாரல்லவா?
ராமசாமிக்கிழவனார் அந்த தெருவில் இருந்த பல வீடுகளுக்கும் சென்று
இந்த வேலையைச் செய்வார்.
எங்கள் வீட்டில் முற்றம் தேய்ப்பது, கழிவறை சுத்தம் செய்வது
எல்லாவற்றையும் நாங்களேதான் செய்துகொள்வோம். அது ஒரு
shop-house. கடையில் வேலைபார்ப்பவர்களும் அங்கேயேதான்
தங்கியிருந்தார்கள். சாப்பாடு, சவரக்கூலி, சலவைக்கூலி,
சம்பளம், சாடிக்கை எல்லாமே தமிழகத்திலிருந்து வரும்போதே
பேசிக்கொண்டுதான் வருவார்கள். ஆகவேஎங்கள் வீடு/கடையில்
ஆட்கள் நிறைய இருந்தனர். பெரும்பாலும் உறவினர்களும்
ஊர்க்காரார்களும்தான். அதனால் அந்த வேலைக்கு ஆள்
தேவையில்லாமல்தானிருந்தது. ஆனால் என் தந்தையார் கொஞ்சம்
வித்தியாசமானவர். அவர் ஒரு வினோதக்கலவை. பிறகு சொல்கிறேன்.
யாருமற்ற அனாதையாகிய ஒரு தமிழ்க்கிழவர் தமது வயிற்றைக்
கழுவிக்கொள்ளவேண்டி இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதால், வீட்டின்
சமையலறை முற்றத்தையும், நடுவீட்டு முற்றத்தையும் மட்டும் கழுவிவிட்டு,
சமையலறைக் குப்பைக்கூடையை வெளியில், வாசலுக்கு அருகிலிருந்த
முனிசிப்பல் குப்பைத்தொட்டியில் கொட்டுவது என்ற வேலையை மட்டுமே
அவருக்குக் கொடுத்திருந்தார்கள்.
'வயிற்றைக் கழுவிக்கொள்ள' என்று சொன்னேனல்லவா?
உண்மையான வார்த்தை. நிறையக் கள்ளை ஊற்றி வயிற்றைக் கழுவிக்
கொண்டிருப்பார். அவர் சாதாரணமாக இரு குரல்களில் பேசுவார். அதில்
ஒன்று எம் ஆர் ராதா போலிருக்கும். மாற்றி மாற்றிப்பேசுவார். கள் அதிகமாக
உட்சென்றிருந்தால் குரலின் கரகரப்பு அதிகமாகியிருக்கும்.

அவர் ஒருமுறை தம்முடைய கதையில் கொஞ்சம் சொன்னார்.
"நானு ரொம்ப தெகிரியமான ஆளுங்க. சுத்தக் காலாடியாத்
திரிஞ்சவனுங்க. செப்பாங்காரனுஹ தோத்துப்போனப்ப நானும்
%@&#@மூணாம் வீட்டுச் சீனப்பயலுமா சேந்து வீடுஹள ஒடச்சு
கொள்ளையடிச்சம். அப்பல்லாம் அந்த &#$@%மூணாம்வீடு சீனப்பய,
&@&%$ பண்டிக்கு தீனி போட்டுக்கிட்டிருந்தானுங்க. எங்கெல்லாமோ
தோம்பு ஒண்ண எடுத்துக்கிட்டுப் போயி, கக்கூசுத் தொட்டியக்
கவுத்துக்கொட்டி எடுத்துக்கிட்டுப்போயி பண்டிக்குப் போட்ட
&%$@#பய மவனுங்க.
அன்னக்கி நெறய வீட்டுல ஒடச்சி எடுத்து, மூணு கூடை
நெறயா நகைநட்டு, சாமாஞ்சட்டுமுட்டுன்னுசேத்து இழுத்துக்கிட்டு
வந்தமுங்க. அப்பப்பாத்து @$#^% ஒண்ணுக்கு வந்திருச்சு.
@&%$சீனப்பயல கூடயப் பாத்துக்கடான்னு சொல்லிட்டு,
அந்தாண்டப் பக்கமாப்போயி ஒண்ணுக்கடிச்சிட்டு வந்தேனுங்க.
அங்கதான் பாருங்க, இந்த &%$# சீனப்பய ஏமாத்திப்பிட்டான்ங்க.
அப்படியே அல்லாத்தையும் அப்பிக்கிட்டு எங்கியோ ஒளிச்சி வச்சுட்டு,
மூணு நச்சேத்திரக்காரப் பயலுஹ பறிச்சிக்கிட்டுப் போயிட்டதா
சொன்னானுங்க. அப்ப நானு அப்பிடியே நம்பிட்டேனுங்க.
(மூன்று நட்சத்திரம் - கம்யூனிஸ்ட் தலைமறைவுப்படை)
அப்பால பாத்தாக்கா.... இப்ப நம்ம வூட்டுக்கு மூணாங்கடய
வெலக்கி அப்பிடியே வாங்கி, அங்க இப்ப இருக்குற கோப்பிக் கடய
வச்சுக்கிட்டானுங்க.
அப்ப ஏமாந்ததுதாங்க. இப்ப கக்கூசு கழுவிக்கிட்டு@3&%......"

எல்லாவற்றிற்கும் ஒரு சுழி வேண்டுமல்லவா?
இணையத்திலும்தான்.

அன்புடன்

ஜெயபாரதி

========================================