From ramaninaidu@... Fri Dec 28 15:12:55 2001
Return-Path:
Received: (qmail 5866 invoked from network); 28 Dec 2001 23:12:55 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 23:12:55 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 23:12:54 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.126] by n33.groups.yahoo.com with NNFMP; 28 Dec 2001 23:12:54 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Dec 2001 23:12:49 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Dec 2001 16:02:42 -0000
Received: (qmail 72023 invoked from network); 28 Dec 2001 16:02:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 16:02:42 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 16:02:42 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.73) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 28 Dec 2001 16:02:40 -0000
Message-ID: <00aa01c18fb9$68611880$49eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruvempavai 14 tamil
Date: Fri, 28 Dec 2001 21:01:12 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14307

திருவெம்பாவை - நாள் பதினான்கு - பாடல் பதினான்கு

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவையின் பதின்மூன்றாம் பாடல் சொற் செறிவும் பொருட்செறிவும் நிறைந்திருந்ததைக் கண்டோம்.

உணர்வின் மீதூறல் இசையாகவும் நடனமாகவும் இணைந்து இசைந்து பொங்கிப் பாய்வது மானுடத்துக்கே
உரியதோர் இலக்கணம். இந்தப் பாடலின் சொல்லடுக்கும் பொருள் மிடுக்கும் ஓர் ஆனந்த எக்களிப்பின்
வெளிப்பாடாகிறது.

காதில் அணிந்த குழல், பூண்ட பொன் ஆபரணங்கள், மார்பில் அணிந்த மாலை, கூந்தல், மாலையைச் சூழ்ந்த
வண்டுக் கூட்டம், என்று அனைத்தும் ஆடுகின்றனவாம். ஆடலுடன் பாடலும் சேரப் பாடலுக்குப் பொருளாகத் தில்லைச்
சிற்றம்பலமும் வேதத்தின் உட்பொருளும் இறைவன் வேதத்து உட்பொருளாதலும் இறைவன் சுடர்த்திறனும், சிவனின்
கொன்றை மாலையும் அவனே ஆதியும் அந்தமுமாதலும் ஆணவ, கன்ம மலங்களை நீக்கி மானுடரைப் பேணும்
வளையணிந்த உமா தேவியின் திருவடிகளும் அமைகின்றன. இப்படிப் பாடி ஆடி நீராடுவோம் என்கிறார்கள்.

நடனத்தைப் பற்றிப் பேசும் போது பிரபஞ்சக் கூத்துக்குத் தாவும் விந்தையைக் காண்கிறோம். இறைவன் ஆடிக்
கொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பாடிச் சீதப் புனலில் இறங்கக் குளிர் தெரியாது என்கிறாள்.

ஆதியும் அந்தமுமாகிப் பிரம்மாண்டமாக நிற்கும் இறைவனின் கருணையும் அருளும் அன்னையின் அருளாக மாந்தருக்குக்
கிடைப்பதைக் கொண்டாடுகின்றன பாடலின் கடைசி மூன்று வரிகள்.

பாடலின் குறிப்பு என்னவெனில் இறைவன் புகழைப் பாடி ஆடும்போது உடலின் குளிர் மட்டுமன்றி சம்சாரத்தின்
நடுக்கங்களும் போய்விடும் என்பதாகும்.

சொல்லும் பொருளும் மனோபாவமும் ஓசையின்பமும் இப்பாடலில் ஒன்றுக் கொன்று உச்சமாக அலைமேல்
அலையெறிந்து வருவதைப் போல வருவதைக் காண்கிறோம்.

சிற்றம்பலம் ஞான வெளி. அங்கிருந்து வேதம் தோன்றுகிறது. அதிலிருந்து வேதப் பொருளாகிய மெய்யுணர்வு
வெளிப்படுகிறது. அந்த மெய்யுணர்வின் சோதியாக இறைவன் தோன்றுகிறான் என்று இப்பாடல் குறிப்பதையே
சைவ மெய்ப்பொருளியல் சூதிலாத சிற்றம்பலச் சோதி என்று குறிக்கிறது.

இந்தப் பாடலில் பொய்கையாவது அம்மையப்பன் நினைவிலே தோய்ந்த கசியவும் மாறிலா மகிழ்ச்சியில்
திளைக்கவும் காரணமான பேரின்பப் பெருக்கின் குறியீடேயாகிறது.
சேக்கிழார் தம் பாடலொன்றில் கூறுவார்,

இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லை இல் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

இந்த மாறிலா மகிழ்ச்சி மார்கழி நீராடும் மங்கையருக்கும் பொருந்தி வருகிறது. கருத்தில் கடவுளின்
கருணைப் பொய்கை. அந்தத் தோய்விலே பெற்ற இன்பத் தோய்வில் பிறந்த ஆடலும் பாடலும் பாட்டில் சிறப்புப்
பெறுகின்றன.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com