From eramurug@... Fri Dec 28 15:18:31 2001
Return-Path: Received: (qmail 12168 invoked from network); 28 Dec 2001 23:18:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 23:18:30 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 23:18:30 -0000
X-eGroups-Return: eramurug@...
Received: from [216.115.96.159] by n13.groups.yahoo.com with NNFMP; 28 Dec 2001 23:07:34 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Dec 2001 23:18:28 -0000
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Dec 2001 17:50:41 -0000
Received: (qmail 8912 invoked from network); 28 Dec 2001 17:50:41 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 28 Dec 2001 17:50:41 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Dec 2001 17:50:42 -0000
Message-ID: <20011228175042.53352.qmail@...>
Received: from [210.214.130.114] by web14809.mail.yahoo.com via HTTP; Fri, 28 Dec 2001 09:50:42 PST
Date: Fri, 28 Dec 2001 09:50:42 -0800 (PST)
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011228224016.00729f30@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-eGroups-Edited-By: jaybee@...
X-Yahoo-Message-Num: 14314
அற்புதமான உரைநடை. சரசரவென்று வாசகனைக் கையைப் பிடித்து அழைத்துக்
கொண்டு போகும் சரளமும் லாவகமும் கூடி வந்ததற்கு, சொல்லும் விஷயத்தில்
நேரடி அனுபவமும் லயிப்பும் முக்கியக் காரணங்கள். இந்த நேர்த்தி வெறும்
எழுத்துக் கலை இல்லை. ஒரு ரசானுபவத்தின் உன்னதமான வெளிப்பாடு.
ராமசாமிக் கிழவனாரின் சித்தரிப்பு, ஆர்.கே.லக்ஷ்மணோ, கோபுலுவோ
வரைந்த கோட்டுச் சித்திரம் போல், மிகக் குறைந்த சொற்களில் அந்தப்
பாட்டையாவைத் தத்ரூபமாகக் கண்முன் கொண்டு நிறுத்துகிறது.
இந்தக் கட்டுரைகள் விரைவில் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழில் இது
போன்ற பதிவுகள் ஆகக் குறைவே.
கேரள மாநிலத்திலிருந்து ஜப்பானில் குடியேறி அங்கே உணவு விடுதி
நடத்திப் புகழ் பெற்ற 'நாயர் சான்' உலகப் போர்க்கால அனுபவங்களைப்
புத்தகமாக எழுதியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
நாயர் சான் புத்தகத்தை விட ஜேய்பி-சான் புத்தகம் பல மடங்கு சிறப்பாக
இருக்கும்.
அன்புடன்,
இரா.முருகன்
பின்குறிப்பு : முத்தாய்ப்பு வைத்து முடிக்கும் அந்த இரண்டு வரிகளை ரொம்பவும்
ரசித்தேன்.
--- jaybee wrote:
> At 09:50 PM 12/7/01 +0800, you wrote:
> >
> 'வயிற்றைக் கழுவிக்கொள்ள' என்று சொன்னேனல்லவா?
> உண்மையான வார்த்தை. நிறையக் கள்ளை ஊற்றி வயிற்றைக் கழுவிக்
> கொண்டிருப்பார். அவர் சாதாரணமாக இரு குரல்களில் பேசுவார். அதில்
> ஒன்று எம் ஆர் ராதா போலிருக்கும். மாற்றி மாற்றிப்பேசுவார். கள்
> அதிகமாக
> உட்சென்றிருந்தால் குரலின் கரகரப்பு அதிகமாகியிருக்கும்.
>
>
> அப்பால பாத்தாக்கா.... இப்ப நம்ம வூட்டுக்கு மூணாங்கடய
> வெலக்கி அப்பிடியே வாங்கி, அங்க இப்ப இருக்குற கோப்பிக் கடய
> வச்சுக்கிட்டானுங்க.
> அப்ப ஏமாந்ததுதாங்க. இப்ப கக்கூசு கழுவிக்கிட்டு$3&%......"
>
> எல்லாவற்றிற்கும் ஒரு சுழி வேண்டுமல்லவா?
> இணையத்திலும்தான்.
>
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com