From ramaninaidu@... Fri Dec 28 15:12:51 2001
Return-Path: Received: (qmail 35914 invoked from network); 28 Dec 2001 23:12:50 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 23:12:50 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 23:12:50 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.126] by n33.groups.yahoo.com with NNFMP; 28 Dec 2001 23:12:49 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Dec 2001 23:12:48 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Dec 2001 16:01:04 -0000
Received: (qmail 62839 invoked from network); 28 Dec 2001 16:01:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 16:01:04 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 16:01:04 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.73) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 28 Dec 2001 16:01:00 -0000
Message-ID: <00a801c18fb9$2d38bf60$49eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppavai 14 tamil
Date: Fri, 28 Dec 2001 20:59:09 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14305
திருப்பாவை - நாள் பதினான்கு - பாடல் பதினான்கு
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
பாவை நோன்புக்கென நீராடக் குளத்துக்குச் செல்லும் வழியில் தம்மோடு வந்து சேர்ந்து கொள்ளப் பாவை
ஒருத்தியைப் பிற பாவையர் அழைக்கும் பாடல் வரிசையில் கடைசிப் பாடல் திருப்பாவையின் பதினான்காவது
பாடல்.
பதினைந்தாம் பாடலில் உள்ளே இருப்பவளுக்கும் வெளியே இருப்பவருக்கும் இடையே பரிமாறிக் கொள்ளும்
பேச்சைக் காண்கிறோம். அப்பாடலின் இறுதியில் உள்ளே இருப்பவள் இவர்களோடு வந்து சேர்ந்து கொள்ள
எல்லோரும் நீராடிக் கோயிலுக்குச் செல்வதைப் பதினாறாம் பாடல் தொடங்கிப் பார்க்கிறோம்.
பதினான்காம் பாடலின் ஆரம்பத்தில் விடியலுக்கான அடையாளங்களாக இன்னும் சில சொல்லப்படுகின்றன.
சிவந்த செங்கழுநீர் மலர்கள் கதிரவன் எழும்போது மலர்கின்றன. அல்லி என்னும் ஆம்பல் மலர்கள்
கூம்புகின்றன. இந்த நிகழ்வை விளக்க ஆண்டாள் பயன்படுத்தும் வார்த்தைகள் குறிப்பிடத் தக்கவையாக
அமைந்துள்ளன. நெகிழ்ந்து எனும் சொல் வாய் என்ற சொல்லோடு பயின்று வரும்போது உணர்வின் மீதூறலில்
உதடுகள் துடிப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கூடலை எதிர்பார்த்து உதடுகள் மெல்லப் பிளப்பதைக்
காட்சியாக்குகிறது. கடவுளோடு இணைந்துவிடுவதில் உள்ள இன்பம் சிறப்பாக வெளிப்படுகிறது.
அடுத்த வார்த்தை கூம்பின என்பதாகும். இந்த வார்த்தையும் தன்னளவில் குறிப்புப் பொருளை உணர்த்துகிறது.
கூடல் கைகூடாத போது உள்ளம் சாம்பிப் போய் முகம் கூம்பிவிடுமே. இறை அனுபவம் இப்படியாக ஒரே
சமயத்தில் கூடுதலின் இன்பத்தையும் இன்னும் போய் அவனிடம் போய்ச் சேர்ந்தாகவில்லையே என்ற ஏக்கத்தையும்
ஒரு சேரக் கொணர்வது என்பதைக் குறிப்பாக உணர்த்துபவை இப்பாடலின் முதலிரண்டு அடிகள்.
பாடலில் இரண்டாவதாக விவரிக்கப்படும் நிகழ்ச்சி கோயிற் பணியாளர் அன்றாடக் கைங்கரியத்துக்காகக்
கோயிலைத் திறக்கப் போய்க் கொண்டிருப்பதாகும். குறிப்புப் பொருள் காண வேண்டுமானால் இறைவனை அடைய
வேண்டும் என்ற அவா பக்தர்கள் மனதில் தோன்றியவுடனே கடவுளின் உள்ளம் அவர்களை ஏற்றுக் கொள்ளத்
தயாராகத் திறந்து கொள்கிறது என்கிறது என்பதாம்.
இத்தனைக்கும் வீட்டினுள் இருந்தவள் எழுந்து வருவதாகத் தெரியவில்லை. தோழியர் மனம் துவள்கிறது. தானே முன்
வந்து இவர்களை எழுப்பிப் பாவை நோன்புக்கு அழைத்துப் போவதாக வாக்களித்து விட்டு இப்போது இவர்கள் வந்து
அழைத்தும் வந்து சேராதிருப்பது தகுமோ என்று சொல்கிறார்கள். வாக்கை மீறுதல் நாணம் கெட்டவர்களுக்கே
உரிய செயல் என்று கடுமையாகக் கூறுவதைப் போல நாணாதாய் என்கிறார்கள். என்றாலும் தங்கள் வார்த்தைகளை
அவள் குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே போல் நாவுடையாய் என்று சொல்கிறார்கள்.
கடவுளின் இயல்பை விவரிக்கும் போது ஒரு முரண்தொடை அழகைக் காண்கிறோம். சங்கோடு சக்கரமும் ஏந்திய
தடக்கையன் எனும் போது பகைவர் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தும் வலிமையைச் சிறப்பிக்கிறார்கள்.
என்றாலும் உடனே பங்கயக் கண்ணான் என்று சொல்லி தாமரையைப் போல மென்மையும் அருமையும் உடையவன் என்றும்
சொல்லிப் பாடுகிறார்கள். சங்கும் சக்கரமும் நாராயணனுக்கு ஏற்புடையதாகக் கூறப்படுபவை.
கிருஷ்ணாவதாரத்தோடு தொடர்புபடுத்தி சங்கையும் சக்கரத்தையும் குறிப்பது ஆயர்கள் நாராயணனைக்
கிருஷ்ணனாகத் தம்மோடு ஒருவராகப் பெற்ற பெரும் பேறுடையவர்கள் என்று குறிப்பதாக அமைகிறது.
இவ்வாறாக இப்பாடல் முழுக்க முரண்தொடை அழகைக் காண்கிறோம். மலரும் மற்றும் கூம்பும் மலர்கள், மங்கிய
காவி நிறை உடையும் ஒளிரும் வெண்பல்லும், நாணாதாய் என்ற குற்றச்சாட்டும் நாவுடையாய் என்ற பாராட்டும்,
வலிதான படைகளும் கருணை பொங்கும் விழிகளும் என்று முரண்பட்டவற்றைச் சுட்டிக் காட்டி இப்பாடல் ஒரு
பொலிவைப் பெறுகிறது.
மேலும் பாடல் முழுக்க நிறங்களின் ஜாலத்தைப் பாருங்களேன். சிவப்பும் வெள்ளையும் அடுத்தடுத்து வருவதைப்
பாருங்கள். சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் - காவி உடை, வெண்பற்கள் - வெள்ளைச் சங்கு, தீயெனச்
சிவந்து ஒளிரும் சக்கரம் என்று இப்படி வெள்ளையும் சிவப்பும் ஒன்றுக்கொன்று இட்டுநிரப்பிப் பாடல் முழுவதும்
வரக் கடைசியில் இரண்டும் இணைவதைப் பாருங்கள். வெண்தாமரையில் செவ்வரிகள் போலக் கண்கள். மேலும்
விரித்தால் வெண்மை தன் பரிசுத்தத்தால் இறைவனைக் குறித்தால் சிவப்பு தாயாரின் நிறத்தைக் குறிக்கிறது.
வழக்கமாக கார்மேக வண்ணன் என்று இறைவனைப் பாடும் வைஷ்ணவ இலக்கியத்தில் இப்பாடல் ஒரு விதிவிலக்கு
என்று கூடச் சொல்லலாம்.
சம்பிரதாயமான விளக்கங்கள் இந்தப் பாடலில் தோன்றும் பாவையைத் திருப்பாணாழ்வாரோடு ஒப்பிட்டுப்
பேசும். நாலாயிரம் பாடல்களைக் கொண்ட பிரபந்தத் தொகுப்பில் பத்தே பாடல்களைப் பாடி ஆழ்வார்களோடு
ஒருவராக ஏற்றுக் கொள்ளும் சிறப்புப் பெற்றவர் திருப்பாணாழ்வார். அவருடைய வரலாற்றைக் காண்போமா?
தேவ மாது ஒருத்திக்கும் பிராமணர் ஒருவருக்கும் பிறந்தவர் திருப்பாணாழ்வார். தன் மகவைத் தன்னோடு
தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாதென்பதால் பூமியிலேயே அத்தேவமாது விட்டுப் போக மக்களில்லாத
பாணர் குலத்துத் தம்பதியர் அக்குழந்தையை எடுத்து வளர்த்தார்கள். தாம் வளர்ந்த பாணர் குலத்து
லட்சணத்துக்கேற்ப இசையில் வல்லவராகி இறைவனைப் பாடும்போது தன்னை மறந்து நிலை அடைவாராம்
திருப்பாணாழ்வார்.
பாணர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய முடியாமல் காவிரிக் கரையில் உள்ளம் உருகப்
பாடி நிற்பாராம்.
லோகசங்கரர் என்பவர் கோயில் கைங்கரியம் செய்யும் ஒரு பிராம்மணர். அவர் மூர்த்தியை நீராட்டத் தினமும்
காவிரியிலிருந்து நீர் கொண்டு போகும் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஒரு நாள் வைகறை நேரத்தில் நீர்
கொண்டு வந்த லோகசங்கரர் வழியில் நின்று உள்ளம் உருக மெய்மறந்து பாடிக் கொண்டிருந்த
திருப்பாணாழ்வாரைக் காண்கிறார். வழி விடச் சொல்லிக் கேட்டும் மெய்மறந்த நிலையில் அசைவில்லாது
திருப்பாணாழ்வார் பாடிக் கொண்டேயிருக்கவும் கீழ்க்குலத்தோரைத் தீண்டாத பிராம்மணராகிய லோகசங்கரர்
கற்களை எடுத்து வீசி அவர் கவனத்தைக் கலைத்து வழியுண்டாக்க முனைந்தார். என்றாலும் திருப்பாணாழ்வார்
நகரும் வழி தென்படாததைக் கண்டு வேறு வழியாகத் தம் காரியத்தைக் கவனிக்கப் பிராம்மணர் சென்றனராம்.
ஆயின் கோயிலைச் சென்றடைந்த அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வீசிய கல்லின்
காயத்தால் குருதி வழிவதைப் போல மூர்த்தியின் நெற்றியில் இருந்து குருதி சொட்டக் கண்ட அவர்கள்
திகைத்து நின்றார்கள். இறைவன் லோகசங்கரரிடம் திருப்பாணாழ்வாரைத் தம் தோள்களில் சுமந்து
கோயிலுக்குள் கொண்டுவரப் பணித்தார். அப்படியே திருப்பாணாழ்வாரைத் தம் தோள்களில் தாங்கி
லோகசங்கரர் கோயிலுக்குள் கொணர்ந்தார்.
மூர்த்தியின் அழகுத் திருக்கோலத்தைக் கண்ட திருப்பாணாழ்வார் அமலனாதிப்பிரான் என்று தொடங்கும் பத்துப்
பாடல்களைப் பாடினார். அவையே பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பத்துப் பாடல்களாகும்.
வீட்டினுள் இருக்கும் பாவையை நங்காய் என்று விளிக்கிறார்கள். குணவதி என்று பொருள் கொண்டு பார்த்தால்
பிராம்மணரின் தோள் மேல் ஏறிக் கோயிலுக்குள் செல்லத் துணியக் கூடியவர் அல்ல திருப்பாணாழ்வார்.
என்றாலும் இறைவனின் கட்டளைக்கேற்ப அதற்கும் தம்மை ஒப்புக் கொடுத்த பெருமை மிக்கவர் அவர். அதைக்
குறித்துத் தமக்கு எந்தப் பெருமையும் இல்லை என்பதை எப்படிக் குறிப்பிடுகிறார் பாருங்கள்.
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்.
நாணாதாய் என்பதற்கு வேறொரு வகையில் விளக்கம் சொன்னால் கர்வம் இல்லாதவள் என்று பொருள் கொள்ளலாம்.
எனவே திருப்பாணாழ்வார் கோயிலுக்குள் பிராம்மணர் தூக்கிச் சென்றதால் கர்வப்படாதவர் என்று பொருள்
கொள்ள வழி பிறக்கிறது. நாவுடையாய் என்ற சொல் திருப்பாணாழ்வாரின் கவித்திறனைச் சுட்டுவதாகக்
கொள்ளலாம். பத்துப் பாடல்களில் வேதப் பொருள் அத்தனையும் உரைத்த பெருமை அவருடைய பாடல்களுக்கு உண்டு.
அதனால்தான் தேசிகர்
பண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின்பொருள்
என்பார்.
மேலும் திருப்பாணாழ்வார் இறைவனின் அங்க அழகைத் தம் பாடலில் சிறப்பித்துப் பேசுவதைப் பாருங்கள்.
கையார் சுரிசங்கு அனல் ஆழியர் என்றும் கரியவாகிப் புடை பரந்து மிழிந்து செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்கள் என்றும் கூறுகிறார். எனவே சரியாகவே இப்பாடல் பங்கயக் கண்ணான் என்ற கூற்றைக்
கையாள்கிறது என்க.
செங்கல் பொடிக் கூறை என்பது லோகசங்கரரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் திருப்பாணாழ்வாரின் வார்த்தைகளில் ஒரு முரண் இருப்பதையும் கவனிக்க வேண்டும். அடியார்க்கு என்னை
ஆட்படுத்த விமலன் என்கிறார். ஆனால் நடந்ததோ அடியார் ஒருவர் இவரைத் தன் தோள்களில் தூக்கிப்
போனதுதான். பாடலின் முரண் தொடையோடு இந்த முரணையும் கருத்தில் கொண்டு பார்க்கிறவருக்கு இப்பாடல்
விரிக்கின் விரிந்து கொண்டே போவது நன்கு தெரிகிறது.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com